Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹனிமூனுக்கு துபாய் வந்தவர்.. தங்கத்தை காதலியாக்கி.. இன்று அமீரகத்தில் பெரும் செல்வந்தர்

Subscribe to Oneindia Tamil

துபாய்: பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்ட மும்பைக்காரரான பிரோஸ் மெர்ச்சண்ட்.. வறுமையை வென்று துபாயில் பியூர் கோல்டு நிறுவனத்தின் அதிபராகவும், பெரும் கோடீஸ்வரரராகவும் உருவானது எப்படி என்பதை பார்ப்போம்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்திய தொழிலதிபர் பிரோஸ் மெர்ச்சண்ட் (வயது 66) பூயர் கோல்ட் நகைக்கடையின் உரிமையாளர் ஆவார். இவர் ஒரு காலத்தில் மும்பையில் மிகவும் நெரிசலான குடிசைப்பகுதியில் 100 சதுர அடி வீட்டில் 11 பேரில் ஒருவராக வாழ்ந்தார். ஆனால் இன்று துபாயின் பாம் ஜுமேராவில் வானமே வாயடைத்து போய் பார்க்கும் ஆடம்பர மாளிகையில் வாழ்கிறார். துபாயின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவராகவும், ஏழைகளுக்கு உதவி செய்வதில் கர்ணனாகவும் இருக்கிறார்..

who is the Firoz Merchant? School dropout in India to billionaire Pure Gold owner in Dubai

ப்யூர் கோல்ட் ஜூவல்லர்ஸ் நிறுவனரும் தலைவருமான பிரோஸ் மெர்ச்சண்ட்டின் சின்ன வயது வாழ்க்கை மிக கடினமாக இருந்தது. அவர் ஊடகம் ஒன்றுக்கு சில வருடங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் கூறும் போது, எனது தந்தை பெயர் குலாம் உசேன், ரியல் எஸ்டேட் புரோக்கராகவும், என் தாய் மாலெக்பாய் இல்லத்தரசியாகவும் இருந்தார். எங்கள் வீட்டில் மொத்தம் 11 பேர். அந்தக் குடும்பத்தில் சம்பாதித்த ஒரே ஆள் என்றால் என் தந்தை ஹுசைன்.

மும்பையின் பீண்டி பஜாரின் 'இமாம்வாடா' குடிசைப்பகுதி வீட்டில் 100 சதுர அடி அறைக்குள் 11 பேர் வசித்து வந்தோம்.. ஒரு சமையலறை அதில் தான் எங்கள் வாழ்க்கைக்கான இடம் இருந்தது. எங்கள் வீட்டில் கழிப்பறைகள் அல்லது குளியல் அறைகள் இல்லை. இதற்காக நாங்கள் வெளியே செல்ல வேண்டியது இருந்தது.

மிகவும் ஏழ்மையான குடும்பம் என்பதால், எங்கள் வாழ்க்கை ஒவ்வொரு நாளும் போராட்டமாகவே இருந்தது. நான் என் பெற்றோருக்கு எட்டாவது குழந்தை. அதேநேரம் என் தந்தைக்கு மிகவும் நெருக்கமான குழந்தை நான். அவர் என்னை எங்கு அழைத்துச் சென்றாலும் நான் அவரது கையைப் பிடித்துக் கொண்டு செல்வேன்.

என் தந்தை, எங்கள் போராட்டமான வறுமை நிறைந்த வாழ்க்கையை இரக்கத்துடனும் நன்றியுடனும் ஏற்றுக்கொள்ள எனக்குக் கற்றுக் கொடுத்தார். ஒவ்வொரு முறையும் நான் வாழ்க்கையில் பெரிய இடர்களை சந்திக்கும் போது எல்லாம் , அதில் என்ன புதிதாய் கற்று வலிமையாக மாற வேண்டும் என்பதை கண்டறிய சொல்வார். அய்யோ இப்படி ஏழைகளாக பிறந்துவிட்டோமே என்று எங்களை பார்த்து நாங்களே பரிதாபம் தேட விரும்பவில்லை, மாறாக நாங்கள் வாழ்க்கையை தொடர வேண்டியிருந்தது.

நான் 2 ஆம் வகுப்பு படிக்கும் போது, எனது தந்தையால் கல்விக் கட்டணத்தைச் செலுத்த முடியாததால், பள்ளிப் படிப்பை நிறுத்த நேரிட்டது. நான் நல்ல மாணவனாக இருந்தேன். 1ம் வகுப்பில் நான் கல்வியில் சிறந்து விளங்கினேன், என் வகுப்பில் இரண்டாம் இடத்தைப் பிடித்தேன். ஆசிரியர் எனக்கு தகுதிச் சான்றிதழையும் வழங்கி இருந்தார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அடுத்த வருடமே எனது கல்விக்கு பணம் இல்லாததால் என் தந்தை என்னைப் பள்ளியிலிருந்து வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது.. அதனால் என் தந்தை தான் ஆசிரியராக எனக்கு இருந்தார். உண்மையில், அவர் தான் என் அறிவு மற்றும் செயல்களுக்கு ஊக்கமாக இருந்தார். அவரிடமிருந்து நான் இங்கு எப்படி உயிர் வாழ வேண்டும் என்ற கலையைக் கற்றுக்கொண்டேன். 13 வயதை எட்டியபோதுதான் என் குடும்பம் மெல்ல மெல்ல நல்ல நிலையை எட்ட தொடங்கியது.

எங்கள் வாழ்க்கையில் கடுமையான சூழல் இல்லை. முன்பைவிட போராட்டங்களை கையாள்வது எளிதாக இருந்தது. என் தந்தைக்கு நான் ரியல் எஸ்டேட் புரோக்கர் வேலையில் உதவியாக சேர்ந்தேன். ஒவ்வொரு நாளும் அவருடன் நான் வேலைக்குச் செல்வேன் அங்கு அவர் வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்வதையும் , எப்படி ரியல் எஸ்டேட் ஒப்பந்தங்கள் மேற்கொள்கிறார் என்பதையும் பார்த்துக் கொண்டே வந்தேன். ஒரு கட்டத்தில் வாழ்க்கை எனக்கு பிரகாசமாகத் தோன்றத் தொடங்கியது.

1980 ஆம் ஆண்டில், மும்பையைச் சேர்ந்த ரோசினா என்ற பெண்ணை மணந்தேன். அது என் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக மாறியது.
நான் ஹனிமூனுக்கு துபாய் வந்தேன். அப்படி வந்த போது துபாயில் உள்ள கோல்ட் சூக்கிற்கு பயணித்தேன். நான் பார்த்த உடனே அந்த இடத்தை எனக்கு மிகவும் பிடித்து போனது. உள்ளே சென்றபோது, திகைப்பூட்டும் வகையில், தங்கத்தால் ஜொலித்த நகைக் கடைகளைப் பார்த்தேன் - அதன் பளபளப்பு மற்றும் கவர்ச்சி என்னை அப்படியே மயக்கமே போடும் அளவிற்கு இருந்தது. இதனால் உடனடியாக நான் துபாயில் நகை வியாபாரம் செய்ய விரும்பினேன்.

ஆனால் என் மனைவிக்கோ கடும் கோபம் ஏற்பட்டது. ஆனால் அவரது கோபத்தை கண்டுகொள்ளாத நான், என்னுடைய தேனிலவின் பெரும்பகுதியை தங்க சூக்கில் கழித்தேன். துபாயில் நகை வியாபாரம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொண்டேன். நான் அதைகேட்டு மயங்கியதுடன் உடனடியாக ஒரு வியாபாரியாகவும், நகை அதிபராக மாற விரும்பினேன். இந்த உற்சாகத்துடன் நான் மும்பையில் உள்ள என் வீட்டிற்குச் சென்றேன்.

ஆனால் என் கனவை என் தந்தை அப்படியே தகர்த்தார், நான் துபாய் சென்று நகை வியாபாரியாக வேலை செய்ய விரும்புகிறேன் என்று என் தந்தையிடம் சொன்னபோது, அவர் அந்த யோசனையை நிராகரித்தார். ஆனாலும் அமைதியாக என் கனவை மற்றும் லட்சியத்தை அப்படியே மனதில் வைத்திருந்தேன். தங்க வணிகத்தின் அ முதல் ஃ வரை அனைத்தையும் புரிந்து கொள்ள விரும்பினேன்.

அதற்காக நான் பிரபல நகைச் சந்தையான மும்பையின் ஜவேரி பஜாருக்கு தினமும் செல்வதை வழக்கமாக்கினேன். 1989 ஆம் ஆண்டில், எனக்கு அதிர்ஷ்டம் கிடைத்தது. என் தந்தையை சமாதானப்படுத்தினேன். அவர் இறுதியாக ஒப்புக்கொண்டதுடன் துபாய்க்கு செல்ல அனுமதித்தார், ஆனால் கூடவே ஒரு செக்கும் வைத்தார். குடும்பத்திடம் இருந்து எந்த நிதியுதவியையும் எதிர்பார்க்க வேண்டாம் என்றும், ஒரு வேளை வீட்டிற்கு திரும்ப விரும்பினால் தாராளமாக கதவுகள் எனக்காக திறந்திருக்கும் என்று அவர் கூறினார்,

அதை ஏற்றுக்கொண்ட நான் துபாயில் விசிட்டர் விசாவில் போனேன். சில நண்பர்களுடன் ஒரு பிஜி விடுதியில் தங்கினேன். நாங்கள் ஒரு அறையில் அங்கு ஆறு பேர் இருந்தோம், ஆனால் எங்களுக்கு ஒரு நல்ல நேரம் இருந்தது. கோல்ட் சூக்கிற்கு தினமும் சென்று, அங்குள்ள குத்தகை இடத்திற்கான கட்டணங்களை விசாரித்தேன்..

துபாய் பொருளாதாரத் துறையிலிருந்து (டிஇடி) உரிமம் வாங்குவது எப்படி என்று சொன்னவர்களுடன் நான் நட்பை உருவாக்கினேன். 1989 ஆம் ஆண்டின் இறுதியில் எனது சொந்தக் கடையை நிறுவினேன். பியூர் கோல்டு தங்க நகைகள் என்ற பெயரில் கடையை திறந்தேன். எனது கடைக்கு 1,000 திர்ஹம் செலுத்திய பிறகு நான் உரிமத்தைப் பெற்றேன். இந்த தொகையை ஒரே கட்டமாக செலுத்த என்னிடம் பணம் இல்லாததால் தவணை முறையில் செலுத்தினேன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தூய்மையான தங்கத்தின் வியாபாரத்தில் நான் ஈடுபட்டிருந்ததால் 'தூய தங்கம்' என்ற பெயருடன் ஆரம்பித்தேன்.

நான் துபாய் முர்ஷித் பஜாரில் ஒரு சிறிய இடத்தை ஆண்டுக்கு 2,000 திர்ஹம் வரை வாடகைக்கு எடுத்தேன். நான் முதலில் எனது தொழிலை ஒரு தரகராகத் தொடங்கினேன். என் அன்பான தந்தையிடமிருந்து நான் கற்றுக்கொண்ட அனைத்து வித்தைகளையும் அங்கு காட்டினேன். நான் மூன்று மொத்த விற்பனையாளர்களுடன் டீல் வைத்திருந்தேன். ஒவ்வொரு 10 டோலா பாரின் விற்பனைக்கும் 5 Dh5 கமிஷன் பெற்றேன்.

விற்பனையாளர்கள் என்னிடம் முன்கூட்டியே பணம் கேட்பார்கள், ஆனால் என்னிடம் பணம் இல்லை. எனவே ஒப்பந்தத்தை முடிக்க என்னுடன் வர அவர்களின் பிரதிநிதியை அனுப்புமாறு கேட்டுக் கொண்டேன். விற்பனைக்குப் பிறகு, நான் விற்பனையாளரை சந்தித்து, என் சிறிய கமிஷனை வைத்தேன். முதலில் ஒரு நாளைக்கு ஒரு பார் விற்றேன். பின்னர் அது இரண்டு [பின்னர்] மூன்று ஆனது. விற்பனை மேம்பட்டதால், எனது கமிஷன் மற்றும் வருமானம் அதிகரித்தது.

இது மூன்று மாதங்கள் தொடர்ந்தது, பின்னர் எனது முதல் வங்கிக் கணக்கை துபாயில் பேங்க் ஆஃப் ஓமன், இப்போது மஷ்ரெக் வங்கியில் தொடங்கினேன். முர்ஷித் பஜாரில்தான் வங்கி கணக்கு இருந்தது. எனக்கு ஒரு காசோலை புத்தகம் வழங்கினார்கள். இந்த செக் வியாபாரத்தை முன்னேற்ற உதவியது. அதன்பிறகு நான் காசோலையை ஒப்பந்தங்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறையாகப் பயன்படுத்தினேன். வர்த்தகம் எளிதாகியது. துபாயில் நகைக்கடையில் படிப்படியாக வளர்ந்தேன்.

இன்று, எனது பியூர் கோல்ட் ஜூவல்லர்ஸ் மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் உள்ள 12 நாடுகளில் 157 கடைகளைக் கொண்டிருக்கிறது. இந்நிறுவனம் துபாய், இந்தியா மற்றும் சீனாவில் அதிநவீன தொழிற்சாலைகளை நடத்தி 3,500 பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகிறேன்.

என் கம்பெனியை நிறுவிய நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு எனது வணிகம் உச்சத்தை எட்டியது. நேர்மையாகவும், நல்ல எண்ணங்களுடன் நான் நடந்து கொண்டதால் வெற்றிக்கு காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஒரு நிறுவனத்தின் ஓனராக நான் குறுகிய கால அல்லது நடுத்தர கால வணிக உத்திகளை ஊக்குவிக்கவில்லை. நீண்டகாலத்தை சிந்தித்தே முடிவுகளை எடுத்தேன்..

நான் என் கடையில் வேலை செய்பவர்களிடம், நீங்கள் என்னை மகிழ்விக்க விரும்பினால், வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியாக வைத்திருங்கள் என்று கூறுவேன் . வாடிக்கையாளருக்கு தரமான சேவை மற்றும் தயாரிப்பு எங்களுக்கு மிகவும் முக்கியமானது" என்கிறார் தொழில் அதிபர் பிரோஸ் மெர்ச்சண்ட்..

ஆமாம் தொழில் அதிபர் பிரோஸ் மெர்ச்சண்ட் பற்றி ஏன் நாம் பார்க்கிறோம்..அவசியம் என்ன என்கிறீர்களா? இந்த கதை ஒருபுறம் எனில், அவரது நல்ல மனசு தான் காரணம். இவர் 'தி பர்காட்டன் சொசைட்டி' என்ற தொண்டு நிறுவனம் மூலம் நல்ல காரியங்களும் செய்து வருகிறார். கருணை உள்ளம் படைத்த இவர், வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான அப்பாவி கைதிகள் விடுதலையாகி சொந்த ஊர் செல்ல உதவி வருகிறார்.. ரம்ஜான் பண்டிகைக்கு முந்தைய நல்லெண்ண நடவடிக்கையாக, இவர் ஐக்கிய அரபு அமீரக சிறைகளில் இருந்து 900 கைதிகளை விடுவிக்க அதிகாரிகளிடம் 10 லட்சம் திர்ஹாம் ( சுமார் ரூ.2.50 கோடி ) நன்கொடை அளித்துள்ளார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் உள்ள காவல்துறை இயக்குநர் ஜெனரல்களுடன் இணைந்து, பிரோஸ் மெர்ச்சண்ட் ஏற்கனவே பல ஆண்டுகளாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 20,000 கைதிகள் விடுதலை பெற்று தங்கள் குடும்பத்துடன் வாழ முக்கிய பங்கு வகித்துள்ளார். அன்று மும்பையி 100 சதுர அடி குடிசையில் 11 பேரில் ஒருவராக வாழ்ந்த பிரோஸ் மெர்ச்சண்ட். இன்று 39வது மாடியில் அலுவலகத்தை அமைத்துள்ளதுடன், மிக பெரிய செல்வந்தர் என்பதை தாண்டி நல்ல மனிதராக சேவை செய்து வருகிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+