நியூசிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான்.. இந்திய அணிக்கு பெரிய நிம்மதி.. அரையிறுதிக்கு போக சூப்பர் சான்ஸ்
துபாய்: நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய டி20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது, இந்திய ரசிகர்களையும், இந்திய அணியையும் ஆசுவாசப்படுத்தி உள்ளது.
Recommended Video
அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி செல்வதற்கான வாய்ப்பு இப்போது கொஞ்சம் பிரகாசமாக உள்ளது.
ஒருவேளை நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தால் இந்திய அணியின் அரைஇறுதி கனவு கலைந்து போயிருக்கும் என்பதுதான் எதார்த்தம்.

பாகிஸ்தான் டீம் வெற்றி நமக்கு மகிழ்ச்சி
கிரிக்கெட் பல சுவாரஸ்யங்களை உள்ளடக்கிய ஒரு விளையாட்டு. ஒரு பந்தில் கூட ஆட்டம் எந்த பக்கம் வேண்டுமானாலும் மாறும் என்பார்கள். ஆனால் பரம வைரியான பாகிஸ்தான் அணி, நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்களை வேண்ட வைத்ததும் இந்த கிரிக்கெட்தான். இதற்கு முக்கிய காரணம் முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் இந்திய கிரிக்கெட் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததுதான்.

நியூசிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான்
பாகிஸ்தான் தனது இரண்டாவது ஆட்டத்தில் நேற்று நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்த இரு அணிகளும் இந்தியாவை போல குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 6 அணிகள் என மொத்தம் இரண்டு பிரிவுகளில் 12 அணிகள் இடம் பெற்றிருப்பதால் ஒவ்வொரு பிரிவில் இருந்தும் இரண்டு அணிகள் அரை இறுதிக்கு செல்லமுடியும். அந்தவகையில் ஒருவேளை நேற்று பாகிஸ்தான் நியூசிலாந்தை வீழ்த்தியிருக்கா விட்டால் நியூசிலாந்து அணி அதன்பிறகு, இந்தியா, ஸ்காட்லாந்து, நமீபியா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதில் இந்தியாவுடன் தோற்றாலும் மற்ற அத்தனை அணிகளுடன் ஜெயித்து விட்டால் நியூசிலாந்து அரையிறுதிக்கு போவதற்கு வாய்ப்பு உருவாகியிருக்கும். ஏனெனில் இந்தியாவுடன் தோற்றதால் 2 புள்ளிகளை இழந்திருக்கும். மற்ற அணிகளுடன் ஜெயித்திருக்கும் என்பதால் 8 புள்ளிகளோடு நியூசிலாந்து அரையிறுதிக்கு போக வாய்ப்பு இருந்தது.

முக்கியமான இந்தியா-நியூசிலாந்து போட்டி
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நியூஸிலாந்து தோல்வியை சந்தித்துள்ளது. ஆனால் இப்போது இந்தியாவுடன் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் நியூஸிலாந்து உள்ளது. இந்தியாவும் அதே மாதிரி நிலையில் உள்ளது. இதனால் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற உள்ள அடுத்த போட்டி, வாழ்வா சாவா என்ற வகையிலான போட்டி. இதில் யார் வெற்றி பெறுகிறார்களோ அந்த அணி அரையிறுதிக்கு செல்ல வாய்ப்பு அதிகம் இருக்கிறது. ஏனெனில் இரு அணிகளும் அதன் பிறகு குட்டி அணிகளுடன்தான் மோத இருக்கிறார்கள். எனவேதான் பரம வைரியாக இருந்த போதிலும் நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது இந்திய ரசிகர்களுக்கு ஆறுதல் அளிக்கக்கூடிய செய்தியாக இருந்தது.

குட்டி அணிகள்
ஒருவேளை வரும் ஞாயிற்றுக்கிழமை, இந்தியா, நியூசிலாந்து இடையேயான, போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால் அதன்பிறகு அந்த அணி மோத இருக்கும் குட்டி அணிகளில் எதனுடனாவது அது தோல்வி அடைய வேண்டும் என்று நாம் வேண்டிக் கொண்டே இருக்கும் நிலைமை வரும். அது அவ்வளவு எளிதில் நடக்காத விஷயம். அதேபோல நியூசிலாந்தை நாம் வீழ்த்தி விட்டால் குட்டி அணியிடம் இந்தியா தோல்வி அடைய வேண்டும் என்று நியூசிலாந்து ரசிகர்கள் வேண்டிக் கொண்டிருப்பார்கள். ஏனென்றால் இப்படி ஏதாவது நடந்தால் ரன் ரேட் அடிப்படையில் யார் முன்னிலை என்று பார்த்து அரையிறுதிக்கு தகுதி பெற வாய்ப்பு ஏற்படும்.

முக்கிய போட்டி
அதேநேரம், குட்டி அணிகளிடம் தோல்வி அடைவது என்பது எளிதில் நடக்காத விஷயம் என்பதால் வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெற உள்ள போட்டி இரு அணிகளுக்கும் வாழ்வா சாவா என்ற போட்டிதான். இதில் இந்தியா வெற்றி பெற்று பிற அணிகளை வீழ்த்திவிட்டால் 8 புள்ளிகளோடு இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications