திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிய ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்.. செம கடுப்பில் எடப்பாடி அன்ட் கோ!

Google Oneindia Tamil News

பழனி: அதிமுக ஏற்கெனவே பற்றி எரிந்து வரும் நிலையில் அதில் ஓபிஎஸ் மகனும் தேனி எம்பியுமான ரவீந்திரநாத் நெய் ஊற்றும்படியாக ஒரு காரியத்தை செய்துள்ளார்.

அதிமுகவில் யாருக்கு அதிகாரம் இருக்கிறது என்பதற்கான போட்டி நிலவி வருகிறது. இதில் ஓபிஎஸ் ஒரு அணியாகவும் எடப்பாடி பழனிசாமி மறு அணியாகவும் பிரிந்துள்ளார்கள். இருவரும் மாறி மாறி நீதிமன்ற படிக்கட்டுகளை நாடுகிறார்கள்.

எடப்பாடி அணியினர் ஓபிஎஸ் மீது வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டு என்னவெனில் திமுகவுடன் இணக்கமாக இருப்பதுதான். அதாவது சட்டசபையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் என்ற முறையில் ஓபிஎஸ் உரையாற்றினார்.

இன்று மூக்கையா தேவர் நினைவுநாள்.. ஓபிஎஸ்-இன் முக்கிய நகர்வு! ஒருங்கிணையும் தென் மாவட்ட ஆதரவாளர்கள் இன்று மூக்கையா தேவர் நினைவுநாள்.. ஓபிஎஸ்-இன் முக்கிய நகர்வு! ஒருங்கிணையும் தென் மாவட்ட ஆதரவாளர்கள்

கருணாநிதி

கருணாநிதி

அப்போது கருணாநிதியின் பராசக்தி வசனத்தை மனப்பாடம் செய்ய தலைமாட்டில் எழுதி வைத்திருந்தேன் என கூறியிருந்தார். இது எடப்பாடி தரப்பினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதாவது திமுகவை எதிர்க்க அதிமுக தொடங்கப்பட்ட நிலையில் அந்த கட்சிக்கு ஆதரவாக ஓபிஎஸ் கருத்து தெரிவித்தது அவர்களை கோபம் கொள்ள வைத்தது.

 முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின்

இதையடுத்து முதல்வர் ஸ்டாலினை ஓ.ரவீந்திரநாத் நேரில் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழகத்தில் திமுக ஆட்சி சிறப்பாக இருப்பதாக பாராட்டினார். தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் சட்டம் ஒழுங்கு சரியில்லை என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் குற்றம்சாட்டிய நிலையில் ஓபிஆரின் பாராட்டு எடப்பாடி தரப்பை கோபத்தில் ஆழ்த்தியது.

 வெந்த புண்ணில்

வெந்த புண்ணில்

இந்த நிலையல் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் மற்றொரு காரியத்தை செய்துள்ளார் ஓபிஆர். அதாவது நேற்றைய தினம் புதுமைப் பெண் என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதாவது மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ 1000 வழங்கும் திட்டமாகும். இது அவர்களுடைய உயர்கல்விக்கு உதவும் வகையில் தொடங்கப்பட்டதாகும்.

பழனி கோயில்

பழனி கோயில்

பழனி முருகன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய அதிமுக எம்பி ரவீந்திரநாத் வருகை தந்தார். அவர் அங்கு தங்கரதத்தை இழுத்து முருகனை வழிபட்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கல்லூரியில் படிக்கக் கூடிய பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கக் கூடிய புதுமைப் பெண் திட்டத்தை வரவேற்கிறேன். இது போன்ற திட்டங்கள் பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும்.

தமிழக முதல்வருக்கு பாராட்டு

தமிழக முதல்வருக்கு பாராட்டு

இந்த திட்டத்தை துவக்கி வைத்த தமிழக முதல்வருக்கு பாராட்டுகள் என தெரிவித்துள்ளார். ஜெயலலிதா கொண்டு வந்த தாலிக்கு தங்கம் திட்டத்தை ரத்து செய்து விட்டு மாணவிகளுக்கு ரூ 1000 உதவி தொகை திட்டத்தை கொண்டு வந்ததற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ஓபிஎஸ் மகன் பாராட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Theni MP Raveendranath Welcomes Tamilnadu Government's Pudhumai Penn Scheme.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X