இதுக்கு பெங்களூர் எவ்வளவோ மேல்.. 2 மணி நேரத்தில் 100 மீட்டர் கூட நகரல.. கதறவிடும் துபாய் டிராபிக்
துபாய்: பெங்களூர் டிராபிக் குறித்து நாம் தனியாகச் சொல்லத் தேவையில்லை. ஆனால், பெங்களூர் டிராபிக்கையே காலி செய்யும் வகையில் துபாயில் சில பகுதிகளில் டிராபிக் ஆகிறதாம். சுமார் 2 மணி நேரம் கடந்தும் கூட 100 மீட்டர் கூட செல்லவில்லை எனப் புலம்பித் தள்ளி இருக்கிறார் துபாயில் வசிக்கும் நபர்! இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
துபாயில் சூப்பர் கண்டிஷனில் இருக்கும் சாலைகளும், டிராபிக் இல்லாத ரோடுகளையும் நாம் பார்த்திருப்போம், ஆனால், உண்மையில் துபாயில் எல்லா இடங்களுமே அப்படி இருப்பதில்லை. அங்கும் கூட சில இடங்களில் மிக மோசமான டிராபிக் நெரிசல் இருக்கவே செய்கிறதாம். இது தொடர்பாக இப்போது வெளியாகியுள்ள வீடியோ, அங்கு துபாய் பிசினஸ் பேயில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலை அம்பலப்படுத்தியுள்ளது.

துபாய் டிராபிக்
அங்கு அலுவலகம் முடிந்து கிளம்பிய ஒரு பெண், சுமார் இரண்டு மணி நேரம் ஒரே இடத்தில் வாகன நெரிசலில் சிக்கித் தவித்துள்ளார். இந்த வீடியோவை அவரது சக ஊழியர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். ரியல் எஸ்டேட் ஏஜெண்டான பர்ஹான் பஷீர் என்பவர் இந்த வீடியோவை முதலில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். "துபாய் பிசினஸ் பேயின் நிலைமை" என்ற தலைப்புடன் இந்த வீடியோவை அவர் பகிர்ந்தார்.
அதில் அங்கு மிகக் கடுமையான டிராபிக் நெரிசல் இருப்பது தெளிவாகத் தெரிகிறது. அந்தப் பெண் ஊழியர் மாலை 6:30 மணிக்கு அவரது அலுவலகத்தை விட்டுக் கிளம்பியிருக்கிறார். சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகும் கூட அவர் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டர் கூட தாண்டவில்லையாம். இத்தனை காலம் அவர் அந்த ஒரே இடத்தில் இருந்ததாக பஷீர் விளக்குகிறார்.
போக்குவரத்து ஆணையம்
இந்த வீடியோ பார்க்க காமெடியாக இருந்தாலும் கூட துபாயில் சில இடங்களில் டிராபிக் எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது.. இதனால் மக்கள் எந்தளவுக்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பஷீர் தனது போஸ்ட்டில் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தையும் டேக் செய்துள்ளார். டிராபிக் மிக மோசமாக இருப்பதாகவும் இதைச் சரி செய்ய நடவடிக்கை வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அவர் தனது போஸ்ட்டில் மேலும், "இந்த தீவிரமான பிரச்சினையைத் தீர்க்க துபாய் போக்குவரத்து ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கேட்டுக்கொள்கிறேன். நெரிசலாக இருந்தாலும் போக்குவரத்து நகர்ந்து கொண்டிருந்தால் அது புரிகிறது. ஆனால், தினமும் கிட்டத்தட்ட 2 மணி நேரம் ஒரே இடத்தில், குறிப்பாகப் பிரிசம், ரீகல் மற்றும் ஒன் பை ஓம்னியாக் கோபுரங்களுக்கு அருகில் சிக்கிக் கொள்கிறார்கள்!" என்று அவர் தனது வேதனையை வெளிப்படுத்தினார்.
விளக்கம்
அவரது இந்த போஸ்ட் சமூக வலைத்தளங்களில் டிரெண்டான நிலையில், துபாய் போக்குவரத்து ஆணையமே நேரடியாக அதற்குப் பதிலளித்துள்ளது. போக்குவரத்து நெரிசல் இருப்பது உண்மை தான் என்றும் அதைக் குறிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. அது மேலும், "பிசினஸ் பே பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சாலை நெட்வொர்க்கின் மேம்பாடு நடைபெற்று வருகிறது. அல் முஸ்தக்பல், அல் போர்சா, அல் சுகுக் சாலைகள் மற்றும் ஷேக் சயீத் சாலையில் உள்ள டிரேட் சென்டர் ரவுண்டானா மறுவடிவமைப்பு ஆகிய பணிகள் நடந்து வருகிறது. 2026 முதலாம் காலாண்டில் இதற்கான பணிகளை ஆரம்பிக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளது.
பெங்களூர் டிராபிக்
இதற்கிடையில் நெட்டிசன்கள் சிலர் துபாயின் இந்த டிராபிக்கை பெங்களூர் டிராபிக் உடன் ஒப்பிட்டுப் பதிவிட்டு வருகிறார்கள். துபாய் பேயின் டிராபிக் சென்னை டிராபிக்கையே நினைவுபடுத்துவதாகப் பதிவிட்டு வருகிறார்கள். இன்னும் சிலர் 2 மணி நேரத்தில் 100 மீட்டர் கூட நகரவில்லை என்பது பெங்களூரை விட மோசம் எனப் பதிவிட்டுள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications