பறந்த வார்னிங்.. சரியா மோடி வர நேரம் பார்த்து இப்படியா நடக்கணும்? கையை பிசையும் பாஜக.. என்னாச்சு?
திண்டுக்கல்: பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வர உள்ள நிலையில், பாஜக தலைவர்கள் சிலர் அவரை பிரம்மாண்டமாக வரவேற்க முடியாதே என்ற வருத்தத்தில் இருக்கிறார்களாம்.
பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகிறார். இன்று சென்னை-மைசூர் வந்தேபாரத் ரயில் சேவையை இன்று துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி. பெங்களூரில் நடக்கும் விழாவில் பிரதமர் மோடி பச்சை கொடியசைத்து துவக்கி வைக்க உள்ளார்.
அதன்பின் அங்கிருந்து விமானம் மூலம் மதுரைக்கு வர உள்ளார். மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி திண்டுக்கல்லுக்கு செல்ல இருக்கிறார்.

திண்டுக்கல்
திண்டுக்கல் காந்தி கிராமம், காந்தி கிராம கிராமிய பல்கலைக் கழகத்தின் 36-வது பட்டமளிப்பு விழா இன்று நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை தருகிறார். ஆளுநர் ஆர். என் ரவியும் இந்த நிகழ்வில் கலந்து கொள்கிறார். அதேபோல் முதல்வர் ஸ்டாலினும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடந்து கொண்டு இருக்கின்றன.

தீவிர ஏற்பாடுகள்
இந்த நிகழ்வில் பிரதமர் மோடியை சந்திக்க அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோருக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இரண்டு பேரும் தனி தனியாக மோடியை சந்திக்க உள்ளனர். ஒருவர் பிரதமர் மோடியை வரவேற்பார் இன்னொருவர் பிரதமர் மோடியை வழியனுப்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பாஜக தலைவர்களையும் இன்று மோடி சந்திக்க உள்ளார். பல்கலைக்கழக நிகழ்வு முடிந்து பாஜக தலைவர்களை மோடி சந்திப்பார்.

சந்திப்பு
இந்த சந்திப்பில் பாஜக மூத்த நிர்வாகிகளின் உடல்நிலை குறித்து மோடி விசாரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரிதாக அரசியல் பற்றி பேசாமல் நிர்வாகிகள் பற்றி இவர் ஆலோசனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அவர்களின் குடும்பத்தினர் குறித்தும் பிரதமர் மோடி விசாரிக்க வாய்ப்புகள் உள்ளன. புதிதாக தேர்வான நிர்வாகிகளுக்கு இவர் வாழ்த்து சொல்லும் வாய்ப்புகள் உள்ளன. உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை தமிழ்நாடு வருகிறார்.

தமிழ்நாடு
நாளை அவர் அரசியல் தொடர்பான விஷயங்களை பாஜக தலைவர்களுடன் ஆலோசனை செய்வார். தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அவர் பாஜக நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வர உள்ள நிலையில், பாஜக தலைவர்கள் சிலர் அவரை பிரம்மாண்டமாக வரவேற்க முடியாதே என்ற வருத்தத்தில் இருக்கிறார்களாம். மோடியை இன்று தமிழ்நாடு வர உள்ள நிலையில் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று முழுக்கவே அங்கு கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

கனமழை
கனமழை முதல் மிக கனமழை வரை இந்த மாவட்டங்களில் பெய்யும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடியை வரவேற்பதில் சிக்கல் ஏற்படும் என்று பாஜக நிர்வாகிகள் கையை பிசைந்து கொண்டு இருக்கிறார்களாம். நிர்வாகிகளை மழையில் அழைத்து வரவேற்பு கொடுப்பது சிக்கல் என்பதால் அவர்கள் கையை பிசைந்து வருகிறார்களாம். அதேபோல் வானிலை காரணமாக ஹெலிகாப்டர் வருவதில் சிக்கல் உள்ளது. கனமழை பெய்தால் கடைசி நேர்தத்தில் பயண திட்டங்கள் மாற்றப்படும் வாய்ப்புகள் உள்ளன.
-
விஜய் கூட டெல்லி போனவங்க யார்? அவங்களுக்கும் தமிழகத்திற்கும் என்ன சம்பந்தம்? தராசு ஷ்யாம் டென்ஷன் -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications