• search
ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"கச்சத்தீவு! அதில் மிக உறுதியாக உள்ளோம்.. நீங்களே காண்பீர்கள்!" சொல்கிறார் பாஜக சி.பி.ராதாகிருஷ்ணன்

Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோட்டில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சியில் பேசிய பாஜக மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார்.

ஈரோடு மாவட்டத்தில் பாஜக புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் எம்பியுமான சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர் கச்சத்தீவு விவகாரம், பஞ்சு விலையேற்றம், ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விரிவாகப் பேசினார்.

 நாளை மறுநாள் தொடங்கும் +2 பொதுத்தேர்வு! முக்கிய விதிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு.. பரபர தகவல் நாளை மறுநாள் தொடங்கும் +2 பொதுத்தேர்வு! முக்கிய விதிமுறைகளை வெளியிட்ட தமிழக அரசு.. பரபர தகவல்

சிபி ராதாகிருஷ்ணன்

சிபி ராதாகிருஷ்ணன்

ஈரோட்டில் புதிய நிர்வாகிகள் பதவியேற்கும் நிகழ்ச்சியில் பேசிய பாஜக மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் , "மத்திய அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை எனக் குற்றம்சாட்டும் தமிழக நிதியமைச்சர், நிலக்கரி, மின்சாரம் போன்றவற்றுக்கு மாநில அரசு தர வேண்டிய நிலுவைத் தொகை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். ஜிஎஸ்டி-யில் அனைத்து மாநில அரசுக்கும் தர வேண்டியதை மத்திய அரசு முறையாகவே வழங்கி வருகிறது,,

திராவிட மாடல்

திராவிட மாடல்

திமுக அரசு திராவிட மாடல் என்று கூறி தமிழர்களைச் சீரழித்துள்ளார்கள். இந்தியா முழுவதையும் சீரழிக்கத் தான் நாட்டில் இப்போது 'திராவிட மாடல்' பரவுகிறது என்று கூறுகிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சியிலும் காமராஜர் ஆட்சியிலும் கட்டப்பட்ட அணைகள் தான் தமிழகம் முன்னேறிய மாநிலமான மாற காரணம். காமராஜர் போன்ற தலைவர்கள் இவர்கள் எப்படிப் பேசினார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது அவர் மறைந்த பின்னர், அவர்களையும் திராவிட மாடலில் சேர்த்துக் கொள்கிறார்கள்.

தமிழ்

தமிழ்

நாங்கள் தாய் தமிழ் மொழியை மிகவும் உயர்வாக மதிக்கிறோம். பிரதமர் மோடி சமஸ்கிருதத்தைக் காட்டிலும், தமிழ்மொழி உயர்வானது எனக் கூறி உள்ளார், அதனால் இந்தி, சமஸ்கிருதத்தை மத்திய அரசு புகுத்துவதாகக் குற்றம்சாட்டுவது தவறு. ராகுல்காந்தி அரசியல் முதிர்ச்சி அற்றவர் என்பதால், பிரதமர் மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகிறார். இப்போது தான் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜெர்மனி போன்ற நாடுகள் கூட இந்தியாவை உயர்வாகக் கருதுகிறது. மிகப் பெரிய பொருளாதார வல்லரசாக இந்தியா உருமாறிக் கொண்டு இருக்கிறது.

கச்சத்தீவு

கச்சத்தீவு

கச்சத்தீவை மீட்பதில் மத்திய பாஜக அரசு உறுதியாக உள்ளது. அதுவே பாஜகவின் கொள்கை. விரைவில் இந்த விவகாரத்தில் முன்னேறத்தை மக்கள் காண்பார்கள். திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு, சிமெண்ட் விலையேற்றம், கேரளாவுக்கு அரிசி கடத்தல் போன்றவை தொடங்கிவிடும். எதற்கு எடுத்தாலும் மத்திய அரசு குறை சொல்வதை விட்டுவிட்டு, தமிழகத்தின் முன்னேற்றத்திற்குத் தேவையான நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்க வேண்டும்,

பாஜக

பாஜக

மேலும், பஞ்சு மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு நீக்கியுள்ளதால், இன்னும் 45 நாட்களுக்குள் பஞ்சு விலை குறைந்து, நூல் விலையும் குறையும் என்றும், அப்போது ஜவுளித் தொழில் நெருக்கடி தீரும். பாஜகவில் ஒருவர் இரு முறைக்கு மேல் ஒரு பதவியில் இருக்க முடியாது .அதன்படிதான் தேர்தல் நடைபெற்று உள்ளது. இது வாரிசு அடிப்படையில் வருவதல்ல. பாஜக ஒரு கட்டுக்கோப்பான கட்சியாகும். புதிய நிர்வாகிகளுக்கு ஏற்கனவே இருந்த நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள்" என்றார்.

English summary
BJP senior leader CP Radhakrishnan says dravidian model ruined Tamilnadu: (திராவிட மாடல் குறித்து பாஜக மூத்த தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்) BJP senior leader CP Radhakrishnan says BJP respects Tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X