செம.. செய்த தப்பை திருத்தும் டீம் இந்தியா.. நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 'திரிசுழல்' வியூகம்!
துபாய்: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கும் இந்தியா, ஒரு சூப்பர் பிளானை கையில் எடுக்கப் போகிறதாம்.
நடப்பு டி20 உலக கோப்பை 2021 போட்டித் தொடரை இந்தியாதான் நடத்தி வருகிறது. ஆனால், கொரோனா பரவல் பிரச்சினையால், ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தி வருகிறது.
மதியம் 3.30 மணிக்கு துவங்கும் போட்டி என்றால் அங்கு நல்ல வெயில் இருக்கும். ஆனால் இந்தியா பிரைம் டைம் என்று சொல்லப் படக் கூடிய இரவு 7.30 மணி ஆட்டங்களில் ஆடும் வகையில் போட்டி அட்டவணை வகுக்கப்பட்டுள்ளது. வெயிலுக்கு தப்பி இரவு ஆடலாம் என்று சந்தோஷப்பட முடியவில்லை. காரணம், எமிரேட்சில் இரவு பெய்யும் பனி ஒரு பிரச்சினையாக மாறி விடுகிறது.

டாஸ் வென்றவர் வெற்றியாளர்
டாஸ் யார் வெற்றி பெற்று முதலில் பவுலிங் வீச தீர்மானிக்கிறார்களோ அந்த டீம்தான் வெற்றி பெறுகிறது. ஒரு போட்டியை தவிர இதுவரை அனைத்து போட்டி ரிசல்ட்டும் இதுதான். அதாவது டாஸ் வென்ற அணி போட்டியில் வென்று விடும் என முடிவு செய்து விட்டு டிவியை ஆப் செய்து விட வேண்டியதுதான். இரண்டாவது பந்து வீசும் அணியின் வீரர்களுக்கு பனி காரணமாக பந்தில் கிரிப் கிடைப்பதில்லை. நினைத்த இடத்தை தவிர வேறு எங்கெல்லாமோ பந்து போகிறது.

வேகப்பந்து வீச்சாளர்கள்
குறிப்பாக, வேகப் பந்து வீச்சாளர்களுக்கு இந்த பிரச்சினை அதிகம். இந்த நிலையில்தான், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 3 சுழல் பந்து வீச்சாளர்களுடன் (3 சுழல்) களமிறங்க உள்ளது இந்தியா என்று தகவல் வெளியாகியுள்ளது. முகமது ஷமி அல்லது புவனேஸ்வர் குமார் நீக்கப்பட்டு அவருக்கு பதில் அஸ்வின் களம் காண்பார். அனேகமாக இரு வேகப் பந்து வீச்சாளர்களுக்கும் கல்தா தரப்படும். ஷர்துல் தாக்கூர் அதற்கு பதில் ஒரு வேகப் பந்து வீச்சாளராக களமிறங்க உள்ளார் என்கிறார்கள்.
Recommended Video

பாகிஸ்தான் போட்டி
பாகிஸ்தானுக்கு எதிராக பும்ரா, புவனேஸ்வர் குமார், முகமது ஷமி ஆகிய மூன்று வேகப் பந்து வீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்கியது. அது பலன் தரவில்லை. எனவே அடுத்த போட்டியிலிருந்து இரு வேகம், 3 ஸ்பின்னர் என்ற கணக்கோடு கால் பதிக்க உள்ளது இந்தியா என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

பந்து வழுக்காது
ட்யூ காரணமாக பந்து வழுக்கினாலும், அது, சுழல் பந்து வீச்சாளர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது, சுழல வைப்பதில் சிரமம் இருக்கலாம். ஆனால் லென்த் பந்துகளை வீசும்போது சிரமம் குறைவுதான். டி20 போட்டிகளில் பெரும்பாலும் ஸ்பின்னர்கள் பந்துகளை அதிகம் சுழல வைப்பதில்லை. பிளாட்டாகத்தான் வீசுகிறார்கள். ரன் தரக் கூடாது என்ற நோக்கம்தான் இதற்கு காரணம். எனவே 3 ஸ்பின்னர்களோடு களமிறங்கினால் பனியை பார்த்தும் பயம் வேண்டாம் என்று நினைக்கிறது டீம் இந்தியா.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா












Click it and Unblock the Notifications