பத்திரம் பத்திரம்.. சொத்து வாங்கும் முன் வில்லங்கச் சான்றிதழ் அவசியம்.. சீறி எழுந்த பதிவுத்துறை ஆப்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீடு அல்லது மனை வாங்கும் போது அந்த சொத்தின் முந்தைய பத்திரப்பதிவு மற்றும் கடன் விபரங்களை சரிபார்ப்பது அவசியமாகும். இதற்காக சம்பந்தப்பட்ட சொத்து தொடர்பான வில்லங்க சான்றிதழ் ஆன்லைன் மூலமாகப் பெறப்பட்டு வந்தது. ஆனால் இப்போது பொதுமக்கள் தங்களின் செல்போன் ஆப் மூலமாகவெ 1975ம் ஆண்டு முதல் பதிவான வில்லங்க விபரங்களை எளிதாகப் பார்க்கும் புதிய வசதியைப் பதிவுத்துறை பயன்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளது. இதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

சொந்தமாக ஒரு வீடோ அல்லது வீட்டு மனையோ வாங்குவது என்பது பலரின் வாழ்நாள் கனவு. அப்படி ஆசை ஆசையாக ஒரு சொத்தை வாங்கும் போது, அதில் எந்தவிதமான சட்ட சிக்கல்களும் இல்லை என்பதை உறுதிப்படுத்துவது மிக மிக முக்கியம். இதற்குதான் வில்லங்க சான்றிதழ் (Encumbrance Certificate - EC) பயன்படுகிறது.

property news land records encumbrance certificate Tamil Nadu registration real estate India

எளிமையாக சொன்னால், ஒரு சொத்தின் ஜாதகம் தான் இந்த வில்லங்க சான்றிதழ். அந்த சொத்து இதற்கு முன்னால் யார் யார் பெயரில் இருந்தது, எத்தனை முறை கைமாறியிருக்கிறது, அதன் மீது ஏதாவது பேங்க் லோன் வாங்கப்பட்டுள்ளதா அல்லது கோர்ட் கேஸ்கள் ஏதாவது நிலுவையில் இருக்கிறதா போன்ற அனைத்து வரலாற்று விபரங்களையும் அக்குவேறு ஆணிவேறாக இந்த சான்றிதழ் வெளிச்சம் போட்டுக் காட்டிவிடும்.

வில்லங்க சான்றிதழ் பெற வசதி

நாம் கஷ்டப்பட்டு சேர்க்கும் பணம் ஏமாந்து போகாமல் இருக்கவும், எதிர்காலத்தில் சட்டப் போராட்டங்களில் சிக்காமல் தவிக்கவும் இந்த சான்றிதழைச் சரிபார்ப்பது சொத்து வாங்குபவர்களின் அத்தியாவசிய கடமையாகும்.

இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த வில்லங்க சான்றிதழைப் பொதுமக்கள் எளிதாகப் பெறும் வகையில், தமிழகப் பதிவுத்துறை ஒரு புதிய அதிரடி வசதியைக் கொண்டு வந்துள்ளது.

பொதுவாக, வீடு அல்லது மனை வாங்குபவர்கள் முந்தைய பத்திரப்பதிவு விபரங்களை ஆய்வு செய்வதற்காக இணையதளம் வழியாகக் கட்டணம் செலுத்தியோ அல்லது இலவசமாகவோ வில்லங்க சான்றிதழைப் பெற்று வந்தனர். இதனிடையே பதிவுத்துறையில் கடந்த ஜனவரி 22ம் தேதி ஸ்டார் 3.0 என்ற புதிய மேம்படுத்தப்பட்ட மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டது.

TNREGINET என்ற புதிய மொபைல் போன் செயலி

அப்போது பொதுமக்களின் வசதிக்காக TNREGINET என்ற புதிய மொபைல் போன் செயலியும் (Mobile App) அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாகச் சில தொழில்நுட்ப கோளாறுகள் மற்றும் நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக, இந்தச் செயலி உடனடியாக மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் முடங்கியிருந்தது.

இதனால் மொபைல் செயலி மூலம் விபரங்களை அறியக் காத்திருந்த பொதுமக்கள் கொஞ்சம் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில்தான் இந்த டெக்னில் பிரச்சனைகளை துரிதமாக சீரமைக்க பதிவுத்துறை உயர் அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

அதிகாரிகளின் தொடர் முயற்சியால் இப்போது அனைத்து தொழில்நுட்ப கோளாறுகளும் முழுமையாக சரிசெய்யப்பட்டு, பதிவுத்துறையின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலி மீண்டும் முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

ரெடியான புதிய ஆப்

இந்த செயலி மூலமாக பொதுமக்கள் தங்களுக்கு தேவையான சொத்துக்கள் தொடர்பான வில்லங்க விபரங்களை எந்தவிதமான சிரமமும் இல்லாமல் மிக எளிதாகத் தங்களின் மொபைல் போன் மூலமாகவே பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் என்று பதிவுத்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.

இந்த தொழில்நுட்ப மேம்பாட்டின் மூலம் பொதுமக்கள் தங்களுக்குப் பிடித்தமான இடத்தை வாங்குவதற்கு முன்பாக, அதன் நம்பகத்தன்மையை வீட்டிலிருந்தபடியே சில நிமிடங்களில் சரிபார்த்துவிட முடியுமாம்.

அதுமட்டுமல்ல, இந்த மொபைல் போன் செயலி வாயிலாக, கடந்த 1975ம் ஆண்டு முதல் தமிழகத்தில் பதிவான அனைத்து விதமான பத்திரங்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பான வில்லங்க விபரங்களை மிகத் துல்லியமாகப் பொதுமக்கள் பார்த்துக்கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் விரிவான விளக்கமளித்துள்ளனர்.

நோ புரோக்கர்கள் தொல்லை

பதிவுத்துறையின் இந்த அதிரடி மாற்றமும், புதிய ஆப்பின் மறுவருகையும் சொத்து வாங்கத் திட்டமிடும் நடுத்தர மக்களுக்குப் பெரும் நிம்மதியைத் தந்துள்ளது. புரோக்கர்களின் அலைக்கழிப்புகள் இல்லாமலும், அலுவலகங்களுக்கு அலைந்து திரியாமலும், 1975 முதற்கொண்டுள்ள கடந்த 50 ஆண்டுகால சொத்து விபரங்களை விரல் நுனியில் மொபைல் செயலி மூலமாகவே தெரிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த டிஜிட்டல் வசதியைப் பயன்படுத்திப் பொதுமக்கள் தங்களின் சொத்து வாங்கும் செயல்முறையைப் பாதுகாப்பானதாகவும், வெளிப்படையானதாகவும் மாற்றிக்கொள்ளலாம் என்று அரசுத் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது...!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+