துபாய் டூ அபுதாபி இவ்வளவு சீக்கிரம் போக முடியுமா! கலக்கல் ரயில் திட்டத்தை அறிவித்த எதிஹாட்!
துபாய்: ஐக்கிய அமீரகத்தில் பொது போக்குவரத்தை மேம்படுத்தும் சூப்பர் திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் முக்கியமானது ஐக்கிய அமீரகம். அந்த நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் கச்சா எண்ணெய்யை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்பட்டது என்று சொல்லலாம்.
கச்சா எண்ணெய் வளம் என்பது ஒரு கட்டத்தில் கண்டிப்பாகத் தீர்ந்துவிடும். இதனால் ஐக்கிய அமீரகம் தனது பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் நடவடிக்கையில் கடந்த சில ஆண்டுகளாகவே ஈடுபட்டு வருகிறது.

ஐக்கிய அமீரகம்
ஐக்கிய அமீரகத்தை ஒரு சுற்றுலா மையம் மற்றும் தொழில் முனையமாக மேம்படுத்த வேண்டும் என்பதே அந்நாட்டு அரசின் நோக்கம். செயற்கை தீவுகள் வானுயர்ந்த கட்டிடங்களை இதற்குத் தான் அந்நாட்டு அரசு தொடர்ந்து கட்டி வருகிறது. மேலும், உள்கட்டமைப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகளிலும் அந்நாட்டு அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதனிடையே போக்குவரத்தை மேம்படுத்த அந்நாட்டு அரசுக்குச் சொந்தமான எதிஹாட் புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

எதிஹாட் ரயில்
எதிஹாட் நிறுவனம் இப்போது எதிஹாட் ரயில் என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. எதிஹாட் ரயிலின் இந்த முதல் பயணிகள் ரயில் நிலையம் அங்குள்ள புஜைராவில் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் 11 பகுதிகளை இணைக்கும் என்றும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு வசிக்கும் பல லட்சம் மக்கள் பயன் பெறுவார்கள்.

145 கிலோமீட்டர்
இந்தத் திட்டம் ஐக்கிய அமீரகத்தின் பொது போக்குவரத்தையே மாற்றி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷார்ஜாவிலிருந்து ஃபுஜைரா துறைமுகம் மற்றும் ராஸ் அல்-கைமா வரை 145 கிலோமீட்டர் நீளத்திற்கு ரயில் பாதை அமைக்கப்படுகிறது. ரயில் கட்டுமான பணிகள் இப்போது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் எதிஹாட் ரயிலின் தலைவர் ஷேக் தியாப் பின் முகமது கட்டுமான பணிகளைப் பார்வையிட்டார்.

ஆய்வு
அப்போது புஜைராவிலிருந்து சிலா வரையிலான அபுதாபியின் மேற்குப் பகுதிகளை இணைக்கும் ரயில் பணிகளை அவர் ஆய்வு செய்தார். எதிஹாட் ரயில் பாதை முழுமையாக முடிந்து, 2030க்குள் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் முக்கிய நகரங்களுக்கு இடையே ஆண்டுதோறும் லட்சக் கணக்கான பயணிகள் விரைவாகப் பயணம் கொள்ளலாம்.

50 நிமிடங்கள்
இதன் மூலம் அபுதாபியில் இருந்து துபாய்க்கு 50 நிமிடங்களிலும், அபுதாபியில் இருந்து ஃபுஜைராவுக்கு 100 நிமிடங்களிலும் பயணிக்க முடியும். பயணிகள் சேவை எப்போது தொடக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இந்த ரயிலை ஐக்கிய அமீரகத்திற்கு வெளியே கூட விரிவுபடுத்தும் வாய்ப்புகளும் கூட உள்ளது. தேவைப்பட்டால் ஐக்கிய அமீரகத்தின் அண்டை நாடுகளுக்கும் இதை நீடிக்கலாம்.

‘Projects of the 50’
இத்திட்டம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முன்மொழிந்த 'Projects of the 50' திட்டங்களின் கீழ் வருகிறது. இது ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வளர்ச்சியை விரிவுபடுத்தவும் அனைத்து துறைகளிலும் ஐக்கிய அமீரகத்தை மையமாக மாற்றவும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதே இந்த 'Projects of the 50' திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்காக 326.7 மில்லியன் டாலர் மதிப்பிலான ரயில் திட்ட ஒப்பந்தம் எதிஹாட் ரயில் மற்றும் ஸ்பெயினின் CAF நிறுவனத்திற்கு இடையே போடப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications