அனுமதியே வாங்கல.. மண்டபத்தில் மீட்டிங் போட்ட ஈபிஎஸ் டீம்.. “சீல்” வைத்து அதிரடி காட்டிய அதிகாரிகள்!
அதிமுகவினர் பயன்படுத்திய மண்டபத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள வைராபாளையம் பகுதியில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி அணியினர் தேர்தல் அலுவலகமாகப் பயன்படுத்தி வந்த திருமண மண்டபத்திற்கு தேர்தல் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
திருமண மண்டபத்தில் பணப்பட்டுவாடா நடைபெற்றதாக வந்த புகாரை அடுத்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் அங்கு சோதனையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அந்த திருமண மண்டபத்தை அதிமுக எடப்பாடி பழனிசாமி அணியினர் அனுமதி பெறாமல் தேர்தல் தொடர்பான ஆலோசனைக்குப் பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது.

ஓபிஎஸ் - ஈபிஎஸ்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் என இரு தரப்பிலும் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டதால் தேர்தல் களம் விறுவிறுப்பானது. இந்த போட்டா போட்டி அறிவிப்பால் இரட்டை இலை சின்னம் முடங்கும் சூழல் உருவானது. இதற்கு மத்தியில், 'இரட்டை இலை' சின்னம் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் தொடரப்பட்ட வழக்கில், அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக தீர்ப்பு வழங்கியது.

விலகிய ஓபிஎஸ்
அதிமுக வேட்பாளர் தேர்வு தொடர்பாக பொதுக்குழு உறுப்பினர்கள் அளித்த ஒப்புதல் கடிதங்களை அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பித்தார். இதையடுத்து, ஈபிஎஸ் அணி வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னம் உறுதியானது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் போட்டியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு விலகியது.

வேட்பு மனுக்கள்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்கள் பரிசீலனை நேற்று நடைபெற்றது. மனு தாக்கல் செய்த 96 வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் முன்னிலையில் நடைபெற்ற பரிசீலனையில் 121 வேட்புமனுக்களில் 38 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. ஓபிஎஸ் அணி வேட்பாளர் செந்தில்முருகன் தனது வேட்புமனுவில் அதிமுக என்று குறிப்பிட்டிருந்தார்.

இறுதி வேட்பாளர் பட்டியல்
ஆனால் அதிமுக தலைமையில் இருந்து ஏ, பி படிவங்கள் இணைக்கப்படாமல் இருந்தது. எனவே அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி உள்பட 83 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன. நாளை (10ஆம் தேதி) மாலை 3 மணி வரை மனுக்களை வாபஸ் பெறலாம். அதன்பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

தேர்தல் களம்
இதற்கிடையே ஈரோடு கிழக்கு தொகுதியில் அரசியல் கட்சியினரின் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக அமைச்சர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

சீல் வைத்த அதிகாரிகள்
இந்நிலையில், ஈரோடு வைராபாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தை உரிய அனுமதியின்றி அதிமுகவின் ஈபிஎஸ் அணியினர் தேர்தல் அலுவலகமாக பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முத்துகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். சோதனைக்கு வந்த அதிகாரிகளை அங்கிருந்த அதிமுகவினர் தடுக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்த அதிமுகவினரை வெளியேற்றிய பிறகு மண்டபத்தை இழுத்து மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
-
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம்












Click it and Unblock the Notifications