Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கெயில், பிராவோவிற்கு கிடைத்த ஸ்டாண்டிங் ஓவேஷன்.. கை தட்டிய ஆஸி. வீரர்கள்! சாதனை சிக்சர் விளாசிய ரஸல்

Subscribe to Oneindia Tamil

துபாய்: ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ தனது சர்வதேச கிரிக்கெட்டின் கடைசி இன்னிங்ஸை இன்று ஆடினார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்த போட்டிக்கு பிறகு, மேற்கிந்தியத் தீவுகள் டக்-அவுட் மற்றும் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எழுந்து நின்று கரகோசம் எழுப்பி அவருக்கு மரியாதை கொடுத்தனர்.

அபுதாபியில் டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 ஆட்டத்தில் இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிராவோ 10 ரன்கள் எடுத்தார். மேற்கிந்தியத் தீவுகளின் நட்சத்திர வீரரான பிராவோவிற்கு இதுதான் கடைசி சர்வதேச போட்டியாகும். மேற்கிந்திய தீவுகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்பதால், இதுதான் நடப்பு உலக கோப்பையில் அந்த அணியின் கடைசி ஆட்டமாக இருந்தது.

பிராவோ ஆட்டமிழந்த பிறகு ஆஸ்திரேலிய வீரர்கள் அவருக்கு கை கொடுத்து வாழ்த்தினர். டக்அவுட்டுக்கு திரும்பியபோது ஆண்ட்ரே ரஸ்ல் பிராவோவை கட்டிப்பிடித்தார். வெஸ்ட் இண்டீஸ் டக்அவுட், பிராவோவை பாராட்ட எழுந்து நின்று கை தட்டியது. ரசிகர்களும் எழுந்து நின்று கை தட்டினர். ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னரும், பிராவோவும் மைதானத்திலேயே ஒரு சூப்பர் நடனமும் போட்டனர்.

பிராவோ அறிமுகம்

பிராவோ அறிமுகம்

சூப்பர் 12 இன் நான்காவது குரூப் ஆட்டத்தில் இலங்கையிடம் மேற்கிந்தியத் தீவுகள் தோல்வியடைந்த பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ள தனது முடிவை பிராவோ உறுதிப்படுத்தினார். 38 வயதான அவர் 2004ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகள் அணிக்காக முதல் முறையாக அறிமுகமானார்.

பிராவோ பேச்சு

பிராவோ இதுபற்றி கூறுகையில், "எனக்கு மிகச் சிறந்த கிரிக்கெட் வாழ்க்கை இருந்தது. 18 ஆண்டுகளாக மேற்கிந்தியத் தீவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைத்தது. இங்கு சில ஏற்ற தாழ்வுகள் இருந்தன, ஆனால் நடந்தவற்றை திரும்பிப் பார்க்கும்போது எனது நாட்டு மக்களை பிரதிநிதித்துவப்படுத்தியதற்கு நான் மிகவும் மகிழ்ச்சியோடு இருக்கிறேன். மூன்று ஐ.சி.சி கோப்பைகளை வென்றபோது அணியில் இருந்துள்ளது பெருமையாக உள்ளது. இவ்வாறு பிராவோ தெரிவித்தார். 2012 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் மேற்கிந்தியத் தீவுகளின் இரண்டு T20 உலகக் கோப்பைகளை வென்றதில் பிராவோ முக்கிய பங்கு வகித்தார். அவர் 40 டெஸ்ட், 164 ODIகள் மற்றும் 90 T20 போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகளுக்காக ஆடியவராகும்.

கிறிஸ் கெயில்

கிறிஸ் கெயில்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இன்னிங்ஸில் 15 ரன்களில் ஆட்டமிழந்த பிறகு, தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெயிலுக்கும் மேற்கிந்திய தீவுகள் வீரர்களிடமிருந்து இதேபோன்ற வரவேற்பு அளிக்கப்பட்டது. நன்றியுணர்வின் சைகையாக தனது பேட்டை அவர் உயர்த்தி காட்டினார். கிறிஸ் கெயிலுக்கு இப்போது 42 வயது. அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக சர்வதேச ஆட்டங்களில் ஆடுவாரா என்பதை இன்னும் அவர் உறுதியாக தெளிவுபடுத்தவில்லை.

சாதனை சிக்ஸ்

சாதனை சிக்ஸ்

இதனிடையே, 18வது ஓவரில் பேட்டிங் செய்ய வந்த ஆண்ட்ரே ரசல், ஸ்டார்க் வீசிய ஷார்ட் பந்தை டீப் மிட் விக்கெட்டை நோக்கி ஒரு அற்புதமான புல் ஷாட்டை ஆடினார். ரஸ்ஸலின் ஷாட்டால் ஆஸ்திரேலியாவின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் கூட அப்படியே வியந்து போய் பார்த்தார். 111 மீட்டர் தூரத்திற்கு அந்த சிக்சர் இருந்தது. நடப்பு உலக கோப்பை தொடரிலேயே மிகப்பெரிய சிக்சர் இதுதான் என்ற சாதனையை அந்த சிக்ஸ் படைத்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+