200 ஆண்டுகளுக்குப் பின்னர் மருது சகோதரர்களுடன் திண்டுக்கல்லுக்கு வந்த வீரத்தாய் வேலுநாச்சியார்!
திண்டுக்கல்: 200 ஆண்டுகளுக்கு முன்னர் எந்த கோட்டையில் தங்கி பயிற்சி எடுத்து மருது சகோதரர்களுடன் படை திரட்டி சிவகங்கை சீமையை மீட்டெடுக்கும் யுத்தத்துக்கு தயாரானாரோ அதே திண்டுக்கல் கோட்டை மாநகருக்கு இன்று திரு உருவங்களாய் வீரத்தாய் வேலுநாச்சியாரும் மாமன்னர்கள் மருது சகோதரர்களும் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தியில் வந்தடைந்தனர்.
வீரத்தாய் வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் திரு உருவங்களுடனான அலங்கார ஊர்திக்கு டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இது ஒட்டுமொத்த தமிழகத்தையே கொந்தளிக்க வைத்தது.

சென்னையில் குடியரசு தின விழா
இதனையடுத்து சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழா அலங்கார அணிவகுப்பில் இந்திய விடுதலைப் போரில் தமிழகத்தின் பங்களிப்பை பறைசாற்றும் 3 அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன. இந்த அலங்கார ஊர்திகள் இப்போது தமிழகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

தேனியில் அலங்கார ஊர்தி
ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுமக்கள் பார்வைக்காக இந்த அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. மாவட்டங்கள்தோறும் வலம் வரும் இந்த அலங்கார ஊர்திகளுக்கு பொதுமக்கள் எழுச்சி மிகு வரவேற்பு கொடுத்து வருகின்றனர். நேற்று தேனி மாவட்டத்துக்கு வீரத்தாய் வேலுநாச்சியார், மருது சகோதரர்களின் அலங்கார ஊர்தி சென்றது.

திண்டுக்கல் வருகை
இதனைத் தொடர்ந்து இன்று திண்டுக்கல் மாவட்டத்துக்கு வேலுநாச்சியார்- மருது சகோதரர்கள் அலங்கார ஊர்தி வந்தது. இந்த அலங்கார ஊர்தியை அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் மலர்தூவி வரவேற்றனர். தமிழர் வீரத்தை பாருக்கு சொன்ன, பரங்கியர் தலை அறுத்த மாவீரர்களை ஏராளமான பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர்.

திண்டுக்கல்லும் வேலுநாச்சியாரும்
சிவகங்கை சீமையின் மன்னர் முத்துவடுகநாத தேவர், காளையார் கோவில் யுத்தத்தில் வீரமரணம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து விருப்பாட்சி கோபால் நாயக்கரிடம் தமது படை பரிவாரங்களுடன் அடைக்கலாமானார் வேலுநாச்சியார். சுமார் 7 ஆண்டுகாலம் விருப்பாட்சிக் கோட்டை, திண்டுக்கல் மலைக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் தங்கி படை திரட்டினார் வேலுநாச்சியார். கி.பி.1780-ல் திண்டுக்கல் கோட்டையில் இருந்து மருது சகோதரர்களுடன் திப்புசுல்தானின் சுமார் 10,000 வீரர்களுடனும் புயலென சீறிப் பாய்ந்து வெள்ளையருக்கு எதிராக வீரம் செறிந்த யுத்தம் நடத்தி வாகை சூடினார் வேலுநாச்சியார். தாம் வாழ்ந்து, தாம் படை திரட்டிய அதே திண்டுக்கல் மாநகருக்கு இன்று சுமார் 200 ஆண்டுகளுக்குப் பின்னர் திரு உருவங்களாய் தியாக தீபங்களாய் வீரத்தாய் வேலுநாச்சியாரும் மாவீரர் மருது சகோதரர்களும் வலம் வந்தனர்!
-
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications