ஈரோடு காவிரி ஆற்றில் மிதந்த உருவம்.. பவானி கதவணை நீர்லையத்தில் யாரது? இரவெல்லாம் அழுத கிருத்திகா
ஈரோடு: ஈரோட்டில் ஆசை ஆசையாக காதலித்து திருமணம் செய்திருக்கிறார் கிருத்திகா.. இறுதியில் குடும்ப வன்முறையால் கிருத்திகா தற்கொலை செய்து கொண்டார்.. இந்த தற்கொலை சம்பவம்தான், ஒரு கொலை வரை சென்றிருக்கிறது. இது தொடர்பாக 5 பேர் கைதாகி உள்ளனர்.. அவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.. சம்பந்தவர்கள் இப்போது சிறையில் உள்ளனர். என்ன நடந்தது?
ஈரோடு மாவட்டம் கதவணை நீர் நிலையம் அருகே ஜல்லிக்கல்மேடு பகுதியில் அழுகிய நிலையில், ஆண் சடலம் ஒன்று கடந்த 13ம் தேதி மீட்கப்பட்டது. ஆனால், இறந்தவர் யார் என்று தெரியவில்லை.

அந்த சடலத்தை பரிசோதனை செய்தபோது, போலீசார் அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.. காரணம், உடலில் கற்கள் கட்டப்பட்டிருந்தது.. வயிறு மற்றும் மார்பு பிளந்து காணப்பட்டது.. பிளந்து காணப்பட்ட மார்பு, வயிற்றில் கற்கள் சொருகப்பட்டிருந்தன.
கிருத்திகா திடீர் முடிவு
இதனால், நபரை வேறு இடத்தில் கொலை செய்துவிட்டு, வாகனத்தில் கொண்டு வந்து காவிரி ஆற்றில் வீசி இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது.. எனவே, இது தொடர்பான விசாரணையை போலீசார் மேற்கொண்டனர்.
அப்போதுதான், உயிரிழந்தவர் பவானி தொட்டிபாளையத்தை சேர்ந்த மதியழகன் என்ற 30 வயது டிரைவர் என்பது தெரியவந்தது.. இவர் 24 வயதுடைய கிருத்திகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.. ஆனால், குடிபோதைக்கு அடிமையானவரான மதியழகன், தினம் தினம் குடித்துவிட்டு வந்து, கிருத்திகாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.. ஒருகட்டத்தில், மதியழகனின் சித்ரவதை தாங்காமல், கிருத்திகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம்.
குடிப்பழக்கம் ரவுடித்தனம்
அதற்கு பிறகும் அடங்காத மதியழகன், குடிப்பழக்கத்தில் ரவுடித்தனம் செய்து வந்துள்ளார்.. தன்னுடைய அம்மா சுதா, தம்பி முருகானந்தத்தை அடித்தும் அரிவாளால் வெட்டியும், பணம் கேட்டும் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
அப்படித்தான், கடந்த 11ம் தேதி இரவு, வீட்டில் போதையில் தகராறு செய்துள்ளார் மதியழகன்.. இதனால் பொறுமையிழந்த தாய் சுதா, மகன் முருகானந்தம், நண்பர் கௌரி சங்கர் மற்றும் கிருத்திகாவின் அண்ணன் யோகேஷ், உறவினர் சக்தி பாண்டி ஆகியோர் அனைவரும் ஒன்றுசேர்ந்து மதியழகனை கொன்றுள்ளனர்.
மதியழகனை கத்தியால் குத்தியும், அரிவாளால் வெட்டியும் கொன்றுள்ளனர். பிறகு, சடலத்தை காவிரி ஆற்றில் வீசிவிடுவது என முடிவெடுத்துள்ளனர். ஆனால், சடலம் மேலே மிதந்துவந்துவிட்டால், அனைவரும் மாட்டிக் கொள்வோம் என்று பயந்திருக்கிறார்கள்..
மாஸ்டர் பிளான் செய்த 5 பேர்
அதனால், தண்ணீருக்கு மேல் சடலம் வராத வகையில், சடலத்தின் வயிற்றை கிழித்தும், மார்பை பிளந்தும் கற்களை வைத்து கட்டினார்கள்.. பிறகு, ஆம்னி காரில் எடுத்து சென்று காவிரி ஆற்றில் ஜல்லிக்கல்மேடு பகுதியில் வீசிவிட்டு அவரவர் வீட்டுக்கு சென்றுவிட்டார்களாம்.. ஒருகட்டத்தில், உடல் தண்ணீரில் அழுகிவிடவும், அது மேலே மிதந்துவந்துவிட்டது. இதற்குபிறகுதான், இந்த கொலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது..
இப்போது பெற்ற மகனை கொலை செய்த தாய் உட்பட 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், ஆம்னி கார், ஒரு பைக்கையும் பறிமுதல் செய்தனர். இறுதியாக கைது செய்யப்பட்ட 5 பேரும், பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications