திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோவிலை வைத்து கொள்ளையடிக்கிறாங்க! எழுதாத பேனாவுக்கு என்னத்துக்கு சிலை! கோபத்தில் கொந்தளித்த எச்.ராஜா

Google Oneindia Tamil News

திண்டுக்கல் : தமிழக அரசு இந்து மக்களின் சொத்துக்களை கொள்ளை அடிக்கிறது எனவும், எழுதாத பேனாவுக்கு எதற்காக சிலை கருணாநிதிக்கு பேனா சிலை வைப்பது குறித்து பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள பாஜக தலைவர்களிலேயே மிகவும் ஆவேசமாகவும் அதிரடியாகவும் பேசக்கூடியவர் எச்.ராஜா. பாஜக தேசிய செயலாளராக இருந்த அவர் பல்வேறு விவகாரங்களில் வாயை கொடுத்து மாட்டிக் கொண்டிருக்கிறார்.

அதிரடி பேச்சுகளுக்கும் செயல்பாடுகளுக்கும் சொந்தக்காரரான அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் குறித்து ட்விட்டரில் பதிவிட்டதையடுத்து கடும் கண்டனங்கள் எழுந்தது. இதனையடுத்து தனது அட்மின் தான் அந்த ட்விட்டர் பதிவை அனுமதியின்றி போட்டார் எனக் கூறி தப்பித்துக் கொண்டார்.

இந்துத்துவா முன் மண்டியிடாத, மோடிக்கு பயப்படாத ஒரே முதல்வர் 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்': ஆ.ராசாஇந்துத்துவா முன் மண்டியிடாத, மோடிக்கு பயப்படாத ஒரே முதல்வர் 'முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்': ஆ.ராசா

எச்.ராஜா

எச்.ராஜா

தொடர்ந்து உயர்நீதிமன்றம் குறித்து பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் எனது பேச்சை மிமிக்கிரி செய்து விட்டனர் எனக் கூறினார். இந்த நிலையில் திமுக அரசு அமைந்த பிறகு இந்து சமய அறநிலையத்துறை மீதும் கோவில் நிர்வாகங்கள் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். குறிப்பாக ஆலயங்களை விட்டு இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும் எனவும் சேகர்பாபு மாற்று மதத்தினருக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டி வரும் நிலையில், தற்போது முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா சிலை அமைப்பதை கடுமையாக விமர்சித்து இருக்கிறார்

கோவில்கள்

கோவில்கள்

இந்நிலையில் இன்றும் கருணாநிதிக்கு பேனா சிலை வைப்பது குறித்து பாஜக மூத்த தலைவரான எச்.ராஜா கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளார். வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள சத்தியமூர்த்தி பெருமாள் கோவிலில் பாஜக முன்னாள் தேசிய தலைவர் ராஜா சாமி தரிசனம் மேற்கொண்டார் பிறகு செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர்," நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னும் ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டு காலம் ஆகியும் 2000 கோயில்களை புனராவர்த்தனம் செய்வதற்கு பரிசலீப்பதாக கூறி வருகிறார்கள் .

 அல்லேலூயா பாபு

அல்லேலூயா பாபு

தமிழகத்தில் இருக்கும் கோயில்களின் எண்ணிக்கையே தமிழக அரசாங்கத்திற்கு தெரியாது. நீதிமன்ற தீர்ப்பில் 44000 கோவில்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்து சமய அறநிலையத்துறை கொள்கை விளக்க குறிப்பேட்டில் 36000 கோவில் இருப்பதாக கூறுயிருக்கிறார்கள். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அல்ல அல்லேலூயா பாபு. இந்து சமய அறநிலைத்துறை இடங்கள் சூறையாடப்பட்டு வருகின்றன.

இந்து சமய அறநிலைத்துறை

இந்து சமய அறநிலைத்துறை

அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த அரசாங்கம் இந்து மக்களின் சொத்துக்களை கொள்ளையடிக்கிறது. முதல்வரின் மகன் மற்றும் மருமகன் கிறிஸ்தவர்களாக இருப்பதால் இந்து மக்களின் சொத்துக்களை கொள்ளையடிக்கின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

பேனா சிலை

பேனா சிலை

கோயில்கள் அனைத்தையும் இந்து மக்கள் மற்றும் அறங்காவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
பொங்கல் இலவச வேட்டி சேலைக்கு பதிலாக பணமாக மக்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். கபாலீஸ்வரர் கோவிலில் கருணாநிதியை போற்றி என்று எழுதியவர்கள்தான் இந்த திராவிட ஸ்டாக்குகள்.. எழுதாத பேனாவுக்கு என்னத்துக்கு சிலை" என கடுமையான வாதங்களை முன் வைத்துள்ளார்.

English summary
Senior BJP leader H.Raja has recorded strong criticism that the Tamil Nadu government is looting the property of the Hindu people and why they are putting a statue of Pen to Karunanidhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X