இதுதான் 'கேம் ஸ்ப்ரிட்டா?' வெட்கக் கேடு.. டேவிட் வார்னரை விட்டு விளாசிய கவுதம் கம்பீர்!
துபாய்: இதுதான் கேம் ஸ்ப்ரிட்டா என்று ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டேவிட் வார்னர் அடித்த ஷாட் பற்றி கேள்வி எழுப்பியுள்ளார் கவுதம் கம்பீர்.
நேற்று பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலக கோப்பை இரண்டாவது அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அடித்த ஒரு சிக்சர் இந்த வாத விவாதங்களுக்கு காரணமாக மாறியுள்ளது.
அதைத்தான், கவுதம் கம்பீர் சுட்டிக் காட்டியுள்ளார்.

2 பிட்ச் பந்தில் சிக்ஸ்
வார்னர் பேட்டிங் கிரீசில் நின்றபோது, 8வது ஓவரை வீச ஹபீஸ் வந்தார். ஆப் ஸ்பின் பவுலரான அவர், அடிக்கடி பந்து போடக் கூடியவர் இல்லை. முன்னணி பவுலர்களை கடைசி கட்டத்தில் பயன்படுத்துவதற்காக ஹபீசை பந்து வீச கொண்டு வந்தார் பாகிஸ்தான் கேப்டன் பாபர். இதனால் தடுமாற்றத்தோடு ஹபீஸ் பந்து வீசினார். ஓவரின் முதல் பந்தை அவர் வீச முயன்றபோது கையை விட்டு வழுக்கிவிட்டுச் சென்றது. அந்த பந்து 2 பிட்ச் ஆகி லெக் சைடுக்கு போனது. இது டெட் பால் என்றுதான் தமிழ் கமெண்டரி செய்தவர்கள் கூட கூறினர். ஆனால் வார்னர் திடீரென கிரீசை விட்டு இறங்கி வந்தார். அந்த பந்தை டீப் மிட் விக்கெட் திசையில் பிரமாண்ட சிக்சராக அடித்தார். அது டெட் பால் இல்லை, நோபால் என்பது, நடுவர் அதற்கு சிக்ஸ் கொடுத்து விட்டு, அதை நோ பால் என்று அறிவித்தபோதுதான் வர்ணனையாளர்களுக்கே புரிந்தது.

வார்னர் செய்த வேலை
இருப்பினும், இப்படி கையிலிருந்து வழுவி சென்ற பந்தை தேடி பிடித்து அடித்த வார்னரின் செயல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. வார்னரும், ஸ்மித்தும் சேர்ந்து, பந்தை டேமேஜ் செய்து எதிரணியை வீழ்த்த முயன்றார்கள் என்ற குற்றச்சாட்டில் ஓராண்டு விளையாட தடை விதிக்கப்பட்ட சம்பவங்களையெல்லாம் ரசிகர்கள், அப்போது நினைவுபடுத்திக் கூறினர்.

கவுதம் கம்பீர் ட்வீட்
அதேநேரம், 2 பிட்ச் பந்து நோ பால் என்பதால் அதை தைரியமாக விட்டு கடாசினார் வார்னர், இதில் தப்பு இல்லை என்கிறது ஒரு தரப்பு. இப்படியான வாத விவாதங்கள் நடக்கும் நிலையில்தான், முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் கம்பீர் தனது ட்விட்டர் பதிவில் வார்னர் அடித்த இந்த ஷாட்டின் போட்டோவை பகிர்ந்துள்ளார். மேலும், கேம் ஸ்ப்ரிட்டுக்கு எதிரான மோசமான ஆட்டத்தை வார்னர் வெளிப்படுத்தியுள்ளார். வெட்கக் கேடு. என்ன சொல்கிறீர்கள் அஸ்வின். இவ்வாறு கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video

வார்னருக்கு பதிலடி
கவுதம் கம்பீர் பாகிஸ்தான் அணியை வறுத்தெடுப்பவர்தான். ஆனால் வார்னரை திடீரென அவர் விமர்சனம் செய்ய காரணம் இருக்கிறது. ஐபிஎல் தொடரில், அஸ்வின் பந்து வீசும்போது எதிர்முனையிலிருந்து முன்கூட்டியே கிரீசை விட்டு வெளியே செல்லும் பேட்ஸ்மேன்களை ரன் அவுட் செய்து விட்டார். பல நேரங்களில் ரன் அவுட் செய்வதாக எச்சரிக்கவும் செய்வார். இதைப் பற்றி ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேர் வார்னே விமர்சனம் செய்திருந்தார். இதெல்லாம் விளையாட்டின் ஸ்ப்ரிட்டுக்கு எதிரானது.. ஆஹா.. ஓஹோ என்று பாடம் நடத்தியிருந்தார் வார்னே. எனவேதான் அஸ்வினிடம், வார்னர் பற்றி கேள்வி எழுப்பி வார்னேவை மறைமுகமாக கிண்டல் செய்துள்ளார் கம்பீர்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications