பாஸ்போர்ட் விதிகளில் முக்கிய மாற்றம்! திருமண சான்றிதழ் தேவையில்லை.. துபாய் தூதரகம் மேஜர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

துபாய்: மக்கள் எளிதாக பாஸ்போர்ட் பெறுவதை உறுதி செய்ய மத்திய அரசு அதில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகிறது. இதற்கிடையே இப்போது வெளியுறவுத் துறை அறிவித்துள்ள புதிய விதிகளின்படி ஐக்கிய அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்கள் திருமண சான்றிதழ் இல்லாமலேயே தங்கள் பார்ட்னர் பெயரை பாஸ்போர்ட்டில் சேர்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் வேலை தேடி வெளிநாட்டிற்குச் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்தே வருகிறது. அதிலும் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் வாழும் மிகப் பெரிய வெளிநாட்டுச் சமூகங்களில் ஒன்றாக இந்தியச் சமூகம் தொடர்ந்து இருக்கிறது.

Indian Consulate in Dubai Allows Spouse s Name on Passport Without Marriage Certificate

பாஸ்போர்ட்

வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் ஆவணம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். வெளிநாடு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பாஸ்போர்ட் செயல்முறையிலும் மத்திய அரசு பல மாற்றங்களைச் செய்து வருகிறது. அதன்படி தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றத்தின்படி ஒருவர் திருமண சான்றிதழ் இல்லாமலேயே பார்ட்னரின் பெயரை பாஸ்போர்ட்டில் சேர்க்க முடியும்.

திருமண சான்றிதழ் தேவையில்லை

அதாவது இதுவரை ஒருவர் தனது பாஸ்போர்ட்டில் பார்ட்னர் (கணவர் அல்லது மனைவி) பெயரைச் சேர்க்கத் திருமண சான்றிதழைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற விதி இருந்தது. அப்படி திருமண சான்றிதழைச் சமர்ப்பித்தால் மட்டுமே கணவர் அல்லது மனைவி பாஸ்போர்ட்டில் சேர்க்க முடியும். இருப்பினும், நமது நாட்டில் இன்னுமே பல ஜோடிகள் தங்கள் திருமணங்களைப் பதிவு செய்வதில்லை. இதனால் அவர்கள் பாஸ்போர்ட்டில் பார்ட்னர் பெயரைச் சேர்க்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர். திருமண சான்றிதழ் இல்லாமல் விண்ணப்பிப்போரின் விண்ணப்பங்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வந்தன.

இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் கூட பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதற்கிடையே இந்த விதி மாற்றப்பட்டுள்ளது. அதாவது இனிமேல் திருமணச் சான்றிதழ் இல்லாமலேயே பாஸ்போர்ட்டில் கணவர் அல்லது மனைவியில் பெயரைச் சேர்க்கலாம். இதற்காக Annexure J என் விண்ணப்பத்தை மட்டும் நிரப்பிக் கொடுத்தால் போதும். திருமண சான்றிதழ் தேவையில்லை.

என்ன செய்ய வேண்டும்

இந்த Annexure J உடன் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்டே போட்டோ இணைக்கப்பட வேண்டும். இதில் இருவரின் கையெழுத்தும் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும், அதில் பெயர்கள், முகவரி மற்றும் திருமணம் தேதி தெளிவாகக் குறிப்பிட வேண்டும். தம்பதிகளாக ஒன்றாக வாழ்கிறார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும். மேலும், ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் கையெழுத்து கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும். இத்தோடு பாஸ்போர்ட் நம்பர்களையும் குறிப்பிட வேண்டும்.

இந்த அனைத்து தகவல்களையும் உரிய முறையில் நிரப்பி Annexure J விண்ணப்பத்தை பாஸ்போர்ட் அலுவலகத்தில் கொடுத்தால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அமீரகத்தில் வாழும் இந்தியர்கள் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க போதும் இதைச் செய்யலாம். இதற்கு இருவரும் நேரடியாக அமீரகத்தில் இந்தியத் தூதரகத்திற்குச் சென்று, அதிகாரிகள் முன்னிலையில் Annexure Jல் கையெழுத்திட்டு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். இதை சமர்ப்பித்தாலே போதும். திருமண பதிவுச் சான்றிதழ் இல்லாமலேயே தங்கள் பார்னர்களின் பெயர்களை இணைத்துக் கொள்ளலாம்.

திருமண பதிவு

இது மட்டுமின்றி அமீரகத்தில் வாழும் இந்தியர்கள் தங்கள் திருமணத்தைக் கூட தூதரகத்திலேயே பதிவு செய்து கொள்ளலாம். 1969 திருமண பதிவு சட்டத்தின் கீழ் இது பதிவு செய்யப்பட்டு வருகிறது. அதில் இருவரில் ஒருவராவது ஐக்கிய அமீரக ரெசிடன்சி விசா வைத்திருக்கும் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+