அடி தூள்.. ஆப்கானிஸ்தான், நியூசிலாந்தை பின்னால் தள்ளியாச்சு.. நெட் ரன் ரேட்டில் இந்திய அணி முதலிடம்
துபாய்: அடித்து கிளப்பி இந்திய அணி ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளை நெட் ரன் ரேட்டில் முந்தை முதலிடம் பிடித்து சாதித்துள்ளது இந்தியா.
இந்திய அணி ஆரம்பத்தில் பாகிஸ்தானுடன் அதிர்ச்சி தோல்வியடைந்த நிலையில், அதே அதிர்ச்சியில், அடுத்த ஆட்டமும் நியூசிலாந்துடன் தோற்றது.
எனவே இப்போது இந்திய அணி அரையிறுதி போக அனைத்து அணிகளையும் ஈவு இரக்கம் பார்க்கால் அடித்து வென்றாக வேண்டிய நிலையில் உள்ளது.

பாசிட்டிவ் ஸ்டார்ட்
குரூப் 2ல் இந்தியா இடம் பிடித்துள்ளது. ஆப்கனுக்கு எதிராக 66 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றதன் மூலம், இந்திய அணியின் ரன் ரேட் பாசிட்டிவ் அதாவது பிளஸ்சாக மாறியது. இருப்பினும் நியூசிலாந்து அணி ஆப்கன் அணியோடு தோற்றால், இந்தியாவா அல்லது நியூசிலாந்தா யார் அரையிறுதி போவார்கள் என்பதை தீர்மானிக்க நெட் ரன் ரேட் விஷயம் கையில் எடுக்கப்படும். எனவே, இந்திய அணி ரன் ரேட்டை அதிகரிக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும். அதைத்தான் இன்றும் செய்தது.

அசத்திய ரோகித் சர்மா, ராகுல்
ஸ்காட்லாந்து 85 ரன்களில் சுருண்ட நிலையில், அதை இந்திய அணி 7.3 ஓவர்களில் சேஸ் செய்தால், ஆப்கானிஸ்தான் வைத்துள்ள ரன் ரேட்டை இந்தியா முந்தும் என்பது கணிப்பாக இருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு ஈடாக, ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் சிறப்பாக ஆடினார்கள். 19 பந்துகளில் 50 விளாசினார் ராகுல், 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார் ரோகித் சர்மா. 12 பந்துகளில் இங்கிலாந்துக்கு எதிராக யுவராஜ் சிங் அரை சதம் விளாசியது இந்திய வீரர் ஒருவரின் சாதனையாக உள்ளது. இந்த வரிசையில், கே.எல்.ராகுல் இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.

பவர் பிளே சாதனை
4.5 ஓவர்களில் 70 ரன்களை கடந்த இந்திய அணி, நடப்பு உலக கோப்பையில், பவர் பிளேயில் இத்தனை ரன்களை குவித்த முதல் அணியாக மற்றொரு சாதனையை பதிவு செய்துள்ளது. 6.3 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை ஊதி தள்ளியது. நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தானை விட ரன் ரேட்டில் உயர்ந்து டாப் இடத்திற்கு வந்து விட்டது இந்தியா.

இந்தியா டாப்
குரூப் 2ல் இந்தியா பிளஸ் 1.619 நெட் ரன் ரேட்டுடன் முதலிடம் பிடித்துள்ளது. நியூசிலாந்து பிளஸ் 1.277 ரன் ரேட்டையும், ஆப்கானிஸ்தான், பிளஸ் 1.481 ரன் ரேட்டையும் வைத்துள்ளது. பாகிஸ்தான் என்னதான் 4 போட்டிகளில் வென்றிருந்தாலும் நெட் ரன் ரேட் பிளஸ் 1.065 என்ற அளவில்தான் உள்ளது. அதாவது எளிதாக எதிரணியை அது வீழ்த்தவில்லை. போராடி வீழ்த்தியுள்ளது. இருப்பினும் வெற்றிதான் கணக்கில் சேர்க்கப்படும் என்பதால் அது அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டது. ஆனால் நெட் ரன் ரேட்டில் முதலிடம் பிடித்தாலும், லேட் பிக்கப்பாக கடைசி நேரத்தில் இந்தியா சரவெடி காட்டுவதால், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தானோடு நாளை மறுநாள் தோற்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டிருக்க வேண்டியுள்ளது.

நியூசிலாந்து தோற்பது அவசியம்
அது நடந்தால், அதன் பிறகு நமீபியாவை இந்தியா அதிக ரன் ரேட்டில், வீழ்த்தினால் அரையிறுதிக்குள் போய் விடலாம். ஒருவேளை ஆப்கன் நியூசிலாந்திடம் தோற்றால், இந்தியா நெட் ரன் ரேட்டை இப்படி வைத்திருந்தாலும், வீட்டுக்குதான் போக வேண்டும்.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா












Click it and Unblock the Notifications