கலாய்ப்பதற்கு கன்டென்ட் கொடுத்த பாஜக.. மீண்டும் ஒருமுறை "ஒத்த ஓட்டு" வாங்கி பரிதாபம்
ஈரோடு: ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஒத்த ஓட்டு பாஜக என கலாய்த்து தள்ளிய நிலையில் இந்த முறையும் பாஜக வேட்பாளர் ஒருவருக்கு ஒரே ஒரு ஓட்டு விழுந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்தன. ஆனால் கோவையில் நிகழ்ந்த ஒரு சம்பவம் தமிழகத்தில் பாஜகவை கதிகலங்கச் செய்துவிட்டது.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்குள்பட்டது குருடம்பாளையம் ஊராட்சி. இங்கு 9ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

913 வாக்குகள்
இந்த வார்டில் மொத்தமாக 1,551 வாக்குகள் உள்ள நிலையில் தேர்தலில் 913 வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்தது. இதில் திமுகவை சேர்ந்த அருள்ராஜ் 387 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். சுயேச்சையாக போட்டியிட்ட ஜெயராஜ் 240 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார்.

அதிமுக 196 வாக்குகள்
அது போல் அதிமுகவை சேர்ந்த வைத்தியலிங்கம் 196 வாக்குகள் பெற்று 3ஆவது இடத்தை பிடித்துவிட்டார். வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட பாஜகவை சேர்ந்த கார்த்திக்கு பெரும் சோகம் காத்திருந்தது. அவரது குடும்பத்தில் 5 வாக்காளர்கள் இருந்த நிலையில் அவருக்கு ஒரே ஒரு ஓட்டு மட்டுமே கிடைத்தது.

பாஜக நோட்டா
ஏற்கெனவே தமிழகத்தில் பாஜக நோட்டாவை வெல்ல முடியாது என விமர்சனங்கள் இருந்து வந்த நிலையில் ஒத்த ஓட்டு பாஜக என எதிர்க்கட்சியினர் கிண்டல் செய்தனர். கிரிக்கெட் விளையாட்டு நடைபெற்ற விளையாட்டு மைதானங்களில் ஒத்த ஓட்டு பாஜக என எழுதப்பட்டு கிண்டல் செய்யப்பட்டது. டிவிட்டரில் டிரென்டானது.

ஊரக உள்ளாட்சி தேர்தல்
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், அதாவது மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தல் கடந்த 19ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அவற்றில் உள்ள 12,838 வார்டுகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.

வாக்கு எண்ணிக்கை
இதன் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பவானிசாகர் பேரூராட்சியில் 11-வது வார்டில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நரேந்திரனுக்கு ஒரே ஒரு ஓட்டு கிடைத்துள்ளது. அந்த ஓட்டும் அவருடையதாம். நரேந்திரனுக்கு அவரது குடும்பத்தினரோ நண்பர்களோ வாக்களிக்காததால் அவர் ஏமாற்றமடைந்துள்ளார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications