"அதிகாலையில் அதிர்ச்சி.." ஈரோடு பெருந்துறை அருகே போலீசார் துப்பாக்கி சூடு.. உண்மையில் என்ன நடந்தது
ஈரோடு: ஈரோடு பெருந்துறை அருகே குற்றவாளியைப் பிடிக்க வந்த நெல்லை போலீசாரை அரிவாளால் தாக்கிய ரவுடி மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போலீசார் குற்றவாளிகளைப் பிடிக்கச் செல்லும் போது சில நேரங்களில் அனைத்தும் நினைத்தபடி நடக்காது. ரவுடிகள் செயலால் சில சமயம் நிலைமை கையை மீறிச் சென்றுவிடும். போலீசாரின் பாதுகாப்பிற்குத் துப்பாக்கி வழங்கப்பட்ட போதிலும், பெரும்பாலும் துப்பாக்கிச் சூடு நடக்காது.

இருப்பினும், வேறுவழியே இல்லை என்றால் மட்டுமே போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்துவார்கள்.அப்படியொரு ஷாக் சம்பவம் தான் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே நடந்துள்ளது.
ரகசியத் தகவல்: திருநெல்வேலி மாவட்ட பகுதியில், கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சிவசுப்ரமணியம் மற்றும் 4 குற்றவாளிகள் பெருந்துறை அருகே குள்ளம்பாளையம் என்ற இடத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவல் அடிப்படையில் நெல்லையில் இருந்து வந்த உதவி ஆய்வாளர் ஆன்ட்ரோ மற்றும் 6 போலீசார், குற்றவாளிகளைச் சுற்றி வளைக்க முயன்றனர்.
குள்ளம்பாளையத்தில் இன்று அதிகாலை போலீசார் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அவர்கள் ஒரு வீட்டில் பதுங்கி இருந்ததாகத் தகவல் கிடைத்தது. இந்த தகவல் அடிப்படையில் போலீசார் அவர்களைச் சுற்றி வளைத்து கைது செய்ய முயன்றனர். அப்போது அவர்களது அறைக்குள் சென்ற உதவி ஆய்வாளரை, சிவசுப்பிரமணியன் அரிவாளைக் கொண்டு தாக்க முயன்றார்.
துப்பாக்கிச் சூடு: அப்போது ஆன்ட்ரோ தன்னையும் தன்னுடன் வந்த காவலர்களையும் காப்பாற்றத் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.. ஆன்ட்ரோ ஒரு ரவுண்டு துப்பாக்கியால் சுட்டுள்ளார். இருப்பினும், இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.. அதேநேரம் இந்த குழப்பத்தில் அந்த ரவுடி கும்பல் தப்பித் தலைமறைவானது.. இதையடுத்து போலீஸ் உதவி ஆய்வாளர் ஆன்ட்ரோ அளித்த புகாரின் அடிப்படையில் பெருந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..
ஈரோடு மாவட்டத்தில் நீண்ட காலத்திற்குப் பிறகு போலீசார் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. துப்பாக்கிச் சூடு நடந்த இடம் அருகே வீடுகள் அதிகம் இல்லாததால் பாதிப்புகள் எதுவும் பெரிதாக ஏற்படவில்லை. அதிகாலையில் நடந்த இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசாரை தாக்க முயன்ற சிவசுப்ரமணியன் மீது கொலை உட்பட மொத்தம் 16 குற்ற வழக்குகள் மீது நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications