ரிசர்வ் டே.. நாக்-அவுட்.. எப்படி நடக்கப்போகிறது டி20 உலக கோப்பை.. முழு விவரம்!

Subscribe to Oneindia Tamil

துபாய்: உலக கோப்பை 20 ஓவர் போட்டி எப்படி நடைபெறும், எங்கு நடைபெறும் என்பது குறித்த முழு அட்டவணை விவரம் இதோ.

Recommended Video

    Bumrah vs Shaheen யார் சிறந்த Bowler? Mohammad Amir-ன் ஆச்சரியமான பதில்

    இந்த ஆண்டு ஆண்களுக்கான டி20 உலகக் கோப்பை மூன்று கட்டங்களாக நடைபெறுகிறது.

    சுற்று 1ல், தலா நான்கு அணிகள் கொண்ட இரண்டு குழுக்கள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் சூப்பர் 12 நிலைக்கு முன்னேறுகின்றன. இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரண்டு அணிகளும் கூட இதில்தான் உள்ளன.

    சூப்பர் 12

    சூப்பர் 12

    சூப்பர் 12 சுற்றில் ஆறு டீம் கொண்ட இரண்டு குழுக்கள் உள்ளன. ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் நாக்-அவுட் நிலைக்கு முன்னேறுகின்றன. இதையடுத்து, இரண்டு அரையிறுதி போட்டிகள் மற்றும் ஒரு இறுதிப் போட்டி நடைபெறும்.

    புள்ளிகள்

    புள்ளிகள்

    வெற்றி பெறும் அணிக்கு இரண்டு புள்ளிகள், டை, முடிவு இல்லை அல்லது கைவிடப்பட்ட போட்டி என்றால், ஒரு புள்ளி கிடைக்கும். தோற்கும் அணிக்கு புள்ளி கிடையாது. இது பெரும்பாலான கிரிக்கெட்டின் விதிமுறைதான்.

    ரிசர்வ் டே

    ரிசர்வ் டே

    உலக கோப்பை தொடரில் ரிசர்வ் டே உள்ளது. இரு அரை இறுதி போட்டிகள் மற்றும் பைனலுக்கு ரிசர்வ் டே உள்ளது. அதாவது ஏதாவது காரணத்தால் போட்டிகள் நடைபெறாவிட்டால் ரிசர்வ் டேயில் போட்டி நடைபெறும். திட்டமிட்ட நாளிலேயே போட்டியை முடிக்கதான் முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இரு அணிகளும் குறைந்தது 5 ஓவர்களாவது விளையாடிவிட்டால் ரிசர்வ் டேக்கு மேட்ச் தள்ளி வைக்கப்படாது. தள்ளி வைக்கப்பட்டால், விட்ட இடத்திலிருந்து போட்டி தொடரும்.

    ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா

    ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா

    சூப்பர் 12 சுற்று அக்டோபர் 23ம் தேதி துவங்குகிறது. குரூப் 1 அணிகளான ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அபுதாபியில் இன்று சந்திக்கின்றன. குரூப் 2விலுள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகள், நாளை துபாயில் மோதுகின்றன.

    இறுதிப் போட்டி

    இறுதிப் போட்டி

    சூப்பர் 12 சுற்று நவம்பர் 8ம் தேதி முடிவடைகிறது. அரையிறுதி, நவம்பர் 10 மற்றும் நவம்பர் 11ம் தேதிகளில் நடைபெறுகிறது. நவம்பர் 14ம் தேதி, இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இதில் வெல்லும் அணி சாம்பியன் பட்டம் வெல்லும்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+