ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்..அனலடிக்கும் களம்..அதிமுக - பாஜக பேச்சு..களமிறங்கும் ஓபிஎஸ்
ஈரோடு: இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசியல் களம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அதிமுக போட்டியிடும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் விட்டுக்கொடுத்த நிலையில் பாஜக உடன் இன்று பரபரப்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஓ.பன்னீர் செல்வமும் ஈரோடு கிழக்குத் தொகுதியில் தனியாக களமிறங்கப்போவதாகவும், ஒருவேளை பாஜக போட்டியிட்டால் போட்டியின்றி ஆதரவு அளிப்பதாகவும் அவர் அறிவித்தார். ஓ பன்னீர் செல்வம் பாஜகவுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் உள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கோரியிருப்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதிமுக இருஅணிகளாக இருக்கும் நிலையில் பாஜகவின் ஆதரவு யாருக்கு என்பது மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் கடந்த 04ம் தேதி காலமானார். திருமகன் ஈவேராவின் மறைவால் காலியாக உள்ள ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை வருகிற மார்ச் 02ம் தேதி நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நேரத்தில் இருந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி அறிவித்துள்ளார். அதேவேளை, அதிமுக கூட்டணியில் இடைத்தேர்தலில் யார் போட்டியிவார் என்று இதுவரை முடிவாகவில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓ.பன்னீர் செல்வம் தரப்பிலும் இடைத்தேர்தலில் வேட்பாளர் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக தற்போது இந்த இடைத்தேர்தலில் போட்டியிட மும்முரம் காட்டி வருகிறது. இதனால், அதிமுக - பாஜக கூட்டணி ஏற்படுமா? இடைத்தேர்தலில் அதிமுக, பாஜக தனித்து போட்டியிடுமா? அல்லது இணைத்து ஒரு வேட்பாளரை நிறுத்துமா? என்று அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக - பாஜக இடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. தமிழ்நாடு பாஜக தலைமையகத்திற்கு அதிமுக மூத்த தலைவர்கள் சென்று அங்கு இடைத்தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் உள்ளது. இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? அப்படி கிடைத்தால் அந்த அதிமுகவின் எந்த அணிக்கு கிடைக்கும் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. இதற்காக தேர்தல் தலைமை ஆணையரை சந்தித்து இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று இபிஎஸ் அணியும், ஓபிஎஸ் அணியும் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் பரவுகிறது.
இந்த சூழ்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அதிமுக - பாஜக இடையே இன்று பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. சென்னை திநகரில் உள்ள கமலாயத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் அண்ணாமலையை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் கேபி முனுசாமி, செங்கோட்டையன், தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்பி வேலுமணி உள்ளிட்டவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த வேளையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தங்கள் அணிக்கு ஆதரவு வழங்கும்படி கேட்டு கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையின்போது அண்ணாமலையுடன் அக்கட்சியின் மூத்த தலைவர்களான சிபி ராதாகிருஷ்ணன், எச் ராஜா உள்பட பலர் உடனிருந்தனர்.
முன்னதாக அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் உள்ளது. இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் கிடைக்குமா? அப்படி கிடைத்தால் அந்த அதிமுகவின் எந்த அணிக்கு கிடைக்கும் என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. இதற்காக தேர்தல் தலைமை ஆணையரை சந்தித்து இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று இபிஎஸ் அணியும், ஓபிஎஸ் அணியும் டெல்லி செல்ல உள்ளதாக தகவல் பரவுகிறது. இந்த சூழ்நிலையில் ஓ.பன்னீர் செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட உரிமை இருப்பதாக கூறினார். எங்களிடமும் கூட்டணி கட்சிகள் பேசி வருவதாக கூறிய ஓ.பன்னீர் செல்வம், பாஜக போட்டியிட்டால் ஆதரவு தருவோம் என்றும் தெரிவித்தார். அதிமுக கூட்டணியில் உள்ள அனைவருக்குமே போட்டியிட உரிமை உள்ளதாகவும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். பழனிச்சாமியுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று விரும்புவதாகவே ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். இரட்டை இலை முடங்க தான் காரணமாக இருக்க மாட்டேன் என்றும் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்றும் ஓபிஎஸ் கூறியுள்ளார். ஓ.பன்னீர் செல்வத்துடன் இணைந்து செயல்படுவாரா பழனிச்சாமி என்பது அவர் கூறினால் மட்டுமே தெரியும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications