ஜெயிச்சேயாகனும்.. நியூசிலாந்து போட்டிக்கான இந்திய அணியில் 3 மாற்றங்களுக்கு சான்ஸ்! வருகிறார் சீனியர்
துபாய்: நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்து விட்டதால் நியூசிலாந்தை வீழ்த்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி மோத உள்ளது.
எனவே கடந்த போட்டியில் யார் யார் கோட்டை விட்டார்களோ அந்த வீரர்களுக்கு பதிலாக வேறு வீரர்களுடன் களமிறங்கி முழு திறமையோடு மோத உள்ளது இந்தியா.
பிளேயிங் லெவன் சிறப்பாக இருப்பதுதான், இந்த போட்டியின் ரிசல்ட்டை தீர்மானிக்க உள்ளது என்பதை இந்திய அணி நிர்வாகமும், மென்டர் தோனியும் நன்கு தெரிந்தே வைத்துள்ளனர். இதனிடையே அணியில் என்ன மாற்றங்கள் ஏற்படலாம் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஷர்துல் தாக்கூர்
புவனேஸ்வர்குமாருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் விளையாட வாய்ப்பு உள்ளது. சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டவர் ஷர்துல் தாக்கூர். விக்கெட் தேவை என்று தோனி நினைக்கும்போதெல்லாம் விக்கெட்டை வீழ்த்துவார்.

சிறப்பு பெயர்
எனவேதான், ரசிகர்களால் லாட் ஷர்துல் தாக்கூர் என்று செல்லப் பெயர் வைத்து அழைக்கப்படுகிறார். பார்மில் இல்லாத புவனேஸ்வர் குமாருக்கு பதில் ஷர்துல் தாக்கூர் அணிக்குள் வருவது யானை பலம் என்று அணி நிர்வாகம் நினைக்கிறது.

இஷான் கிஷன்
ஹர்திக் பாண்ட்யாவிற்கு பதிலாக இஷான் கிஷனை அணிக்குள் கொண்டுவர திட்டமுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான வார்ம் அப் போட்டியில் 46 பந்துகளில் 70 ரன்கள் விளாசியவர் இஷான் கிஷன். ஆனால் சுத்தமாக பார்மில் இல்லாமல் இருக்கிறார் பாண்ட்யா. பந்தும் வீசுவதில்லை. எனவே இஷான் கிஷன்தான் சரியான சாய்ஸ் என்று நினைக்கிறது அணி நிர்வாகம்.
Recommended Video

ஹர்திக் பாண்ட்யா பவுலிங்
அணியில் இடது கை பேட்ஸ்மேன் ஒருவர் கூடுதலாக இருப்பதும் பேலன்ஸ் செய்ய உதவும் என்று கேப்டன் விராட் கோலி நினைக்கிறார். அதேநேரம், ஹர்திக் பாண்ட்யா வலைப் பயிற்சியில் சில நிமிடங்கள் பந்து வீசியுள்ளார். இதை வைத்து 11 பேர் டீமில் எடுக்க வாய்ப்பு இல்லை என்கிறார்கள் அணி வட்டாரத்தில்.

ஷமிக்கு பதில் சீனியர் அஸ்வின்
முகமது ஷமிக்கு பதில் சீனியர் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் களமிறங்க வாய்ப்பு உள்ளது. அஸ்வின் தொடர்ந்து சிறப்பாக பந்து வீசி வருகிறார். மேலும் யூஏஇ மைதானங்கள் ஸ்பின் பந்துக்கு நன்கு உதவுகின்றன. எனவே அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கப்போகிறது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 3.5 ஓவர்களில் 43 ரன்கள் கொடுத்தார் ஷமி. இந்திய அணி பவுலர்களிலேயே அன்றைய தினம் அதிக ரன் கொடுத்தது ஷமிதான். இதன் காரணமாக மாற்றங்கள் அவசியம் என்கிறார்கள்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா












Click it and Unblock the Notifications