திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"சபாஷ் குணசுந்தரி".. திண்டுக்கல் முழுக்க இதே பேச்சு.. சிறுவர்களுக்கு பாடம் நடத்திய பெண் இன்ஸ்பெக்டர்

சிறுவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார் பெண் இன்ஸ்பெக்டர் குணசுந்தரி

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: தெருவில் விளையாடி கொண்டிருந்த இரண்டு குழந்தைகளுக்கு கொரோனா வகுப்பு எடுத்துள்ளார் பெண் இன்ஸ்பெக்டர் குணசுந்தரி.. இதற்குதான் இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்தபடியே உள்ளது.

தற்போது கொரோனாவின் 2வது பரவல் தலைதூக்கி வருகிறது.. இதை தடுக்கும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.

அப்பதான் சிரித்து பேசிகொண்டே வந்தார்.. திடீரென உடம்பை துளைத்த குண்டுகள்.. அமைச்சரின் மகள் பரிதாப பலிஅப்பதான் சிரித்து பேசிகொண்டே வந்தார்.. திடீரென உடம்பை துளைத்த குண்டுகள்.. அமைச்சரின் மகள் பரிதாப பலி

தற்போது லாக்டவுன் போடப்பட்டுள்ள நிலையில், தொற்றும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு வருகின்றன.. எனினும் சிலர் இதை சீரியஸாக எடுத்து கொள்ளாமல் ரோட்டில் நடமாடி வருகின்றனர்..

கண்காணிப்பு

கண்காணிப்பு

இவர்களை கண்காணித்து, அவர்களின் வாகனங்களையும் பறிமுதல் செய்யும் வேலை நடந்து வருகிறது. அந்தவகையில், பழனியிலும் தொற்று காரணமாக கடந்த 10-ம்தேதி முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளன.. எனினும், பழனியின் புறநகர்ப் பகுதியான கிராமங்களில் பலர் மாஸ்க் போடாமல் நடமாடி கொண்டிருப்பதை அறிந்து போலீசார் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாராட்டு

பாராட்டு

அந்த வகையில், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசுந்தரி ஆய்வில் ஈடுபட்டிருந்தார்.. அப்போது, அங்குள்ள கிராமத்தில் 2 சிறுவர்கள் மாஸ்க் இல்லாமல், கொரோனா பற்றின பயமுமில்லாமல், தெருவில் விளையாடி கொண்டிருந்தனர். இதை பார்த்த இன்ஸ்பெக்டர் குணசுந்தரி, 2 சிறுவர்களையும் அழைத்தார்.. போலீஸை பார்த்ததும் 2 சிறுவர்கள் மிரண்டாலும், அவர்களிடம் அன்பாக பேச ஆரம்பித்தார் குணசுந்தரி..

விழிப்புணர்வு

விழிப்புணர்வு

கொரோனா பற்றியும், அதன் தாக்கம், பாதிப்புகள் குறித்தும் ஒவ்வொன்றாக எடுத்து சொல்லி புரிய வைத்தார்.. இப்படியெல்லாம் தெருவில் விளையாட கூடாது.. வீட்டிலேயே இருக்கணும்.. சமூக இடைவெளி பின்பற்றணும்.. மாஸ்க் போட்டுக் கொண்டே இருக்கணும் என்று நிறைய விஷயங்களை எடுத்து சொன்னார்.. பிறகு, மரியாதை செய்யும் விதமாக 2 சிறுவர்களுக்கும் மாலை அணிவித்து வாழ்த்தும் சொன்னார்..

பாராட்டு

பாராட்டு

ஒரு பெண் போலீஸ், இந்த அளவுக்கு கனிந்த வார்த்தைகளை பேசி விழிப்புணர்வு பாடம் எடுத்தது, திண்டுக்கல் முழுக்க பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. சோஷியல் மீடியாவிலும் இந்த செய்தி ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் குணசுந்தரிக்கு பாராட்டுக்களும் குவிந்தபடியே உள்ளன.

English summary
Palani Woman Inspectors corona virus awareness and viral on socials
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X