திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நிலக்கோட்டை.. தக்க வைப்பாரா தங்கதுரை.. தட்டி பறிப்பாரா தேன்மொழி.. அப்ப சவுந்தரபாண்டியனுக்கு?

நிலக்கோட்டை தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: நிலக்கோட்டையை நிலையாக தக்க வைத்து கொள்வது யார் என்பதில் அரசியல் கட்சிகளிடையே செம போட்டி ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் மொத்தம் 7 தொகுதிகள். அதில் நிலக்கோட்டை மட்டும் 'தனி' தொகுதி ஆகும். வறண்ட பூமிதான்!.

இருந்தாலும் அந்த மண்ணுக்கான பயிர்களை விளைவித்து காலத்தை ஓட்டுகிறார்கள் மக்கள்! எனினும் பூக்கள் அதிகம் விளையும் பகுதியாக நிலக்கோட்டை இருப்பது ஒரு பிளஸ் பாயிண்டாக இருக்கிறது. அதனால்தான் சென்ட் பேக்டரி கொண்டு வர வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கையாக வைத்தபடியே உள்ளனர். அது இன்னும் கிடப்பிலேயே உள்ளது.

அதிமுக

அதிமுக

அதுபோல வாழை ஆராய்ச்சி நிலையம் கொண்டு வர வேண்டும் என்று மக்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அதுவும் செய்துதரப்படவில்லை. இந்நிலையில், இந்த தொகுதியில் இப்போது தேர்தல் வரப்போகிறது. அதிமுக, திமுக கட்சிகள் இந்த தொகுதியில் பலமாக இருந்தாலும், போன முறை அதிமுகவே வெற்றியை தக்க வைத்து கொண்டது.

<strong>EXCLUSIVE:</strong> பரமக்குடியை கலக்கிய EXCLUSIVE: பரமக்குடியை கலக்கிய "உள்ளே வெளியே" .. அரசியல்வாதிகள் வெட்கப்பட வேண்டும் இதை பார்த்து

அன்பழகன்

அன்பழகன்

தொகுதியை பொறுத்தவரை கடந்த தேர்தலில் மொத்த வாக்குகள் 2,18,582 ஆக இருந்த நிலையில், அதிமுக வேட்பாளர் ஆர். தங்கதுரை என்பவர் 85,507 வாக்குகளை பெற்றார். அதேபோல திமுக வேட்பாளர் எம்.அன்பழன் 70,731 வாக்குகளை பெற்றார்.

தண்ணீர் பிரச்சனை

தண்ணீர் பிரச்சனை

அந்த அளவுக்கு நிலக்கோட்டைஅதிமுக செல்வாக்குடன்தான் இருந்தது. ஆனால் வெற்றிபெற்ற தங்கதுரை தினகரன் பக்கம் போய்விட்டார். இதனால்தான் தகுதிநீக்கம் செய்யப்பட்டு, நிலக்கோட்டை இடைத்தேர்தலை சந்திக்கிறது. இப்போது, முன்னாள் எம்எல்ஏ தேன்மொழி அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். திமுக சார்பில் சவுந்தரபாண்டியன் போட்டியிடுகிறார். காவிரி கூட்டு குடிநீர் திட்டம் உள்ளிட் ஒருசில திட்டங்களை செயல்படுத்தினாலும், பெரும்பாலான பிரச்சனைகளை தீர்க்கப்படவில்லை என்று ஒரு பேச்சு உள்ளது.

சவுந்தரபாண்டியன்

சவுந்தரபாண்டியன்

"கடந்த 2 ஆண்டுகளாக எந்த திட்டத்தையும் தேன்மொழி செயல்படுத்தவில்லை, ஆனால் ஓட்டு மட்டும் கேட்டு வருகிறார்" என்று திமுக வேட்பாளர் சவுந்தரபாண்டியன் குற்றஞ்சாட்டியபடியே உள்ளார். மேலும் அதிமுக அதிருப்தி வாக்குகளை குறி பாரத்து காய் நகர்த்தியும் வருகிறார் சௌந்தரபாண்டியன். அது மட்டுமில்லை, சென்ட் பேக்டரி, வாழை ஆராய்ச்சி நிலையம் என்ற மக்களின் கோரிக்கையை தனது தேர்தல் அறிக்கையில் திமுக சொல்லி உள்ளது ஏகப்பட்ட பலத்தை தொகுதியில் தந்துள்ளது.

தங்கதுரை

தங்கதுரை

அதிருப்தி வாக்குகள் ஒரு பக்கம் இருந்தாலும், அமமுக வேட்பாளராக அன்று அதிமுக சார்பில் வெற்றி பெற்ற அதே தங்கதுரைதான் களமிறக்கப்பட்டுள்ளார். அதனால் கண்டிப்பாக அதிமுக வாக்குகளை பிரியும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சுலபம் இல்லை

சுலபம் இல்லை

தீவிர வாக்கு சேகரிப்பில் திமுக, அதிமுக, அமமுக என ஓட்டு வேட்டை ஆடினாலும் முதல் இடத்திற்கு கடுமையான போட்டி இங்கு நிலவுகிறது. ஏனெனில் நிலக்கோட்டையை பொறுத்தவரையில் தொகுதியை தக்க வைத்து கொள்வது என்பது அவ்வளவு சுலபம் இல்லை என்பதையும், போராடிதான் வெற்றி பெற வேண்டும் என்பதையு இந்த 3 கட்சிகளும் நன்றாகவே உணர்ந்து வைத்துள்ளன.

பார்ப்போம்.. என்ன நடக்கிறது என்று!

English summary
There is tough fight between DMK Soundarapandian and AMMK Thangadurai in Nilakkottai By election
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X