ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து: டி20 மேட்ச்சில் எந்த டீம் கிங்? கோப்பை சான்ஸ் யாருக்கு? சுவாரசிய டேட்டா
துபாய்: 2021 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா ஞாயிற்றுக்கிழமையான நாளை, நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. துபாய் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டிக்காக இரு நாட்டைச் சேர்ந்த ரசிகர்கள் மட்டுமின்றி, மொத்த கிரிக்கெட் ரசிகர்களுமே காத்திருக்கின்றனர்.
ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானையும், நியூசிலாந்து இங்கிலாந்தையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. குரூப் ஸ்டேஜில் 2வது இடத்திலிருந்த இவ்விரு அணிகளும், முதலிடத்தை பிடித்த அணிகளை அரையிறுதியில், வீழ்த்தியது சிறப்பாகும்.
நியூசிலாந்து அணி 6 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்த தோல்விக்கு பழிவாங்குமா என்ற எதிர்பார்ப்பு இப்போது ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

50 ஓவர் உலக கோப்பை
2015ம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள்தான் சந்தித்தன. முதல் முறையாக உலகக் கோப்பை பட்டத்தை வெல்லும் நியூசிலாந்தின் கனவை ஆஸ்திரேலியா தகர்த்தது. நடப்பு டி20 உலகக் கோப்பையில் விளையாடும் மார்ட்டின் கப்டில், கேன் வில்லியம்சன், டிம் சவுத்தி மற்றும் டிரெய்ட் போல்ட் ஆகியோர் அந்த போட்டியில் நியூசிலாந்து அணியில் இடம்பிடித்திருந்தனர்.

தடுமாறிய நியூசிலாந்து
மெல்போர்னில் நடந்த இப்போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 45 ஓவர்களில் 183 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கிராண்ட் எலியட் 83 ரன்களும், ராஸ் டெய்லர் 40 ரன்களும் எடுத்தனர். இதன் போது நியூசிலாந்து அணியின் பிரெண்டன் மெக்கல்லம் உட்பட, நான்கு வீரர்கள் டக் அவுட் ஆகினார்கள். முதல் முறையாக நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் தடுமாற்றம் பேட்டிங்கில் நன்கு தெரிந்தது.

ஆஸ்திரேலியா வெற்றி
ஆஸ்திரேலியா அணி சார்பில் மிட்செல் ஜான்சன், ஜேம்ஸ் பால்க்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதே சமயம், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும், கிளென் மேக்ஸ்வெல் ஒரு விக்கெட்டும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி 33.1 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 186 ரன்களைப் பெற்று வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் ஐந்தாவது உலக கோப்பை பட்டம் அதுவாகும். கேப்டன் மைக்கேல் கிளார்க் 74 ரன்கள் எடுத்தார். அவரைத் தவிர, ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 56 ரன்களும், டேவிட் வார்னர் 45 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் மாட் ஹென்றி 2 விக்கெட்டும், டிரென்ட் போல்ட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

ஆஸ்திரேலியாவின் டி20 ரெக்கார்ட் மோசம்
ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி ஐந்து முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது. ஆனால் டி20 உலகக் கோப்பையில் இதுவரை ஒரு கோப்பை கூட வென்றது இல்லை. 2010 டி20 உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியை எட்டிய போதிலும், இங்கிலாந்து அவர்களை விரட்டி விட்டது. அதேநேரம் டி20 உலகக் கோப்பையில் நியூசிலாந்து அணி முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இவ்வாறான நிலையில் இறுதிப் போட்டி மிகவும் சுவாரஸ்யமாக அமைய வாய்ப்புள்ளது.

இரு அணிகளும் மோதிய போட்டிகள்
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இரண்டும் இதற்கு முன் 14 டி20 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன, அதில் 9 ஆட்டங்களில் ஆஸ்திரேலியா வென்றது. நியூசிலாந்து ஐந்து ஆட்டங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும், டி20 உலகக் கோப்பையில், நியூசிலாந்து-ஆஸி. ஒருமுறைதான் மோதியுள்ளன. இந்தியாவில் 2016ம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை தொடரில், நியூசிலாந்து 142 ரன்களை எடுத்த நிலையில், ஆஸ்திரேலியா 134 ரன்களை மட்டுமே எடுத்து தோற்றது. மிட்செல் மெக்லெனகன் 3 விக்கெட்டுகள், கோரி ஆண்டர்சன் மற்றும் மிட்செல் சான்ட்னர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். இதில் மிட்செல் சான்ட்னர் இப்போதைய நியூசிலாந்து அணியில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2019ம் ஆண்டு 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டி வரை முன்னேறியது நியூசிலாந்து. இங்கிலாந்தை எதிர்கொண்டு சூப்பர் ஓவர் வரை சென்றது நியூசிலாந்து. அந்த போட்டியில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை நியூசிலாந்து தவற விட்டதால் இந்த முறை டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் எப்படியும் வெற்றி பெற்று சாதிக்க வேண்டும் என்ற துடிப்புடன் இருக்கிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications