கூண்டோடு சிக்கும் மதுரை அமலாக்கத்துறை ஆபீஸ்? லஞ்சத்தை கூறு கூறாக பங்கு பிரித்த அதிகாரிகள் யார் யார்?
திண்டுக்கல்: மதுரை அமலாக்கத்துறை அலுவலக அதிகாரிகள் பலருக்கும் தாம் லஞ்சத்தை பங்கிட்டு பிரித்து கொடுத்ததாக திண்டுக்கல்லில் சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி திடுக்கிடும் வாக்குமூலம் கொடுத்துள்ளாராம். இதனடிப்படையில் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் மேலும் பல அதிகாரிகள் சிக்கப் போவதாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திண்டுக்கல் அரசு மருத்துவர் டாக்டர் சுரேஷ் பாபு மீதான அமலாக்கத்துறை வழக்கை காரணம் காட்டி சுமார் ரூ1 கோடி முதல் ரூ3 கோடி வரை அங்கித் திவாரி உள்ளிட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் பேரம் பேசியிருக்கின்றனர். ரூ1 கோடி முதல் ரூ3 கோடி வரை மதுரை அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தால் வழக்கு தூசு தட்டப்படாது என வாக்குறுதி கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனடிப்படையில் முதலில் ரூ20 லட்சம் லஞ்சம் கொடுத்துவிட்டாராம் டாக்டர் சுரேஷ் பாபு.

இதனைத் தொடர்ந்து லஞ்சம் கேட்டு அங்கித் திவாரியும் இதர அதிகாரிகளும் டாக்டர் சுரேஷ் பாபுவை டார்ச்சர் செய்துள்ளனர். இதனால் உயிருக்கு அஞ்சிய டாக்டர் சுரேஷ் பாபு, திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புப் போலீசில் புகார் கொடுத்தனர். இதனடிப்படையில் ரூ31 லட்சம் லஞ்சப் பணத்துடன் தப்ப முயன்ற அமலாக்கத்துறை அதிகாரியை சினிமா பட பாணியில் விரட்டிப் பிடித்து கைது செய்தனர் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார். பின்னர் 15 மணிநேர விசாரணை நடத்தி திண்டுக்கல் நீதிமன்றத்தில் அங்கித் திவாரி ஆஜர்படுத்தப்பட்டார்.
இதனிடையே மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தை குறிவைத்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். முதலில் இந்த சோதனைக்கு அமலாக்கத்துறை அலுவலக அதிகாரிகள் ஒத்துழைப்பு தராமல் மத்திய படையை வரவழைத்தனர். தமிழ்நாடு போலீசாரும் மத்திய படையும் குவிக்கப்பட்ட நிலையில் பல மணிநேரம் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை கைப்பற்றி இருக்கின்றனராம்.
திண்டுக்கல் டாக்டர் சுரேஷ் பாபு போல ஏராளமானவர்களிடம் லஞ்சப் பணத்தை பெற்று கூறு போட்டு பிரித்து கொள்வதை மதுரை அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கமாக வைத்திருப்பதும் இந்த ஆவணங்களில் தெரியவந்துள்ளதாம். இதனால் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தை சேர்ந்த மேலும் பல அதிகாரிகள் அடுத்தடுத்து சிக்கப் போகின்றனர் என்கின்றன தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீஸ் வட்டாரங்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications