திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விசிக - ஆர்.எஸ்.எஸ்! இரண்டு பேராலயுமே சட்டம் ஒழுங்கு பிரச்சினை தான்! போட்டுத் தாக்கிய பிரேமலதா!

Google Oneindia Tamil News

திண்டுக்கல் : தேமுதிகவை பொறுத்தவரை பாரதிய ஜனதா கட்சியுடனோ அதிமுகவுடனோ கூட்டணி கிடையாது எனவும், தற்போது வரை தேமுதிக எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை‌ என திண்டுக்கல்லில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா உறுதிபட கூறியிருக்கிறார்.

திண்டுக்கல்லுக்கு இன்று வருகை தந்த தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சி நிர்வாகியின் இல்ல விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். முன்னதாக திண்டுக்கல் வந்த அவருக்கு நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மது இல்லாத, போதை இல்லாத, கஞ்சா இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என உறுதிமொழி எடுத்து வருகிறோம். தமிழகத்தில் கஞ்சா விற்பனை மது விற்பனை அதிக அளவில் உள்ளது.

ஏமாத்திட்டாங்க! ஓபிஎஸ்-சசிகலா-டிடிவிக்குத் தான் என்னோட ஆதரவு! கொங்கிலிருந்து வந்த தனியரசு சப்போர்ட்! ஏமாத்திட்டாங்க! ஓபிஎஸ்-சசிகலா-டிடிவிக்குத் தான் என்னோட ஆதரவு! கொங்கிலிருந்து வந்த தனியரசு சப்போர்ட்!

பிரேமலதா விஜயகாந்த்

பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மிக மிக மோசமாக உள்ளது. பெட்ரோல் குண்டு வீச்சு தமிழகத்தில் அதிக அளவில் உள்ளது. இது வன்மையாக கண்டிக்க கூடிய ஒரு விஷயம் பெட்ரோல் குண்டு வீச்சில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் யாராக இருந்தாலும் தயவு தாட்சனை இன்றி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். மக்களுக்கு பாதுகாப்பான தமிழகத்தை உருவாக்க வேண்டும்.

சட்டம் ஒழுங்கு இலக்காவை வைத்திருப்பவர் தமிழக முதல்வர்.

ஆர்எஸ்எஸ் ஊர்வலம் - விசிக

ஆர்எஸ்எஸ் ஊர்வலம் - விசிக

ஆர்எஸ்எஸ் ஊர்வலம், விடுதலை சிறுத்தைகள் மனித சங்கிலி போராட்டம் இதன் காரணமாக சட்ட ஒழுங்கிற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய சூழ்நிலை இருந்தது. இந்த இரண்டிற்கும் தமிழக அரசு தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இதனை தேமுதிக வரவேற்கின்றது. ஏனென்றால் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது ஒவ்வொரு தனிமனித கடமையாகும்.

மனித சங்கிலி

மனித சங்கிலி

மனித சங்கிலி போராட்டத்தில் தேமுதிக பங்கேற்கும் என விடுதலை சிறுத்தைகள் அறிவித்திருந்தனர். இது தொடர்பாக அவர்கள் எங்களை அழைக்கவும் இல்லை தகவல் தெரிவிக்கவும் இல்லை அழைக்காத காரணத்தினால் இதில் நாங்கள் பங்கேற்க போவதில்லை. தமிழக அமைச்சர்கள் அனைவருமே ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சும் ஆட்சிக்கு வந்ததுக்கு பின்பு ஒரு பேச்சும் பேசி வருகின்றனர். அமைச்சர்கள் இரட்டை நிலை பாட்டை எடுத்துள்ளனர். தமிழக மக்களின் சார்பில் இது வன்மையாக கண்டிக்கின்றேன்.

கூட்டணி இல்லை

கூட்டணி இல்லை

பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் நடைபெற உள்ள 2024 பாராளுமன்ற தேர்தலின் போது சட்டமன்றத்திற்கும் சேர்த்து தேர்தல் வரும் என கூறி வருகின்றனர். தேமுதிகவை பொறுத்தவரை நேர்மையான தேர்தலை தான் நாங்கள் எதிர் கொள்வோம். நேர்மையாக தேர்தல் நடக்க வேண்டும் நேர்மையான ஆட்சி நடைபெற வேண்டும் என்பது தான் தேமுதிகவின் நிலைப்பாடு. தேமுதிகவை பொறுத்தவரை பாரதிய ஜனதாகட்சியோ அதிமுகவுடனோ கூட்டணி கிடையாது. யாருடனும் தற்பொழுது வரை கூட்டணியில் கிடையாது" என்றார்.

English summary
As far as the DMDK is concerned, there is no alliance with the Bharatiya Janata Party or the AIADMK, and till now the DMDK is not in alliance with any party dmdk treasurer premalatha vijayakanth says
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X