அவர் நிச்சயம் துணை மேயர் இல்லையாம்.. சமூக நீதி காக்குமா“திமுக”..அடித்து சொல்லும் கழக உடன்பிறப்புகள்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சியை திமுக தனிப் பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ள நிலையில், மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழகத்திற்கு முன்மாதிரியாக துணை மேயர் பதவியையும், பெண்களுக்கு குறிப்பாக தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமூகத்தினருக்கு ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரு வெற்றி பெற்று உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்றியுள்ளனர்.

இதேபோலவே திண்டுக்கல் மாவட்டம் முழுவதிலும் உள்ள மாநகராட்சி நகராட்சிகள், பேரூராட்சிகளை திமுக அதிக அளவில் கைப்பற்றியுள்ளது அக்கட்சியினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

துணை மேயர் பதவி

துணை மேயர் பதவி

இதையடுத்து மாநகராட்சி மேயர் துணை மேயர் நகராட்சி பேரூராட்சிகளுக்கு தலைவர் துணைத் தலைவர் பதவிக்கு யாரை நியமிப்பது என ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது திமுக தலைமை. குறிப்பாக முதன் முறையாக மேயர் தேர்தலை சந்தித்து உள்ள திண்டுக்கல் மாநகராட்சி பெண்களுக்கு ஒதுக்கப்படும் நிலையில் மேயர் பதவிக்கு கடும் போட்டி எழுந்துள்ளது.

திமுக குழப்பம்

திமுக குழப்பம்

தற்போது வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வார்டு உறுப்பினர்களான சரண்யா, உள்ளிட்ட பலர் மேயர் போட்டியில் நீடிக்கின்றனர். கட்சியில் உழைத்தவர்களுக்கு தான் பதவி என திமுக துணைப் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஐ.பெரியசாமி கூறியுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.இந்த நிலையில் துணை மேயர் பதவியை யாருக்கு வழங்குவது என குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.

துணை மேயர் யார் ?

துணை மேயர் யார் ?

திண்டுக்கல் திமுக. தற்போதைய சூழ்நிலையில் திமுக நகர செயலாளர் ராஜப்பா, தொடர்ந்து 25 ஆண்டுகளாக ஒரே குடும்பத்தினர் வார்டு உறுப்பினர்களாக இருக்கும் வார்டில் வெற்றி பெற்ற ஜானகிராமன், "ஹாட்ரிக்" வெற்றி பெற்றுள்ள ஆனந்தஜோதி ஆகிய யாராவது ஒருவர் துணை மேயராக வாய்ப்பிருப்பதாக கழகத்தின் மூத்த நிர்வாகிகள் கூறிவரும் நிலையில் போட்டியில் புதிதாக ஒருவரும் இணைந்துள்ளார்.

புதிய போட்டியாளர்

புதிய போட்டியாளர்

17-வது வாரத்தில் தண்ணீர் குழாய் சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெற்ற திண்டுக்கல்லில் மெகா கோடீஸ்வரர் ஆன லயன் ரத்தினத்தின் மகன் வெங்கடேஷ் எதிரான போட்டியில் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே வார்டில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி அடைந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெங்கடேஷ் திமுகவில் இணைந்தார். இதனால் அவருக்கு துணை மேயர் பதவி வழங்கப்படலாம் என்ற தகவல் வெளியான நிலையில் அதற்கான வாய்ப்பு மிகமிகக் குறைவாக இருப்பதாகவே திமுகவினர் கூறி வருகின்றனர். கட்சியில் நேற்று சேர்ந்த ஒருவருக்கு துணை மேயர் பதவி வழங்கினால் அது திமுகவின் மூத்த உறுப்பினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் என்பதால் அவருக்கு பதவி வழங்கப்படாது எனவும் தகவல் உள்ளது.

பெண்களுக்கு வாய்ப்பு?

பெண்களுக்கு வாய்ப்பு?

இந்த நிலையில் சமூக நீதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திமுக துணை மேயர் பதவியிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. ஏற்கனவே திண்டுக்கல் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்படும் நிலையில் தமிழகத்திலிருந்து மாதிரியாக துணை மேயர் பதவியையும் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும் எனவும், குறிப்பாக தாழ்த்தப்பட்ட அருந்ததியர் இன மக்களுக்கு துணை மேயர் பதவியை ஒதுக்க வேண்டும் என ஒரு சாரார் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 10-ஆவது வார்டு பகுதியில் போட்டியிட்ட ஒரே அருந்ததியர் வேட்பாளரான பானுப்பிரியா அல்லது வேறு ஏதாவது பெண் வேட்பாளருக்கு துணை மேயர் பதவியை திமுக ஒதுக்க வேண்டும் என ஒரு தரப்பினர் ஐ.பெரியசாமி இடம் கோரிக்கை வைத்ததாகவும், அவர்களையும் அவர் சென்னை அழைத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+