Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

1 சொல் சொன்ன ஜிகே வாசன்.. படார்னு பார்த்த செங்கோட்டையன்.. பக்கத்துல சண்முகம் வேற.. ஆஹா "அக்ரஹாரம்"

ஈரோடு கிழக்கில் உள்ள இஸ்லாமியர்களின் வாக்குகளை பெற போவது எந்த கட்சி என்ற ஆர்வம் எகிறி வருகிறது

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசனின் பிரச்சார பேச்சுக்கள் இணையத்தில் வீடியோவாக ஷேர் ஆகி கொண்டிருக்கின்றன.. என்ன காரணம்?

ஈரோடு கிழக்கில் எப்படியும் 6 முனைப்போட்டி, 5 முனைப்போட்டி ஏற்பட போவதாக கணிப்புகள் வலம் வந்த நிலையில், இறுதியில் 4 முனைப்போட்டியே இறுதியாகி உள்ளது.

திமுக கூட்டணி, அதிமுகவுக்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி கவனம் பெற்றுள்ளது.. இதற்கு முக்கிய காரணம் சீமானின் அரசியல் வியூகமும், அவர் முன்னெடுத்து வரும் பேச்சுக்கள்தான்.

 இஸ்லாமிய புள்ளிகள்

இஸ்லாமிய புள்ளிகள்

பாஜக பிரச்சாரம் செய்வதையே எடப்பாடி பழனிசாமி தரப்பு அவ்வளவாக விரும்பவில்லை என்று சொல்லப்பட்டது.. காரணம், சிறுபான்மையினர் ஓட்டுக்களை பெற வேண்டும் என்பதற்காகவே, பாஜக முக்கிய தலைவர்கள் இல்லாமலேயே ஈரோட்டில் பிரச்சாரங்களை நடத்த மறைமுக உத்தரவுகள் பறந்ததாக சொல்லப்பட்டது.. அதனாலேயே, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில் வசிக்கும் முக்கிய இஸ்லாமிய பிரமுகர்களை, ஈரோட்டுக்கு அழைத்துச் சென்று தங்க வைத்து பிரச்சாரம் மேற்கொள்ளவும் தீவிர முயற்சிகளை எடுக்கவும் செய்தது.

 மீனிங் என்ன

மீனிங் என்ன

போதாக்குறைக்கு, அதிமுகவின் நிலைப்பாட்டையும் பகிரங்கமாகவே தன்னுடைய பிரச்சாரத்தில் வெளிப்படுத்தியிருந்தார் எடப்பாடி பழனிசாமி. "எங்களுக்கு வாக்களிக்கும் சிறுபான்மையினருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக சிலர் தவறான பிரச்சாரங்களை செய்கிறார்கள்.. கூட்டணி வைப்பதால் ஒரு கட்சி சொல்வதை நாங்கள் கேட்போம் என்று நினைக்காதீங்க. அவர்களின் கொள்கையை ஏற்றுக் கொண்டோம் என்றும் அர்த்தம் கிடையாது. யாருடன் கூட்டணி வைத்தாலும் எங்களின் கொள்கை மாறிவிடாது" என்று தெளிவுபடுத்தியிருந்தார். சிறுபான்மையினருக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி இப்படி பேசியிருந்ததை பாஜக தரப்பு கவனிக்காமல் இல்லை.

 ஜெர்க் அண்ணாமலை

ஜெர்க் அண்ணாமலை

எந்தமுறையும் இல்லாமல், இந்த முறை இடைத்தேர்தலில் சீமான் மேற்கொண்டிருந்த பிரச்சாரம், சிறுபான்மையினர் ஓட்டுக்களை தன்வசம் இழுக்கும் அளவுக்கு சென்றுவிட்டதாக கணிப்புகள் பரபரத்த நிலையில், எடப்பாடியின் பிரச்சாரங்களும் மிகுந்த கவனத்தை பெற்றது.. இதைவிட ஒருபடிமேலபோய், அண்ணாமலை மேற்கொள்ளும் பிரச்சாரத்தில் கலந்துகொள்ள போவதில்லை என்று எடப்பாடி கூறியிருந்தது, பாஜகவுக்கே சற்று அதிர்ச்சிதானாம்.. அந்த அளவுக்கு சிறுபான்மையினர் ஓட்டுக்களை இழந்துவிடக்கூடாது என்று பார்த்து பார்த்து எடப்பாடி காய் நகர்த்தி வரும்நிலையில், அண்ணாமலையே தொகுதிக்குள் நேரடி பிரச்சாரத்தில் ஈடுபட்டது, எந்த அளவுக்கு சிறுபான்மையினர் வாக்குகளை அதிமுகவுக்கான பெற்றுத்தரும் என்ற சந்தேகத்தையும் புதுசாக கிளப்பி விட்டு வருகிறது.

 வார்த்தைவிட்ட வாசன்

வார்த்தைவிட்ட வாசன்

இந்த சூழலில்தான், வாசனின் பேச்சு அதற்கு மேல் அதிமுகவுக்கு அதிர்ச்சியை தந்துவிட்டதாம்.. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் தென்னரசை ஆதரித்து, பிபெ அக்ரஹாரம் பகுதியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அவர் பேசும்போது, "இந்த தேர்தலை யாருமே எதிர்பார்க்கவில்லை... எதிர்பாராதவிதமான தேர்தல் ஆகும்.. சாதி, மதம், இனத்திற்கு அப்பாற்பட்டு அதிமுக கூட்டணி தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது.

இஸ்லாமியர்

இஸ்லாமியர்

இந்தியாவின் பொருளாதார உயர்விலே இஸ்லாமியர்கள் பங்கு மிகப்பெரியது... இஸ்லாமியர்களுக்கு பிரச்சனை என்றால் குரல் கொடுக்கக்கூடிய அரசு அதிமுக அல்ல. இஸ்லாமியர்களுக்கு அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் நாம் எதிர்பார்க்கும் நல்ல முடிவு கிடைக்கும்" என்றார்.. அதிமுகவை பற்றி இப்படி பேசியதுமே, பக்கத்தில் நின்றுகொண்டிருந்த மூத்த தலைவர்கள் செங்கோட்டையன், சிவி சண்முகம் உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர்... பிறகு, டக்கென சுதாரித்து கொண்ட ஜிகே வாசன், உடனடியாக அடுத்த வார்த்தையிலேயே, "குரல் கொடுப்பது அதிமுகவும், தமாகாவும்தான்" என்றாராம்.

 வாய் தவறிய வாசன்

வாய் தவறிய வாசன்

அதிமுக கூட்டணியில் தமாகா அங்கம் வகித்து வரும்நிலையில், அதுவும் இந்த முறை அதிமுகவுக்காகவே, தொகுதியை விட்டுக்கொடுத்துள்ள நிலையில், அதிமுகவை, வாசன் குறை சொல்லியிருக்க வாய்ப்பேயில்லை என்றும், வாய் தவறியே வாசன் இப்படி பேசிவிட்டார் என்றும் கருத்துக்கள் குவிந்து வருகின்றன.. எனினும், வாசனின் பேச்சை சிலர் வீடியோவாக சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வருகின்றனர்.. இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும், கடந்த தேர்தல்களில் சிறுபான்மையினரிடம் இழந்த வாக்குகளை, அதிமுக இந்த முறை கொத்தோடு அள்ளக்கூடும் என்று அடித்து சொல்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.. என்ன நடக்க போகிறது? பார்ப்போம்...!!!

தாலிக்கு தங்கம்

தாலிக்கு தங்கம்

முன்னதாக, வாசன் பொதுமக்களிடம் பேசும்போது திமுகவை சரமாரியாக விமர்சித்தார்.. அதிமுக ஆட்சியில் இருந்த போது செயல்படுத்தப்பட்ட தாலிக்குத் தங்கம், மடிக்கணினி, அம்மா கிளினிக் போன்ற திட்டங்ளை முடக்கி, ஏழையின் வயிற்றில் திமுக அடிக்கிறது. கொரோனாவில் இருந்து மீண்டு வரும் மக்கள் மீது, வீட்டுவரி, மின் கட்டணம், பால் விலையை உயர்த்தி மும்முனை தாக்குதல் நடத்தியுள்ளனர். மகளிருக்கான உரிமைத்தொகை, சமையல் எரிவாயு மானியம், கல்விக்கடன் போன்ற வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றியுள்ளனர்.

பட்டி - பூட்டி

பட்டி - பூட்டி

இதையெல்லாம் நீங்கள் நன்கு உணர வேண்டும்.. அப்போதுதான் இந்த தேர்தலில் நாம் எதிர்பார்க்கும் நல்ல முடிவு கிடைக்கும். இந்த தொகுதியில் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் மக்களை அவமதிக்கத் தொடங்கிவிட்டன. ஏழை மக்களுக்கு அழுத்தம் கொடுத்து, ஏமாளியாக்கி பட்டியில் பூட்டி வைத்து தரக்குறைவாக நடத்துகின்றனர். இது ஜனநாயகம் அல்ல, பணநாயகம். இங்கு அநியாயத்தின் அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் தர்மம் ஜெயிக்க வேண்டுமா; அதர்மம் ஜெயிக்க வேண்டுமா? என மக்கள் முடிவு எடுக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+