துபாய் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'பிளாக் சைட்..' துபாயிலுள்ள ரகசிய சிறை.. சித்தரவதை, நாடு கடத்தல்களை செய்யும் சீனா? பரபர தகவல்

Google Oneindia Tamil News

துபாய்: துபாய் நாட்டில் சீனாவின் ரகசிய சிறை இருப்பதாகப் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ள 26 வயதான வு ஹுவான், அங்கு தன்னை கடத்தி சென்ற சீன அதிகாரிகள் அச்சிறையில் ஒருவாரம் அடைத்து வைத்திருந்ததாகவும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

பொதுவாக அமெரிக்கா தனது நாட்டிற்கு வெளியே பிளாக் சைட் எனப்படும் விசாரணை நிலையங்களை வைத்திருக்கும். மோசமான பயங்கரவாதிகளிடம் இதுபோன்ற பிளாக் சைட்களில் தான் விசாரணை நடத்தப்படும்.

இன்னும் 3 நாட்களில்.. இந்த 6 மாவட்டங்களில் மழை கொட்டப் போகுது.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு! இன்னும் 3 நாட்களில்.. இந்த 6 மாவட்டங்களில் மழை கொட்டப் போகுது.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

பிளாக் சைட்களில் பயங்கரவாதிகள் மிக மோசமான முறையில் நடத்தப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது. இதேபோல சீனாவும் தனது நாட்டிற்கு வெளியே பிளாக் சைட்களை வைத்துள்ளதாகக் கடந்த சில ஆண்டுகளாகவே தகவல் வெளியாகி வருகிறது. இருப்பினும், இத்தகவலை உறுதிப்படுத்தும் விதமாகச் சீனாவைச் சேர்ந்த 26 வயதான வு ஹுவான் என்ற பெண் பல அதிர்ச்சி தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

பிளாக் சைட்

பிளாக் சைட்

வு ஹுவானின் வருங்கால கணவர் சீன அரசைத் தொடர்ந்து மிகக் கடுமையாக விமர்சித்து வருபவர்களில் ஒருவர். இந்தச் சூழலில் கடந்த சில வாரங்களுக்கு முன், துபாயிலுள்ள ஒரு விடுதியிலிருந்து சீன அதிகாரிகள் சிலர் தன்னை கடத்தியதாகவும் பின்னர் சிறையாக மாற்றப்பட்ட வில்லா ஒன்றில் தன்னை 8 நாட்கள் வரை அடைத்து வைத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அங்கு உய்கர் இன முஸ்லீம்கள் இரண்டு பேர் அடைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

8 நாட்கள்

8 நாட்கள்

அங்கிருந்த அதிகாரிகள் சீன மொழியில் மிரட்டியதாகவும் வருங்கால கணவர் மீது புகார் அளிக்கும் வகையிலான சில சட்ட ஆவணங்களில் கையெழுத்திட வேண்டு கட்டாயப்படுத்தியதாகவும் வு ஹுவான் கூறினார். 24 மணி நேரமும் அதீத வெளிச்சம் இருக்கும் ஒரே அறையில் அடைத்து தன்னை கொடுமைப் படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன் பிறகு கடைசியில் ஜூன் 8ஆம் தேதி அவரை சீன அதிகாரிகள் விடுவித்துள்ளனர். அவர் இப்போது நெதர்லாந்தில் தஞ்சம் புகுந்து அடைக்கலம் கோரியுள்ளார்.

பாதுகாப்பு வல்லுநர்கள்

பாதுகாப்பு வல்லுநர்கள்

சீன நாட்டிற்குள் இதுபோன்ற பிளாக் சைட்கள் இருப்பது வழக்கமான ஒன்று என்றாலும்கூட அந்நிய மண்ணிலும்கூட சீனா பிளாக் சைட் வைத்துள்ளதற்கு இது தான் முதல் சான்று. சர்வதேச நாடுகளிடம் அழுத்தம் தரும் சீனா, வெளிநாடுகளில் இருக்கும் சீன மக்களை நாடு கடத்துவதற்கும் மிரட்டுவதற்கும் இதுபோன்ற பிளாக் சைட்களை பயன்படுத்தலாம் எனப் பாதுகாப்பு வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர். அதேநேரம் வு ஹுவானின் கூறியதை யாராலும் நேரடியாக உறுதி செய்ய முடியவில்லை.

சீனா சொல்வது என்ன

சீனா சொல்வது என்ன

இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகளைச் சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் முற்றிலுமாக மறுத்துள்ளது. அந்த பெண் கூறுவதில் எந்தவித உண்மையும் இல்லை எனச் சீன வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாகத் துபாய் இதுவரை எந்தவொரு கருத்தும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை. சீனாவுக்கு வெளியே அந்நாடு பிளாக் சைட்கள் அமைத்ததற்கான சான்றுகள் குறைவாகவே உள்ளதாகத் தெரிவித்துள்ள பாதுகாப்பு வல்லுநர்கள், பொதுவாக விசாகளை முடக்குவது, சீனாவிலுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு அழுத்தம் கொடுப்பது ஆகியவை மூலம் தேவைப்படும் நபர்களை மீண்டும் தனது நாட்டிற்கு வரவழைக்கும்.

துபாய்

துபாய்

ஆனால், துபாயில் இப்போது என்ன நடந்துள்ளது என்பது குறித்துத் தெளிவான தகவல்கள் இல்லை. ஏனென்றால், கடந்த காலங்களில் கனடா, இந்தியா ஆகிய நாடுகளின் குடிமகன்கள் துபாயில் இதேபோல தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் தற்போதுள்ள சூழலை அங்கு என்ன நடந்தது எனத் தெளிவாகத் தெரியவில்லை.

Recommended Video

    Afghanistan-ல் உள்ள இந்தியர்களை மீட்க களமிறக்கப்பட்ட C 17 Globemasters விமானம்
    என்ன நடந்தது

    என்ன நடந்தது

    கடந்த மே 27ஆம் தேதி துபாயிலுள்ள ஒரு விடுதியிலிருந்து சீன அதிகாரிகள் தன்னை கைவிலங்கு போட்டு அழைத்துச் சென்று ஒரு வில்லாவில் தன்னை அடைத்ததாகவும், அங்குப் பல நாட்கள் தன்னிடம் சீன மொழியில் விசாரணை நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அங்கு உய்கர் இன முஸ்லீம் பெண்கள் இருவரைக் கண்டதாகவும் தெரிவித்துள்ளார். அங்கிருந்து விடுவிக்கப்பட்டவுடன் துருக்கி நாட்டிற்குச் சென்ற வு ஹுவான் இப்போது அவரது வருங்கால கணவருடன் உள்ளார். இருவரும் நெதர்லாந்து நாட்டில் அடைக்கலம் கோரி விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    A young Chinese woman says she was held for eight days at a Chinese-run secret detention facility in Dubai along with at least two Uyghurs, in what may be the first evidence that China is operating a so-called “black site” beyond its borders.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X