அதிநவீன ஸ்டெல்த் போர் விமானங்கள்.. ஒன்றல்ல.. 100ஐ வாங்கி குவிக்கும் சவுதி.. அமெரிக்காவிற்கு ஷாக்!
துபாய்: துருக்கியிடம் இருந்து அதிநவீன போர் விமானங்களை வாங்க சவுதி அரேபியா ஒப்பந்தம் செய்துள்ளது. அடுத்த தலைமுறையை சேர்ந்த 100 போர் விமானங்களை வாங்க சவுதி அரேபியா ஒப்பந்தம் செய்துள்ளது.
TAI TF Kaan என்று அழைக்கப்படும் அடுத்த தலைமுறை ஸ்டெல்த் போர் விமானங்களை வாங்க சவுதி அரேபியா முடிவு செய்துள்ளது. அரசியல் ரீதியாக அமெரிக்காவிற்கு சவுதி அரேபியா விடுக்கும் மெசேஜ் ஆக இது பார்க்கப்படுகிறது. அதன்படி அமெரிக்காவின் ஐந்தாம் தலைமுறை F-35 Lightning II போர் விமானத்திற்கு பதிலாக இந்த விமானங்களை சவுதி அரேபியா பயன்படுத்தும் என்பது தெளிவாகி உள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வரும் நிலையில் சவுதி அரேபியாவிற்கு அடுத்த தலைமுறை விமானங்கள் தேவையாகின்றன. இப்படிப்பட்ட நிலையில்தான் துருக்கியிடம் இருந்து சவுதி அரேபியா விமானங்களை வாங்குகின்றன.
இதில் துருக்கி நேட்டோ நாடுகளில் ஒன்றாகும்.. சவுதி அரேபியா உடனும் துருக்கிக்கு நட்பு உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் துருக்கி நவீன விமானங்களை வாங்கி உள்ளது.
நெருக்கம்: ஏற்கனவே செங்கடலில் சவுதி அரேபியாவுடன் சேர்ந்து கூட்டு ராணுவப் பயிற்சி நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளது. இது இரண்டு நாடுகள் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் சவுதி அரேபியா அடுத்த கட்டமாக போர் விமானங்களை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளது.
2023 ஆம் ஆண்டு இரண்டு நாடுகளுக்கும் இடையே சீனாவால் சமரசம் ஏற்படுத்தப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில்தான் செங்கடலில் சவூதி அரேபியாவுடன் சேர்ந்து கூட்டு ராணுவப் பயிற்சி நடத்த ஈரான் திட்டமிட்டுள்ளது. இது இரண்டு நாடுகள் இடையிலான உறவுகளை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக லெபனான் மற்றும் காஸாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளால் அந்த மொத்த பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இது இஸ்ரேலுக்கு பெரிய அளவில் நெருக்கடியை கொடுக்கும். மத்திய கிழக்கு நாடுகளில் சீனா மேற்கொண்ட மாற்றத்தால் தற்போது இஸ்ரேல், அமெரிக்கா பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கின்றன. முக்கியமாக ஈரான் - சவுதி ஒன்று சேர்ந்தது இஸ்ரேல், அமெரிக்காவை உலுக்கி உள்ளது.
பரம வைரிகளான ஈரான் - சவுதி அரேபியா இரண்டு நாடுகளும் தங்கள் உறவை புதுப்பிப்பதாக அறிவித்து உள்ளன. சீனா மேற்கொண்ட ப்ரோக்கர் பேச்சுவார்த்தை காரணமாக இரண்டு நாடுகளும் கைகோர்க்க முடிவு செய்துள்ளன.
உறவு மேம்பாடு: பல்வேறு விஷயங்களில் இரண்டு நாடுகளும் தீவிரமாக மோதி வந்தன. இரண்டு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று ரீதியாக மோதல்கள் நிலவி வருகின்றன. ஈரான் என்பது ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் நாடு ஆகும். சவுதி அரேபியா என்பது சன்னி பிரிவு முஸ்லீம் அதிகம் இருக்கும் நாடு ஆகும்.
இதன் காரணமாக இரண்டு நாடுகளும் பல்வேறு விஷயங்களில் கடுமையாக மோதி வருகின்றன. முக்கியமாக மத்திய கிழக்கில் நடக்கும் பல்வேறு போர்களில் இரண்டு நாடுகளும் எதிர் எதிர் துருவங்களில் இருக்கின்றன.
ஏமனில் நடக்கும் போரில் ஹவுதி போராளிகளை ஈரான் ஆதரிக்கிறது. அதே சமயம் அந்நாட்டு அரசு மற்றும் ராணுவத்தை சவுதி அரேபியா ஆதரிக்கிறது. இது போன்ற பல போர்களில் இரண்டு நாடுகளும் எதிர் எதிர் திசையில் இருந்து ப்ராக்சி வார் செய்து கொண்டு இருக்கிறது.
அமெரிக்கா இந்த போரில் இத்தனை காலம் குளிர் காய்ந்து கொண்டு இருந்தது. மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுவதையும், அவர்களின் எண்ணெய் வளங்களை திருடுவதையும் அமெரிக்கா குறிக்கோளாக கொண்டு செயல்பட்டுக் கொண்டு இருந்தது.
அமெரிக்கா குளிர் காய்ந்து கொண்டு இருந்த தீயில் சீனா தண்ணீரை ஊற்றி கடந்த மார்ச் மாதம் அணைத்தது. பல ஆண்டுகளாக மோதலில் இருந்த ஈரான் - சவுதி அரேபியா தற்போது இரண்டு நாட்டு உறவை புதுப்பிக்க முடிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications