தமிழகத்தில் சூறாவளி பிரச்சாரம்.. மயங்கி விழுந்த மொழிபெயர்ப்பாளர்.. பதறிய ராகுல்
ஈரோடு: ராகுல் காந்தியின் பேச்சை மொழிபெயர்த்த கல்லூரி பேராசிரியர் முகமது இம்ரான்(35) திடீரென மயக்கம் அடைந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மூன்று நாட்கள் தேர்தல் பரப்புரைக்காக, தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கொங்கு மண்டலத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றிய ராகுல், நான் தமிழன் அல்ல, ஆனால் தமிழ் உணர்வு மற்றும் கலாச்சாரத்தின் மதிப்பை உணர்ந்துள்ளேன். என்ன ஆனாலும் சரி, தமிழ் மக்களை பிரதமரும் பாஜகவும் அவமதிப்பதை நான் அனுமதிக்க மாட்டேன். தமிழகத்தில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்த ஏராளமான வாய்ப்புகள் உள்ளன" என்றார்.
பிறகு ஈரோட்டில் பிரச்சாரம் செய்த ராகுல், கரூரில் உள்ள பிரபல முருகவிலாஸ் ஹோட்டலில் அசைவ உணவுகளை உட்கொண்டார். ராகுல்காந்தியுடன் வந்த கிட்டத்தட்ட 100 பேருக்கும் அங்கேயே உணவு பரிமாறப்பட்டது.
தமிழக அரசை கட்டுப்படுத்துவது போல்.. தமிழக மக்களையும் கட்டுப்படுத்த நினைத்தால் அது நடக்காது- ராகுல்
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில், மக்கள் மத்தியில் ராகுல் காந்தி உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது ராகுல் பேச்சை தமிழில் மொழிப்பெயர்த்த முகமது இம்ரான் (35) எனும் கல்லூரி பேராசிரியருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.
இதனால் கூட்டத்தில் பரபரப்பு நிலவ, உடனடியாக ராகுல் காந்தியின் அறிவுறுத்தலின் பேரில், மயக்கமடைந்த இம்ரான் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.