Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓசி ஓசி என சொல்லி அசிங்கப்படுத்துறாங்களா? நான் இருக்கேன்.. ஈரோட்டில் விஜய் பேச்சு

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஓசி ஓசி என சொல்லி மக்களுக்கான சலுகைகளை கிண்டல் செய்கிறார்கள். அசிங்கப்படுத்துகிறார்கள் என்று ஈரோட்டில் விஜய் ஆவேசமாக பேசினார். மேலும், "ஓசி ஓசின்னு சொல்லி மக்களை கேவலப்படுத்துகிறார்கள்.. கேட்க யாருமில்லைன்னு நினைக்காதீங்க.. நான் இருக்கிறேன்.. மக்களுக்கு ஒன்று என்றால் இந்த விஜய் இருக்கிறான்.. விஜய் வருவான்.." என்று விஜய் கூறினார்.

ஈரோட்டில் இன்று தவெக மக்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தவெகவில் இணைந்த செங்கோட்டையன் செய்திருந்தார். கரூர் கூட்டத்திற்கு பிறகு தமிழகத்தில் பொதுவெளியில் ஈரோட்டில் மக்களை சந்தித்த விஜய் சற்று உற்சாகத்துடனே காணப்பட்டார். மேலும் வழக்கம்போல் திமுகவை மட்டுமே அதிகமாக விமர்சித்தார்.

Erode TVK Public Meet vijay tvk erode

ஓசி ஓசி என சொல்லி

பாஜகவை பெரிதாக விமர்சிக்காமல் கடந்து போன விஜய் இலவசம் வழங்குவது தொடர்பாகவும் பேசினார். அப்போது அவர், மக்களுக்கான சலுகைகளை இலவசம் என சொல்லி அசிங்கப்படுத்துபவன் நான் இல்லை என்று கூறினார். விஜய் பேசியதாவது:-

சலுகைகளுக்கு எதிரானவன் நான் இல்லை. மக்களுக்கான சலுகைகளை இலவசம் என சொல்லி நான் அசிங்கப்படுத்துபவன் நான் இல்லை. மக்கள் காசில.. மக்களுக்கு செய்யுறத எப்படிங்க இலவசம் என்று சொல்வீங்க? அப்படியே செஞ்சிட்டீங்கனா.. ஓசி ஓசி என சொல்லி மக்களுக்கான சலுகைகளை கிண்டல் செய்கிறார்கள்.. அசிங்கப்படுத்துகிறார்கள்.

என்ன கேட்பதற்கு ஆள் இல்லை என நினைச்சீங்களா.. மக்களுக்கு ஒன்று என்றால் விஜய் வந்து நிப்பான்.. விஜய் வந்து கேள்வி கேப்பான். இந்த மக்களும் என் பக்கம் தான். ஓசி ஓசின்னு சொல்லி மக்களை கேவலப்படுத்துகிறார்கள். கேட்க யாருமில்லைன்னு நினைக்காதீங்க நான் இருக்கிறேன்..

வாயிலேயே வடை சுட திமுகவா

என் மக்கள் மானத்தோடும், மரியாதையுடனும் கவுரத்துடனும் வாழனும்.. என் மக்கள் யாருக்கும் கீழே கிடையாது. அப்படி அவர்கள் கவுரத்தோடு வாழவேண்டும் என்றால் அவர்களுக்கான வாழ்க்கை தரம் உயரனும். அவுங்களோட வாழ்வாதாரம் உயரனும். வாழ்வாதரம் உயர்ந்தால்தான் பொருளாதாரம் உயரும். பொருளாதாரம் உயர்ந்தால்தான் வசதி வாய்ப்புகள் உயரும்.

இதெல்லாம் உயர்ந்தால்தான் அவர்களுக்கான வாழ்க்கை தரம், அவுங்களுக்கான மரியாதை, கவுரவம் உயரும். இதற்கான சூழலை அரசாங்கம் அமைத்து கொடுக்கனும். அந்த திட்டங்களை செயல்படுத்தனும். இதைத்தான் அன்று சொன்னோம். உடனே. சொன்னால் மட்டும் போதுமா.. எப்படி செயல்படுத்துவீங்க.. என்று கேட்கிறார்கள். நாங்க என்ன.. வாயிலேயே வடை சுட திமுகவா.. டிவிகே டா...

207 பள்ளிகள் மூடியது யாருடைய ஆட்சியில்

எல்லாருக்கும் நிரந்தரமான ஒரு வீடு இருக்கணும் என்று சொன்னோம். உடனே எல்லாருக்கும் நாங்களே வீடு கட்டி கொடுத்துவிட்டோமே என்று சொல்வது.. நான் கேட்கிறேன்.. இங்கு வாடகைக்கு இருப்பவர்களேயே இல்லையா? எல்லாருக்கும் வீடு கட்டி கொடுத்து விட்டீர்களா? அடுத்து வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் மினிமம் டிகிரி படித்து இருக்கனும் என்று சொன்னோம்.

உடனே எங்க ஆட்சியிலேயே எல்லாரும் டிகிரி படிச்சி முடிச்சிட்டாங்களே என்று சொல்வது.. அது உண்மை என்றால் ஸ்கூல் அளவில் அதிகம் டிராப் அவுட் ஆனது யாருடைய ஆட்சியில்ங்க.. பசங்க.. பிள்ளைங்க யாரும் சேரவில்லை என்று சொல்லிவிட்டு 207 பள்ளிகள் மூடியது யாருடைய ஆட்சியில்.. இதில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று டிராமா வேற..

காலிப்பணியிடங்களாவது நிரப்புனீர்களா?

அடுத்து குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வருமானம்.. வேலை கிடைக்கனும் என்று சொன்னால்.. நாங்க கொடுக்காத வருமானமா.. நாங்க கொடுக்காத வேலையா என்று சொல்வது.. எத்தனையோ லட்சம் காலிப்பணியிடங்கள் என்று சொல்லிவிட்டு ஆட்சிக்கு வந்தீர்கள் அல்லவா? எத்தனை லட்சம் பணியிடங்கள் காலிப்பணியிடங்கள் நிரப்புனீர்கள்.. ஒரு லட்சம் காலிப்பணியிடங்களாவது நிரப்புனீர்களா? இதெல்லாம் சொல்லிட்டு ஏமாற்றியது யாரோட ஆட்சியில்..

பெண்கள் பாதுகாப்பு இருக்குதா?

அடுத்து ரொம்ப முக்கியமா? பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. சட்டம் ஒழுங்கு இல்லை என்று சொன்னால், தமிழ்நாட்டில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு அதிகமாக உள்ளதாம்.. நீங்க சொல்லுங்க மக்களே.. பெண்கள் பாதுகாப்பு இருக்குது.. சட்டம் ஒழுங்கு சரியாக இருக்குது.. அவுங்க சொல்றது உண்மையா.. அவுங்க சொல்றதை நீங்கள் எற்றுக்கொள்கிறீர்களா.. சத்தமா? கேட்குதா சார்.. இதுதான் ரியாலிட்டி.. இதுதான் நிஜம்.. நம்முடைய ஆட்சியில் சட்டம் ஒழுங்கில் சமரசமே இருக்காது.. அதனால்தான் இவ்வளவு தைரியமாக சொல்றோம். தைரியமாக இருங்க மக்களே.. இவ்வாறு விஜய் பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+