துபாயில் வசிக்கும் இந்தியர்களுக்கு குட் நியூஸ்! ரூ.12 லட்சமாக இருந்தாலும் கூட வாடகை செலுத்துவது ஈஸி!

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில் வீட்டு வாடகை செலுத்தும் முறையில் புதிய மாற்றம் வர உள்ளது. இப்போது அங்கு ஓராண்டுக்கான வீட்டு வாடகையை ஒரே தவணையாக செலுத்த வேண்டிய நிலையில் அதற்கு மாற்றாக, "Rent Now, Pay Later" என்ற புதிய திட்டத்தை செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்த துபாய் அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் கீழ் 12 மாதங்கள் வரை வாடகையை வட்டி இல்லாமல் சிறுக சிறுக திரும்ப செலுத்த முடியும்.

நமது நாட்டில் இருந்து பலரும் அமீரகத்திற்கு, குறிப்பாக துபாய்க்கு வேலைக்கு செல்கிறார்கள். அப்படி செல்வோர் அங்கு வாடகைக்கே வீடு எடுத்து தங்குகிறார்கள். துபாய் நடைமுறையின்படி நம் ஊரை போல மாதாமாதம் எல்லாம் வாடகை செலுத்த முடியாது. மாறாக அங்கு ஓராண்டுக்கான வாடகையை முன்கூட்டியே செலுத்திவிட வேண்டும். ஆனால், ஓராண்டுக்கான வாடகை என்பதால் பெரிய தொகை வரும். அதை சட்டென ரெடி செய்வது பலருக்கும் சிரமத்தையே ஏற்படுத்துவதாக இருக்கும்!

Dubai UAE India

புதிய திட்டம்

இந்தச் சூழலில் தான் துபாய் லேண்ட் டிபார்ட்மெண்ட், அந்நாட்டின் உள்ளூர் வங்கி ஒன்றுடன் இணைந்து "Rent Now, Pay Later" என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிகிறது. தற்போது பரிசீலனையில் உள்ள இந்த திட்டத்தின் கீழ், ஒருவர் துபாயில் ஒரு வீட்டை தேர்வு செய்த பிறகு, அந்த வீட்டுக்கான ஓராண்டு வாடகையை முதலில் வங்கியே வீட்டு உரிமையாளருக்கு ஒரே தவணையாக செலுத்திவிடும்!

அதன் பிறகு, வீட்டில் வசிக்கும் நபர் அந்த வங்கிக்கு வாடகை தொகையை மாதாந்திர தவணைகளாக செலுத்தலாம். முக்கியமாக, இந்த தொகையை 12 மாதங்கள் வரை வட்டியில்லாமல் திருப்பிச் செலுத்தும் வகையில் திட்டம் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ஒருமுறை பெரிய தொகையை ஏற்பாடு செய்ய வேண்டிய நெருக்கடி வாடகைதாரர்களுக்கு இனி இருக்காது.

பிரித்து தரலாம்

உதாரணமாக ஒரு வீட்டின் ஆண்டு வாடகை ரூ.12 லட்சம் என்றால்.. தற்போதுள்ள நடைமுறையின்படி அந்த முழு தொகையையும் ஒரே தவணையாக செலுத்த வேண்டும். திடீரென இவ்வளவு பெரிய தொகையை ரெடி செய்வது பலருக்கும் சவாலாகவே இருந்தது. இதை கருத்தில் கொண்டே இந்த புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி இனிமேல் அந்த ரூ.12 லட்சத்தை உரிமையாளருக்கு வங்கி செலுத்திவிடும். நீங்கள் மாதம் ரூ.1 லட்சம் என அடுத்த 12 மாதங்களுக்கு வங்கிக்கு அந்த தொகையை செலுத்தலாம். இதன் மூலம் பெரிய தொகையை புரட்டும் சிரமம் குறையும்.

விதிகள்

இந்த திட்டத்திற்கான முழுமையான விதிமுறைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. அதாவது யார் தகுதியானவர்கள், எப்படி விண்ணப்பிப்பது, எந்த வீடுகளுக்கு இந்த திட்டம் கிடைக்கும், வங்கிகள் இதில் என்ன செய்யும், தவணை செலுத்தும் நடைமுறை உள்ளிட்ட விவரங்கள் இந்த திட்டம் தொடங்கப்படும் போது தெரிய வரும்! இருப்பினும், வாடகைதாரருக்கு சற்று நிம்மதியை கொடுக்கும் அதேநேரம், வீட்டு உரிமையாளருக்கு முழு வாடகையையும் முன்கூட்டியே கொடுப்பதுமே இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமாக உள்ளது.

இந்த திட்டம் திட்டமிட்டபடி அறிமுகப்படுத்தப்பட்டால், வாடகை சந்தையில் இதுபோன்ற ஒரு திட்டத்தை அமல்படுத்திய முதல் நகரமாக துபாய் மாறும். இதன் மூலம் வாடகைதாரர்களுக்கு அதிக நிதி சுதந்திரம் கிடைப்பதுடன், வீடுகளை வாடகைக்கு எடுப்பதும் எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னோடி திட்டம்

முன்னதாக இந்த திட்டத்திற்கு முன்னோடியாக கடந்த ஜூன் 23ஆம் தேதி 'Flexi Rent' என்ற திட்டத்தை துபாய் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் வாடகையை ஆண்டுக்கு ஒருமுறை செலுத்துவதற்கு பதிலாக, மாதம் மாதம், காலாண்டுக்கு ஒருமுறை அல்லது 6 மாதங்களுக்கு ஒருமுறை என பல்வேறு தவணை முறைகளில் செலுத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த திட்டத்தில் பங்கேற்கும் நிறுவனங்கள் சில சலுகைகளும் வழங்கப்பட்டன. அதற்கு மிக சிறந்த வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்தே அடுத்த கட்டமாக இந்த திட்டத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+