அதுக்கு வாய்ப்பில்ல ராஜா.. நியூசிலாந்துக்கு எதிராக கெத்தாக களம் இறங்க போகும் இந்திய அணி!
துபாய் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது இரண்டாவது ஆட்டத்தை நியூசிலாந்து ஆட உள்ளது. இதில் ஆடும் லெவன் அணியில் சர்துல் தாகூர் இடம் பெற வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் உடன் ஆடியே அணியே நியூசிலாந்து உடன் மோதப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த ஞாயிறு அன்று நடந்த முதல் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தோற்றதன் மூலம் உலக கோப்பை போட்டிகளில் இதுவரை பாகிஸ்தான் உடன் தோல்வியே சந்திக்காத இந்தியாவின் சாதனை முதல்முறையாக முறியடிக்கப்பட்டுள்ளது.
1992ல் தொடங்கி 2021 வரை நடந்த உலக கோப்பை போட்டிகளில் ஒரு முறை கூட இந்தியா தோற்றது இல்லை. 1992ல் உலக கோப்பையை கைப்பற்றியது பாகிஸ்தான் தான். ஆனால் அப்போது கூட இந்தியா பாகிஸ்தானை தோற்கடித்தது. ஆனால் அந்த சாதனையை முதல்முறையாக பாகிஸ்தான் உடைத்துள்ளது. இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நியூசிலாந்து
நியூசிலாந்து உடன் ஞாயிற்றுக்கிழமை அன்று இரண்டாவது போட்டியை இந்தியா ஆடுகிறது. இதில் பொளலர்கள் மாற்றப்படுவார்களா அல்லது அதே அணி தொடருமா என்ற கேள்விகள் எழுந்தன. இந்நிலையில் நாளை நடைபெறும டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் நியூசிலாந்திற்கு எதிராக பாகிஸ்தான் உடன் மோதிய அதே லெவன் அணி தான் விளையாட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது,

மோசமான ஆட்டம்
முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிரான மோசமான ஆட்டம் ஆடும் லெவன் அணியில் மாற்றங்களை செய்ய வேண்டும் என்ற தீவிரமான கேள்விகளை எழுப்புவதற்கு வழிவகுத்தது.இந்நிலையில் நியூசிலாந்து உடன் ஞாயிற்றுக்கிழமை அன்று இரண்டாவது போட்டியை இந்தியா ஆடுகிறது. இதில் பொளலர்கள் மாற்றப்படுவார்களா அல்லது அதே அணி தொடருமா என்ற கேள்விகள் எழுந்தன.
Recommended Video

பந்து வீச்சு
ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் விளையாடுவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை என்கிறார்கள். ஏனெனில் ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சைப் பொறுத்த வரை, மும்பை அணியில் விளையாடிய போது விக்கெட் அதிரடியாக வீழ்த்தும் பந்துவீச்சாளர் என்றாலும் ஆனால் ஒரு ஓவருக்கு 9 ரன்களை நெருங்கும் எகானமி விகிதத்துடன் நிறைய ரன்களை கொடுத்தவர் என்கிறார்கள். அதேநேரம் ஹர்திக் பாண்டியா அதிரடியாக பந்து வீசி விக்கெட்டை வீழ்த்துவதுடன், ரன்களை விட்டுக்கொடுப்பதிலும் கஞ்சத்தனமாக இருப்பார். எனவே ஹர்திக் பாண்டியாவே தொடர உள்ளாராம். ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா கடந்த போட்டியில் பந்து வீச வில்லை. நியூசிலாந்துடனான போட்டியில் பந்து வீசவாய்ப்பு அதிகம் உள்ளது.

வரிசையில் மாற்றம்
இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் ஆடும் லெவன் அணியில் மாற்றம் செய்யாத பட்சத்தில் , மகேந்திர சிங் தோனியின் வெற்றிகரமான "CSK டெம்ப்ளேட்" தொடர வாய்ப்புள்ளது. சிஎஸ்கே டெம்ப்ளேட்டில் தான் தற்போது இந்திய கிரிக்கெட் அணி உள்ளது. நியூசிலாந்து அணியுடான போட்டியில் பேட்டிங் வரிசையில் மட்டும் மாற்றம் இருக்கலாம் என்கிறார்கள்.

மாற்றம் இல்லை
சூப்பர் 12 போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி முதல் வெற்றியை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது இந்திய அணி. ஒரு போட்டியை மட்டும் மனதில் வைத்து வீரர்களை மாற்றும் மனநிலையில் இந்திய அணி நிர்வாகம் இல்லை . எனவே தான் ஷர்துல் தாக்கூர் இந்திய அணி விளையாடும் லெவன் அணியில் இடம்பிடிக்கப்பட மாட்டார் என்கிறார்கள். இந்த போட்டியில் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications