ஒரே வார்த்தை.. ‛வீக்’கான ஓபிஎஸ்.. உச்சத்தில் ஈபிஎஸ்..உச்சநீதிமன்ற உத்தரவால் அதிரடி திருப்பம்.. ஏன்?
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை பொதுக்குழு மூலம் தேர்வு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு: அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி, ஓ பன்னீர் செல்வம் இடையே பிரச்சனை நிலவி வருகிறது. இருவரும் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். இந்நிலையில் தான் உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. அதன்படி அதிமுக பொதுவேட்பாளரை நிறுத்த வேண்டும் எனவும், அவரை பொதுக்குழு மூலம் தேர்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் எடப்பாடி பழனிச்சாமியின் கை ஓங்கிய நிலையில் ஓபன்னீர் செல்வம் வீக்காகி உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமியும், ஓ பன்னீர் செல்வம் தரப்பும் தனித்தனியே வேட்பாளர்களை நிறுத்தி உள்ளனர். அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வெளியாகாத நிலையில் இருவரும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோர இருந்தனர்.
இதற்கிடையே தேர்தல் ஆணைய செயல்பாட்டை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி இடையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், ‛‛ஜூலை 11 பொதுக்குழு தீர்மானத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும். இதுதொடர்பான விபரங்களை இணையதளத்தில் பதிவேற்ற உத்தரவிட வேண்டும்'' என கோரியிருந்தார்.

இடைக்கால உத்தரவு
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு பதில் அளிக்க உத்தரவிட்டது. தேர்தல் ஆணையம் நேற்று பதிலளித்தது. அதில், ‛‛ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு தீர்மானங்கள் ஏற்கப்படவில்லை. எடப்பாடி பழனிச்சாமியை இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்கவில்லை'' என தெரிவித்து இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் தான் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக மட்டும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

உத்தரவு என்ன சொல்கிறது?
அதன்படி ‛‛அதிமுக சார்பில் இடைக்கால உத்தரவில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும். வேட்பாளர் தேர்வை பொதுக்குழு அங்கீகரிக்க வேண்டும். இந்த பொதுக்குழுவிற்கு ஓ பன்னீர்செல்வம் மற்றும் நீக்கப்பட்டவர்களில் கருத்து கேட்க வேண்டும். இறுதியில் தேர்வாகும் வேட்பாளரின் வேட்புமனுவில் அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் கையெழுத்திட்டு தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப வேண்டும். அதனை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கும்'' என உத்தரவிட்டனர்.

எடப்பாடிக்கு ஆதரவு
மேலும் உச்சநீதிமன்ற உத்தரவையொட்டி பொதுக்குழு தேர்வு செய்யும் வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளது. அந்த வகையில் பார்க்கும்போது அது எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கு சாதகமாகவும், ஓ பன்னீர் செல்வத்துக்கு வீக்காகவும் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். அதாவது அதிமுகவில் 2573 பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 2000க்கும் அதிகமானவர்கள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் தான் உள்ளனர். இதனால் இந்த உத்தரவு என்பது எடப்பாடி பழனிச்சாமி சாதகமாக பார்க்கப்படுகிறது. அதாவது பொதுக்குழு தேர்வு செய்யப்படும் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருந்து தான் இருக்கும் எனவும், அதுவும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மாஜி எம்எல்ஏ தென்னரசாக தான் இருக்கும் எனவும் அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எவ்வளவு?
மேலும் தற்போது ஜூலை 11 பொதுக்குழுவை இன்னும் அங்கீகரிக்காத நிலையில் அதற்கு முந்தைய நபர்கள் தான் பொதுக்குழு உறுப்பினர்களாக கருத்தில் கொள்ளப்படுவார்கள். அதன்படி பார்த்தால் ஓ பன்னீர் செல்வத்துக்கு 2,539 பொதுக்குழு உறுப்பினர்களும், ஓ பன்னீர் செல்வத்துக்கு 34 பொதுக்குழு உறுப்பினர்களும் மட்டுமே ஆதரவாக உள்ளனர். மாவட்ட செயலாளர்களை பொறுத்தமட்டில் எடப்பாடி பழனிச்சாமிக்கு 69 பேரும், ஓ பன்னீர் செல்வத்துக்கு 4 பேரும் உள்ளனர். ஒன்றிய செயலாளர்கள் என்ற வகையில் பார்த்தால் எ டப்பாடி பழனிச்சமியின் பக்கம் 755 பேரும், ஓ பன்னீர் செல்வம் பக்கம் 30 பேரும், எம்எல்ஏக்கள் என பார்த்தால் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் 61 பேரும், ஓ பன்னீர் செல்வம் பக்கம் 4 பேரும், எம்பிக்களில் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் 3 பேரும், ஓ பன்னீர் செல்வம் பக்கம் 2 பேர் மட்டுமே உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன்மூலம் எடப்பாடி பழனிச்சாமியின் கையே ஓங்கி உள்ளது என்பது தெளிவாகும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

பொதுக்குழு கூடுமா?
நிலைமை இப்படி இருந்தாலும் கூட பொதுக்குழு கூட்டப்படுமா? இல்லாவிட்டால் கடிதம் மூலம் ஆதரவு பெறப்படுமா? என்பது இன்னும் முடிவாகவில்லை. பிப்ரவரி 7 ம் தேதிக்குள் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட வேண்டும் என்பதால் அதனை மையமாக வைத்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாறாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் எழுத்துப்பூர்வமாக ஆதரவு பெற முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவும் கூட இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பதால் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
களம் இப்போதான் சூடுபிடிக்குது..முதல் ஆளாக பிரச்சாரத்துக்கு கிளம்பிய எடப்பாடி! ரேசில் முந்தும் அதிமுக -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
அவிநாசி: பாஜகவுக்காக.. அதிமுகவின் எஃகு கோட்டையை தாரை வார்த்த எடப்பாடி பழனிசாமி! தனபால் கதை ஓவர் -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications