பாகிஸ்தானிடம் பாடம் கற்றுள்ளோம்; இந்திய அணியை வீழ்த்த திறமை மட்டும் போதாது: நியூசிலாந்து கோச் பேட்டி

Subscribe to Oneindia Tamil

துபாய்: இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் முக்கியத்துவத்தை நியூஸிலாந்து அணி உணர்ந்து இருப்பதாக அந்த அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டீட் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியில் மிகவும் திறமையான வீரர்கள் இருப்பதால் அதை வெல்ல, நியூசிலாந்திற்கு திறமை மட்டும் போதாது என்றும் அதிர்ஷ்டமும் தேவைப்படும் என்றும் அவர் தனது பேட்டியின் போது தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அடுத்தடுத்து தோல்வியை தழுவியுள்ள நிலையில் இவ்விரு அணிகளும் வரும் ஞாயிற்றுக்கிழமை துபாய் சர்வதேச மைதானத்தில் மோத உள்ளன. இதில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அது அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

பாகிஸ்தான் திடீர் எழுச்சி

பாகிஸ்தான் திடீர் எழுச்சி

நியூசிலாந்து அணியின் பயிற்சியாளர் கேரி ஸ்டீட் அளித்த பேட்டி: கிரிக்கெட் போட்டியில் எதையும் கணிக்க முடியாது. குரூப் பி பிரிவில் இப்போது பாகிஸ்தான் முதலிடம் பிடிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இதை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். பிற அனைத்து அணிகளுமே இரண்டாவது இடத்தை பிடிக்க போட்டி போடும் நிலை உருவாகியுள்ளது.

பாடம் கற்றுள்ளோம்

பாடம் கற்றுள்ளோம்

இந்திய அணி முழுக்க கிளாஸ் வீரர்களை கொண்ட அணி. அதேநேரம், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் கற்ற பாடத்தை நியூசிலாந்து நினைவில் வைத்து, இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக ஆடும் என்ற நம்பிக்கை உள்ளது. எந்த அளவுக்கு போராட முடியுமோ அந்த அளவுக்கு நியூசிலாந்து அணி போராடி போட்டியை முன் எடுத்துச் செல்ல வேண்டும். இந்திய அணிக்கு எதிரான போட்டியை வென்றால், அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிடும்.

Recommended Video

    Reasons behind Pakistan win against New Zealand | T20 World Cup 2021 | OneIndia Tamil
    முக்கியமான போட்டி

    முக்கியமான போட்டி

    இந்தியாவுக்கு எதிரான போட்டி எவ்வளவு முக்கியமானது என்பதை, நியூசிலாந்து அணி உணர்ந்துள்ளது. உலக கோப்பை தொடங்கும் முன்பாக கோப்பையை வெல்லும் அணியாக கணிக்கப்பட்டது இந்தியாதான். எனவே அவர்களுக்கு எதிரான போட்டியில் திறமை மட்டுமல்லாது, அதிருஷ்டமும் தேவைப்படும்.

     கடைசி வரை போராடினோம்

    கடைசி வரை போராடினோம்

    வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவார் என்று நியூசிலாந்து எதிர்பார்த்தது. சக வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் முன்னதாக ஆட்ட நாளில் கணுக்கால் காயத்தால் போட்டியிலிருந்து வெளியேறினார். இருப்பினும், மில்னே அணியில் அதிகாரப்பூர்வமாக இணைவதற்கான அனுமதி ஐசிசியால் வழங்கப்படவில்லை.

    ஆடம் மில்னே

    ஆடம் மில்னே

    ஷார்ஜா ஆடுகளத்தில் நியூசிலாந்திற்கு மில்னே சிறப்பாக செயல்பட்டிருக்க முடியும். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ரவுஃப், 4 விக்கெட்டுகளை வீழ்த்தி 22 ரன்கள் மட்டுமே கொடுத்தார். மில்னேவும் இதேபோன்ற பங்களிப்பை நியூசிலாந்துக்கு செய்து கொடுத்திருக்க முடியும்.

     3 முறை அணியை மாற்றினோம்

    3 முறை அணியை மாற்றினோம்

    எங்களுக்கு மிகவும் குழப்பமான விஷயங்கள்தான் நடந்தன. ஏனெனில் நாங்கள் மூன்று முறை அணியை மாற்றினோம். ஆடம் விளையாடுவதற்கான அனுமதியைப் பெறுவோம் என்று முதலில் நாங்கள் நினைத்தோம், ஆனால் பின்னர் நிராகரிக்கப்பட்டோம். விளையாட்டு தொடங்குவதற்கு ஒன்றரை மணிநேரம் முன்பு வரை நாங்கள் ஐசிசியிடம் விண்ணப்பித்துக் கொண்டே இருந்தோம். ஐசிசி அனுமதிக்காதது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். இவ்வாறு கேரி ஸ்டீட் தெரிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+