போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல
துபாய்: மத்திய கிழக்கு மோதல் காரணமாகத் துபாயில் இருந்த மக்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் சிரமப்பட்டனர். இப்போது தான் நிலைமை ஓரளவுக்கு சீரடைந்து துபாய் விமான நிலையம் செயல்பட ஆரம்பித்துள்ளது. இதற்கிடையே துபாய் விமான நிலையத்தில் கிளம்ப வந்த பயணிகளுக்கு கிப்ட் கொடுத்து சர்ப்ரைஸ் செய்துள்ளது துபாய்.. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இஸ்ரேல்- அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் தொடர்ந்து வருகிறது. இந்த போர் காரணமாக மத்திய கிழக்கு பிராந்தியம் முழுக்க பதற்றம் ஏற்பட்டது. குறிப்பாக அமீரகம் இதனால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டது. ஈரானின் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களால் அமீரகம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது.

துபாய் ஏர்போர்ட்
குறிப்பாகத் துபாய் இதனால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. அங்கு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தங்கம் ஹோட்டல்கள் மீது தொடர்ச்சியாகத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மேலும், விமான நிலையத்திலும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் விமான சேவையும் கூட முடங்கிப் போனது. இதனால் அங்குள்ள வெளிநாட்டினர் தங்கள் தாயகம் திரும்ப முடியாமல் சிரமப்பட்டனர்.
நெகிழ்ந்த பயணிகள்
இப்போது தான் துபாயில் விமான போக்குவரத்து மெல்லச் சீராகி வருகிறது. அங்கிருந்து பயணிகள் வெளியேற ஆரம்பித்துள்ளனர். இதற்கிடையே வெளியேறும் பயணிகளுக்கு நினைவுப் பரிசுகளைக் கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது துபாய் சர்வதேச விமான நிலையம்.! இந்த திடீர் பரிசு பயணிகளின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது.
இது சின்ன விஷயம் தான் என்றாலும் நமது நாட்டிற்கு வந்துள்ள ஒருவர் போரால் பாதிக்கப்பட்டு வெளியேற முடியாமல் இருந்துள்ளார் என்பதை உணர்ந்து கிப்ட் கொடுத்துள்ளனர். இது இணையத்தில் பெரியளவில் பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. பலர் துபாயின் அன்பையும் விருந்தோம்பலையும் தான் இது பிரதிபலிப்பதாகக் கூறுகின்றனர்.
கிப்ட்
சர்வதேச அளவில் மிக முக்கியமான ஏர்போர்ட்டாக துபாய் இருக்கிறது. பயணிகளுக்கு மிகச் சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும் ஏர்போர்ட்டாக துபாய் உள்ள சூழலில், பயணிகளின் பொறுமைக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துபாய்-தீம் கொண்ட காந்தங்கள், கீ- செயின்கள் மற்றும் நன்றி தெரிவிக்கும் கார்டுகள் ஆகியவை வழங்கப்பட்டன. மேலும், துபாய் எப்போதுமே பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கும் என்ற உறுதிமொழியும் இடம்பெற்றிருந்தது.
இவை எல்லாம் மிகச் சாதாரண கிப்ட் தான் என்றாலும், புறப்படும் நேரத்தில் தரப்பட்ட இந்த பரிசுகள் உணர்ச்சிகரமான தருணங்களாக மாற்றியது. 2017 முதல் துபாயில் வசிக்கும் எகிப்தியரான ஆயா எல்பண்டரி, ஈத் விடுமுறைக்குப் புறப்படும்போது இந்த பரிசைப் பெற்றதாகவும் அப்போது தான் நெகிழ்ந்துபோனதாகவும் தெரிவித்தார். தான் வசிக்கும் இந்த நகரம் தன்னை தன்னைக் கவனிப்பதாகவும் தனது பொறுமைக்கு நன்றி தெரிவிப்பதையுமே இது உணரவைத்ததாகவும் அவர் கூறினார்.
பயணிகள் சொல்வது என்ன
இந்தியப் புலம்பெயர்ந்த கரீஷ்மா பெர்னாண்டஸ் என்ற பெண்ணும் தனது பெற்றோரை வழியனுப்பி வைத்தபோது இதேபோன்ற அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். பெற்றோரை விமான நிலையத்தில் விடும்போது வந்த இந்தப் பரிசுகள் ஆறுதலையும் உறுதியையும் அளித்ததாக அவர் குறிப்பிட்டார். அவரது பெற்றோருக்கு முதலில் எதற்காக இந்த கிப்ட் என்பது புரியவில்லை. ஆனால், துபாய் அரசு தரப்பில் இருந்து தரப்படும் கிப்ட் என்பதைத் தெரிந்தவுடன் அவர்கள் நெகிழ்ந்து போனார்கள்.
விமான பயணிகள் மேலும் கூறுகையில், "இந்த செயல் ஆறுதல் அளிப்பதாகவே உள்ளது. துபாய் தனது பயணிகள் மீது எந்தளவுக்கு அக்கறை காட்டுகிறது என்பதையே இது பிரதிபலிக்கிறது. உலகெங்கும் பல்வேறு நகரங்களில் உள்ள ஏர்போர்ட்களில் பல காரணங்களால் பயண தடை ஏற்பட்டு இருக்கலாம். ஆனால், இதுபோல தனிப்பட்ட முறையில் கிப்ட் கொடுப்பது என்பது துபாய்க்கு மட்டுமே உரித்தானது. இதுவே துபாயைத் தனித்துவமாகக் காட்டுகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications