Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துபாயில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்! புத்தகங்கள் அறிமுகம்!

Subscribe to Oneindia Tamil

துபாய்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா, துபாயில் திமுகவினரால் கொண்டாடப்பட்டிருக்கிறது. துபாய் மீரான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தமிழ் கேள்வி செந்தில் வேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றிருந்தார். இந்நிகழ்ச்சியில், காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு மற்றும் திராவிடம் 2.0 ஏன்? எதற்கு? நூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் துபாயில் எளியோர் எழுச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது. நவ.26 அன்று மாலை நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு அமீரக திமுக அமைப்பாளரும் , அயலக தமிழர் நல வாரிய உறுப்பினருமான துபாய் மீரான் தலைமை வகித்தார்.

Udhayanidhi Stalin DMK

நிகழ்வில் திராவிட இயக்கச் சிந்தனையாளரும் மூத்த ஊடகவியலாளருமான தமிழ் கேள்வி தி. செந்தில் வேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். செந்தில் வேல் எழுதிய திராவிடம் 2.0 ஏன்.? எதற்கு..? மற்றும் காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு ஆகிய நூல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அமீரக எழுத்தாளர் குழுமத்தின் ஆசீப் மீரான் வரவேற்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமீரக திமுக அமைப்பாளர் எஸ்.எஸ்.மீரான், நவம்பர் 27ல் பிறந்தநாள் காணும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் , டிசம்பர் 2 ல் பிறந்தநாள் காணும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு ஒருசேர பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு, தன்னுடைய அழைப்பினை ஏற்று வருகை புரிந்த தமிழ் கேள்வி" தி செந்தில் வேல் "அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொண்டார்.

Udhayanidhi Stalin DMK

மேலும் இன்றைய கால அரசியல் சூழலை கருத்தில் கொண்டு, ஊடகவியலாளர் செந்தில்வேல் போன்றோர்களின் தேவைகளை அனைவரும் உணர்ந்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அதே போல தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் திராவிட மாடல் ஆட்சியை திறம்பட வழி நடத்திக் கொண்டிருக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் கரங்களை வலுப்படுத்தி, கூடிய விரைவில் வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டிட வேண்டும் என கோரிக்கை வைத்து, அமீரக திமுகவின் அழைப்பினை ஏற்று வருகை புரிந்த அனைவருக்கும் நன்றியினை தெரிவித்து கொண்டார்.

அதனை தொடர்ந்து பேசிய சிறப்பு விருந்தினர் ஊடகவியாளர் 'தமிழ் கேள்வி' தி செந்தில் வேல், துணை முதலமைச்சருக்கு முதலில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். தொடர்ந்து பேசியவர், வரவிருக்கின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சியில் அமரவேண்டும் என்றால் பாசிசத்தின் சதிகளை முறியடிக்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டின் பண்பாடு, கலாச்சாரம், திராவிடம் கடந்து வந்த பாதைகளை மேற்கோள்காட்டி பேசியவர், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கடந்து வந்த பாதையையும்,அவர் எதிர்கொண்ட அரசியல் ரீதியிலான அழுத்தங்களையும் எடுத்துரைத்தார்.

திமுக ஏன் தொடர்ந்து விமர்சிக்கப்படுகிறது? என்பதன் பின்னால் இருக்கும் சதிக்கோட்பாட்டை விவரித்தார். திமுக என்ற மாபெரும் இயக்கத்தை கட்டிக்காத்த பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்களின் கொள்கைகளையும், அவர்கள் மேற்கொண்ட வழிகளையும், எதிர்கால சந்ததினருக்கு எடுத்து செல்ல வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

Udhayanidhi Stalin DMK

பாசிசத்தின் சூழ்ச்சிகளிலிருந்து விடுபட அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க, அனைவரும் பாடுபட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். மேலும் பேசியவர், 'தொலைக்காட்சி விவாதங்களில் தான் பங்கேற்ற போது, அதனை தொடராக முரசொலியில் வெளிவர உதவிய அண்ணன் முரசொலி செல்வத்திற்கு நன்றியினை தெரிவித்து கொண்டு, அந்த தொடர் தற்போது திராவிடம் 2.0 ஏன்.! எதற்கு..! என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்திருக்கிறது என்றும் அதனை அனைவரும் படித்து தெரிந்து கொண்டால் 2026 சட்டமன்ற தேர்தலை நாம் எதிர்கொள்வதற்கு எளிதாக இருக்கும் என்று கேட்டுக்கொண்டார்.

மேலும் பேசியவர், இந்த விழாவை ஏற்பாடு செய்த எஸ்.எஸ்.மீரானுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

அதனை தொடர்ந்து விழாவில் வந்திருந்தவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலும் அளித்தார் தி செந்தில் வேல். 'திராவிடம் ஏன், எதற்கு?' என்ற நூலுக்கான அறிமுக உரையை வழங்கி, துணை முதலைமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை ஏஜிஎம். பைரோஸ் கான் தெரிவித்துக்கொண்டார்.

இந்த பிறந்த நாள் விழாவில் முத்தமிழ் சங்க தலைவர் ஷா, தமுமுக தலைவர் ஹாதி, இப்ராஹிம், தெலுங்கு சங்க தலைவர் ரமேஷ் பாபு, பிளாக் துலிப் செந்தில், ஜெஸிலா பானு, ரமேஷ் விஷ்வநாதன், காயிதே மில்லத் பேரவை பரக்கத் அலி, மதிமுக பாலா, ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், வெங்கட், பாலாஜி பாஸ்கரன், கவிஞர் சசிகுமார், பிரசன்னா, திண்டுக்கல் ஜமால் மொஹைதீன், இன்ஜினியர் பாலா, ரெஙகராஜன், சிராஜ், டயானா, அழகேசன், அன்பு, மணிவேல், விஎம்.பிரபு, செந்தில் பிரபு, அப்துல்லா கனி, மச்சேந்திரன், பாண்டியன், அன்பு செல்வம், தாரிக், செய்யது இஸ்மாயில் , பருத்தி இக்பால், அபிவை ஜாஹிர், சலீம் ஷேக் சாலை, கவிஞர் ஜியாவுதீன் ஆகியோர் துணை முதலைமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர்.

நிறைவாக துணை முதலமைச்சருக்கும், டிசம்பர் 2 பிறந்தநாள் காணும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அவர்களுக்கும் சேர்த்து கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு அமீரகத்திலிருந்து பல்வேறு பகுதியிலிருந்து வருகை தந்த கழக உடன்பிறப்புகளும், கூட்டணி கட்சியினர் எராளோமானொர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்யது இஸ்மாயில், பி.ஆர்.ஓ.அஹமது கபீர்,உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+