ஈரோட்டு தோட்டத்தில் இருட்டில் நடமாடிய 3 உருவங்கள்.. 19 வயது பெண்ணால் ஆடிப்போன கோபி.. காதலன் நிலைமை?
ஈரோடு: ஈரோடு அருகே உள்ள விவசாய தோட்டத்தில் நடந்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் விலகவில்லை.. 19 வயது பெண் செய்த காரியத்தை கண்டு, கோபி போலீசார் அதிர்ந்து போயுள்ளனர்.. தற்போது இது தொடர்பான விசாரணையும் நடந்து கொண்டிருக்கிறது.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே உள்ளது காஞ்சிக்கோயில்.. இந்த பகுதியில் தருண்குமார் என்பவர் வசித்து வருகிறார்.. 22 வயதாகும் தருண்குமார், கூலி வேலை செய்பவர் ஆவார்..

இன்ஸ்டாவில் பழக்கம்
இவருக்கு, கோபி அருகே அளுக்குளி பள்ளத்தோட்டம் மேட்டுவலுவை சேர்ந்த 19 வயது சுபஸ்ரீ என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் 2 வருடம் முன்பு அறிமுகமாகியிருக்கிறார்.. ஆரம்பத்தில் நட்பாக இருந்தவர்கள், நாளடைவில் காதலர்களாக மாறியிருக்கிறார்கள்.. இதையடுத்து நேரில் சந்தித்து பேசியதுடன், அடிக்கடி ஒன்றாக சேர்ந்து போட்டோக்களையும் எடுத்துள்ளனர்.
ஒருகட்டத்தில் காதலர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், சுபஸ்ரீ, தருண்குமாருடன் பேசாமல் இருந்துள்ளார்... காதலி தன்னிடம் பேசாமல் இருப்பதை தாங்கி கொள்ள முடியாமல், தருண்குமார் ஆத்திரமடைந்துள்ளார்.. இந்த கோபத்தில், ஜாலியாக ஊர்சுற்றியபோது சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோக்களை எல்லாம் இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதாக சுபஸ்ரீயிடம் மிரட்டியிருக்கிறார்.
பாட்டி காளியம்மாள்
இதனால் அதிர்ச்சி அடைந்த சுபஸ்ரீ, உடனே இதுகுறித்து பெற்றோரிடம் சொல்லி உள்ளார்.. பிறகு, சுபஸ்ரீயின் அம்மா கோபி போலீசில் புகார் தந்தார்.. இந்த புகாரின் அடிப்படையில் கடந்த 2023ம் ஆண்டு, தருண்குமார் போக்சோவில் கைதானார்.. ஆனால், 4 மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்து, கோபி அருகேயுள்ள தன்னுடைய பாட்டி காளியம்மாள் வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், நேற்றிரவு வீட்டை விட்டு வெளியே சென்ற தருண்குமார், தலையில் கத்திக்குத்து காயத்துடன், ரத்தம் வழிந்தபடி ஓடி வருவதை பார்த்து, அங்கிருந்தவர்கள் பதறிப்போனார்கள்..
உடனடியாக தருண்குமாரை மீட்டு, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கோபி போலீசார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தருண்குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
தருண்குமார் - சுபஸ்ரீ
அப்போதுதான் தன்னுடைய காதலி பற்றின பல்வேறு தகவல்களை கூறினார்.. அதாவது ஜெயிலிலிருந்து வெளியே வந்தபிறகும், சுபஸ்ரீயை தனிமையில் சந்தித்து வந்தாராம்.. அப்படித்தான் நேற்றிரவும், தருண்குமாருக்கு போன் செய்த சுபஸ்ரீ, அருகிலுள்ள விவசாய தோட்டத்திற்கு வர சொல்லி உள்ளார்.. அதன்படியே தோட்டத்துக்கு வந்த தருண்குமாரிடம் சுபஸ்ரீ பேசிக் கொண்டிருந்தார்.. பிறகு திடீரென மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து, தருண்குமாரை குத்திவிட்டாராம் சுபஸ்ரீ..
இதை கொஞ்சமும் எதிர்பாராத தருண்குமார் சுதாரிக்க முயன்றபோது, தோட்டத்தில் மறைந்திருந்த இன்னொரு இளைஞர் ஓடிவந்து, தருண்குமாரை கீழே தள்ளி கழுத்தை நெரித்திருக்கிறார்.. உடனே சுபஸ்ரீ அருகிலிருந்து கல்லை எடுத்து தலையில் தூக்கி போட்டுள்ளார்..
உயிரை பிடித்துக்கொண்டு ஓடிய இளைஞர்
இதனால் உடம்பெல்லாம் கத்திகுத்தால் காயம் ஏற்பட்டதால், அவர்களிடம் இருந்து தப்பித்து, தன் வீட்டுக்கு ஓடிவந்து, அங்கிருந்தவர்களிடமும் உதவி கேட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாராம் தருண்குமார். இவ்வளவும் விசாரணையில் தெரியவந்ததையடுத்து, சுபஸ்ரீ சம்பந்தமான விசாரணையை போலீசார் கையில் எடுத்தனர்.

அப்போதுதான், சுபஸ்ரீக்கு திருமணமான விஷயமே போலீசுக்கு தெரியவந்தது.. திருப்பூர் அருகே உள்ள நத்தகாடையூர் பாரதிபுரத்தை சேர்ந்த சிவரத்தினம் என்பவரை, சுபஸ்ரீ திருமணம் செய்துள்ளார்.. அவருடன்தான் தற்போது வாழ்ந்தும் வருகிறார்.
உறவினர் தரணிதரன்
ஆனால், தருண்குமார் விவகாரம் கணவனுக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, தருண்குமாரை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.. இதற்காக தன்னுடைய உறவினரான உள்ள குருமந்தூர் மோலபாளையத்தை சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவர் தரணிதரன் என்பவரின் உதவியை நாடியிருக்கிறார்.
அதன்படியே, சம்பவத்தன்று, தோட்டத்தில் தருண்குமாரை சுபஸ்ரீ கத்தியால் குத்த, மறைந்திருந்த தரணிதரனும் கழுத்தை நெரித்து கொல்ல முயன்றுள்ளது தெரியவந்தது.. இப்போது, சுபஸ்ரீ அவரது உறவினர் தரணிதரன் என இருவர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.. இருவருமே ஈரோடு ஜெயிலில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications