துபாயில் வேலைக்கு போகிறீர்களா.. இந்தியர்களே உஷார்! இந்த பிரச்சனை உங்களை காலி செய்யலாம்!
துபாய்: துபாயில் இளம் தலைமுறையினர், பகுதி நேர வேலைகளில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இது முழு நேர வேலையை முழுவதுமாக பாதிக்கும் என்று மனிதவள மேம்பாட்டு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்தியாவிலிருந்து பலரும் வேலை தேடி துபாய் செல்கின்றனர். துபாய், ஐக்கிய அமீரகம் ஆகியவை, இளைஞர்களுக்கான மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாம்களாக இருக்கிறது. ஆனால், இங்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள் செய்யும் தவறுகளால், அவர்களது மொத்த வேலையும் பாதிக்கப்படக்கூடிய சூழல் உருவாகும் என்று எச்சரிக்கை எழுந்திருக்கிறது.

ஆய்வில் அதிர்ச்சி
சமீபத்திய ஆய்வுகளின் அடிப்படையில், இளம் தலைமுறையினர் அதாவது Gen-Z இளைஞர்களில் சுமார் 60 சதவீதம் பேர், ஒரு முழுநேர வேலையுடன் பகுதி நேர வேலையையும் செய்கிறார்கள். மற்றவர்கள், அதாவது Gen-Y பணியாளர்களில் சுமார் 50 சதவீதம் பேர், ஒன்றுக்கும் மேற்பட்ட வருமான ஆதாரங்களை வைத்திருக்கிறார்கள்.
இளம் தலைமுறையினர்
இளம் வயதினர் வெறும் ஆசைக்காக மட்டும் இதை செய்யவில்லை. மாறாக, பொருளாதார சூழல் அவர்களை தூண்டுகிறது. துபாயில் வீட்டு வாடகை மற்றும் அன்றாட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதே நேரம், முழு நேர வேலையில் சம்பளம் பெரிய அளவில் உயராமல் இருக்கிறது. இது தவிர, திடீர் வேலை இழப்பு உள்ளிட்டவையும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
வேலையில் கவனம்
எனவே, இந்த பிரச்சனையிலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் எதிர்கால வேலையை பறிக்கலாம் என்பதாலும், முன்கூட்டியே புதிய திறன்களை வளர்த்துக் கொள்ள வேறு வேலைகளில் கவனம் செலுத்துகின்றனர்.
முதன்மை வேலை பாதிப்பு
மேலோட்டமாக பார்த்தால், இது பாசிட்டிவாக தோன்றும். ஆனால், இரண்டு அல்லது மூன்று வேலைகளை செய்யும்போது.. அவர்களுடைய முதன்மையான வேலை நேரடியாக பாதிக்கிறது. போதிய ஓய்வு இல்லாததால் ஊழியர்கள் அதிகம் சோர்வடைந்து பணியிடத்தில் செயல்திறன் குறைகிறது. தூக்கம் இல்லாததன் காரணமாக வேலை இடத்தில் கவனக் குறைவு, தாமதமாக அலுவலகம் வருவது, அல்லது முன்னதாகவே செல்வது போன்ற புகார்கள் எழுகின்றன.
வேலையில் நெகிழ்வுத்தன்மை
நிறுவனத்தின் மீதான பற்று, மற்றும் நீண்ட காலம் உழைப்பு குறைந்து.. அவர்கள் பகுதி நேர வேலையை பெரிதாக கருதும் நிலை ஏற்படுகிறது. இளம் தலைமுறையினர் பெரும்பாலும் கிரிப்டோ கரன்சி முதலீடுகள், சோஷியல் மீடியாக்களில் கண்டெண்ட்களை உருவாக்குதல் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் போன்றவற்றில் ஈடுபடுகின்றனர்.
இது அவர்களுக்கு அதிக சுதந்திரத்தையும், வீட்டிலிருந்தே வேலை செய்யும் நிகழ்வுத் தன்மையும் வழங்குகிறது. இருப்பினும் இப்படி செய்வதால் எந்த வேலையையும் முழுமையாக செய்ய முடியாத சூழல் ஏற்பட்டு.. இருக்கிற வேலையும் பறிபோகும் அபாயம் உருவாகலாம் என்று சொல்லப்படுகிறது. எனவே வேலை தேடி துபாய் செல்லும் இந்திய இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
-
மதுரையில் வேலை.. சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர் பணி.. 127 பணியிடங்கள்! 12 ஆம் வகுப்பு தகுதி தான்! -
சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை.. 4,500 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்.. செம சான்ஸ்! -
RRB ALP: இந்தியன் ரயில்வேயில் 11,127 பணியிடங்கள்.. இன்றே கடைசி நாள்.. செம வாய்ப்பு.. விட்றாதீங்க! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம்












Click it and Unblock the Notifications