துபாயில் வானத்தில் நடக்கும் மேஜிக்.. அடடே இப்படியொரு மாற்றத்தை யாருமே எதிர்பார்க்கல.. சூப்பர்ல
துபாய்: மத்தியக் கிழக்கு நாடுகளில் ஒன்றான துபாய் தொடர்ச்சியாகப் பல புதுமைகளைப் படைத்து வருகிறது. இதற்கிடையே அங்கு மின்சாரத்தில் ஏர் டாக்ஸியை கொண்டு வர முயற்சிகள் நடந்து வருகிறது. இன்னும் சில மாதங்களில் துபாய் முழுக்க இயங்கும் வகையில் ஏர் டாக்சியை அறிமுகப்படுத்தவுள்ளனர். அது துபாய் போக்குவரத்து நெட்வொர்க்கை மொத்தமாக மாற்றிய அமைக்கும் என தெரிகிறது.
மத்தியக் கிழக்கு நாடான துபாய், கச்சா எண்ணெய்யைத் தாண்டி தனது பொருளாதாரத்தை விரிவுபடுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக அது தொழில்நுட்பத்தில் அதிகம் முதலீடு செய்து வருகிறது. ஏற்கனவே, துபாய் தன்னை விமானப் போக்குவரத்தின் மையமாக மாற்றியுள்ள நிலையில், துபாய் இப்போது புதிய சாதனையைப் படைத்திருக்கிறது.

துபாயைச் சேர்ந்த ஜோபி ஏவியேஷன் என்ற நிறுவனம் மின்சார ஏர் டாக்ஸி சேவையை தொடங்கவுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் துபாயில் வணிக ரீதியான செயல்பாடுகளைத் தொடங்கவுள்ளன. இதனை துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் மத்தார் அல் தாயர், உறுதி செய்துள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவை தளமாகக் கொண்ட ஜோபி ஏவியேஷன் துபாயில் இந்த ஏர் டாக்சியை கொண்டு வந்துள்ளது. மின்சாரத்தில் இயங்கும் இந்த ஏர் டாக்சி செங்குத்து புறப்பாடும் மற்றும் தரையிறங்கும் திறன் கொண்டது. Joby Aerial Taxi என்ற இந்த ஏர் டாக்சி ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் (100 மைல்) தூரம் வரை பறக்கும் திறன்கொண்டது. மேலும், மணிக்கு 320 கிலோமீட்டர் (200மைல்) வேகத்தில் செல்லக்கூடியது. ஜீரோ கார்பன் எமிஷன், சத்தமில்லாமல் இயங்கும் திறன் என நகர்ப்புறப் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 2025இல், துபாயில் ஜோபி ஏவியேஷன் தனது மின்சார ஏர் டாக்ஸியின் முதல் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது. துபாயில் ஏற்கனவே போக்குவரத்து நெட்வொர்க் வலைப்பின்னல்களில் வலிமையாக இருக்கும் சூழலில், அதில் ஏர் டாக்சியும் இப்போது உள்ளே வந்துள்ளது. இது போக்குவரத்து நெட்வொர்க்கை மேலும், ஒருங்கிணைக்கும் என்றும் அது மிக முக்கிய முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக 2024ஆம் ஆண்டின் முற்பகுதியில், துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்துடன் ஜோபி ஏவியேஷன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு துபாய் நகரில் ஏர் டாக்ஸிகளை இயக்குவதற்கான பிரத்தியேக உரிமையை ஜோபி நிறுவனம் பெற்றுள்ளது. இந்த ஏர் டாக்ஸி வந்துவிட்டால் துபாய் போக்குவரத்து மேலும் டாப் லெவலுக்கு போகும்!
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications