இந்திய அணி சறுக்கிய "அந்த" இடம்.. பச் உடனே திருத்தணும்.. பாகிஸ்தானிடம் தோற்க 5 முக்கிய காரணங்கள்!
துபாய்: நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை 2022 ஆட்டத்தில் இந்திய அணியின் தோல்விக்கு பின் பல்வேறு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன.
இந்தியா பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை சூப்பர் 4 ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்றது. முதல் குழு ஆட்டத்தில் இந்திய அணி வென்ற நிலையில், நேற்று எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று இந்திய அணி வேகமாக ஆடியது.
நேற்று டாஸ் வென்று பாகிஸ்தான் பவுலிங் செய்தது. இதையடுத்து முதலில் இறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது.
அதன்பின் இறங்கிய பாகிஸ்தான் அணி கடைசி ஓவரில் ஒரு பால் மீதம் இருக்கும் நிலையில் 5 விக்கெட் இழப்பிற்கு இலக்கை அடைந்து வெற்றிபெற்றது.

சறுக்கல் 1 - டாஸ் தோல்வி
இந்திய அணி இதில் டாஸ் தோல்வி அடைந்தது அணிக்கு எதிராக திரும்பியது. துபாயில் பொதுவாக சேஸிங் செய்யும் அணியே வெற்றிபெற வாய்ப்புள்ளது. துபாய் பிட்சில் இரண்டாவது இன்னிங்சில் அப்படியே ஆட்டம் பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக மாறும். இதனால் எதிர்பார்த்தபடியே பாகிஸ்தான் அணி பவுலிங் எடுத்தது.இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 181 ரன்கள் எடுத்தாலும், இரண்டாவது பேட்டிங் செய்த போது பிட்ச் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்ததால் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது.

சறுக்கல் 2 - கடைசி 5 ஓவர்
அதேபோல் இந்திய அணி பேட்டிங் செய்த கடைசி 5 ஓவர்களில் 50 ரன்கள் மட்டுமே எடுத்தது. இடையில் இந்திய அணியின் வேகம் கொஞ்சம் குறைந்தது. இதனால் 190 ரன்களுக்கும் மேல் அடிக்க வேண்டிய இந்திய அணி 181 ரன்கள் என்ற அளவில் குறைந்தது. இது இந்திய அணியின் சறுக்கலுக்கு முக்கிய காரணமாக இருந்தது. வரிசையாக கடைசி 5 ஓவர்களில் மிடில் ஆர்டர் விக்கெட்டுகளை இழந்து, ரன் அதிகம் எடுக்காமல் இருந்தது குறைவான டார்கெட் வைக்க காரணமாக அமைந்தது.

சறுக்கல் 3 - 6வது பவுலர்
நேற்று இந்திய அணியில் தீபக் ஹூடா 6வது பவுலர் என்பதற்காகவே எடுக்கப்பட்டார். ஆனால் அவரை பவுலிங் செய்ய விடவில்லை. அவர் பவுலிங் சிறப்பு இல்லை என்றால் அஸ்வினை எடுத்து இருக்கலாம். அவரையும் எடுக்கவில்லை. பவுலிங் கொடுக்காத நிலையில் ஹுடாவை எடுத்தது ஏன்தான் என்ற கேள்வி எழுந்துள்ளது. பேட்டிங்கிற்காக எடுத்தார்கள் என்றால் அக்சர் பட்டேலை அந்த இடத்தில் எடுத்து இருக்கலாம். அதுவும் செய்யவில்லை. இது இந்திய அணிக்கு முக்கிய சிக்கலாக மாறியது.

சறுக்கல் 4 - கடைசியில் போடப்பட்ட வைடுகள்
கடைசியில் இந்திய அணி 3 ஓவர்களில் போட்ட வைடுகள் அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் ஆனது. 18வது ஓவரில் அர்ஷிதீப் சிங் அடுத்தடுத்து வைட் போட்டார். பின்னர் வந்த புவனேஷ்வர் குமாரும் அடுத்தடுத்து வைட் போட்டார். அதன்பின் டென்சன் ஆன அவர், தப்பான லென்தில் ஷார்ட் போல போட்டு அது சிக்ஸ் சென்றது. டெத் ஓவர்களில் இந்திய அணியில் முன்பெல்லாம் பும்ரா ஓவருக்கு 4-3 ரன்கள் மட்டுமே கொடுத்து கட்டுப்படுத்துவார். ஆனால் நேற்று இந்திய அணியில் அது மிஸ்ஸிங்.

சறுக்கல் 5 - வீரர்கள் சொதப்பல்
இது போக இந்திய அணியில் நேற்று முக்கியமான வீரர்களான பண்ட், பாண்டியா, சாஹல் மூவரும் சொதப்பினார்கள். பண்ட் தேவையில்லாத ஷாட் அடித்து அவுட் ஆனார். அதேபோல் பாண்டியா பவுலிங், பேட்டிங் இரண்டிலும் "ஆப்" ஆக இருந்தார். சாஹல் இந்த சீசன் முழுக்கவே மோசமாக ஆடி வருகிறார். நேற்றும் 44 ரன்கள் கொடுத்து, பிரஷர் போட முடியாமல் மோசமாக சொதப்பினார். சிறு சிறு தவறுகளை சரி செய்யும் பட்சத்தில் இந்திய அணி அடுத்த போட்டிகளில் எளிதாக வெற்றிபெற முடியும்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications