40க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட குவைத் தீ விபத்து! இந்தியர்களுக்காக தூதரகம் அவசர உதவி எண் அறிவிப்பு!
துபாய்: குவைத் நாட்டின் பேங்காஃப் பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 இந்தியர்கள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் அங்கிருக்கும் நிலை குறித்து அறிய இந்திய தூதரகம் அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.
குவைத்தின் தெற்கு பகுதியில் அமைந்திருக்கும் மங்காஃப் பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தின் பணிகள் நடைபெற்று வந்தன. அதில் அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட சுமார் 200க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்தனர்.

இந்நிலையில் குவைத் நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு அந்த கட்டிடத்தின் கீழ் தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய அந்த தீ கட்டிடத்தின் பல பகுதிகளுக்கும் பற்றியது. அந்த கட்டிடத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி இருந்த நிலையில் அவர்கள் தமிழ்நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.
கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபரான கேஜி ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமான அந்த கட்டிடத்தில் சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரியும் ஊழியர்களும் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த விபத்தில் சுமார் 40 பேர் பலியானதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர்களில் ஐந்து பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனவும் இரண்டு பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் மூன்று பேர் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது.
தீ விபத்துக்கு குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் இந்த தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் தீக்காயம் அடைந்த நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பலருக்கு அதிக அளவில் காயங்கள் ஏற்பட்டு இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விபத்துக்கு காரணமான கேரளாவை சேர்ந்த உரிமையாளர் ஆபிரகாமை கைது செய்ய வேண்டும் என குவைத் அரசு உத்தரவிட்டிருக்கிறது. மேலும் துணை பிரதமர் உள்ளிட்ட அதிகாரிகள் உடனடியாக நேரடியாக அங்கே சென்று நடக்கும் மீட்பு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் அங்கிருக்கும் நிலை குறித்து அறிய இந்திய தூதரகம் அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது. +965-65505246 என்ற தூதராக உதவி எண்ணில் தீ விபத்து உதவிகள் மற்றும் சந்தேகங்களுக்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டு உதவிகளை பெற்றுக் கொள்ளலாம் எனவும், சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க தூதரகம் உறுதியுடன் உள்ளது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications