ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஈரோட்டில் அதிமுகவை முந்திய திமுக.. முக்கிய அமைச்சர்களுக்கு கடும் போட்டி.. சத்தியம் டிவி சர்வே

Google Oneindia Tamil News

ஈரோடு: வரும் சட்டசபை தேர்தலில் அதிமுகவின் கோட்டைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஈரோடு மாவட்டத்திலுள்ள எட்டு தொகுதிகளில் 4 தொகுதிகளில் திமுக; 3 தொகுதிகளில் அதிமுக வெல்லும் என்று சத்தியம் தொலைக்காட்சி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்னும் சில வாரங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் பிரசாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அதேபோல பல்வேறு செய்தி நிறுவனங்களும் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது சத்தியம் தொலைக்காட்சி தனது தேர்தல் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது.

ஈரோடு யாருக்கு

ஈரோடு யாருக்கு

அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் கொங்கு மண்டலத்திலுள்ள தொகுதிகள் பற்றிய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் 39% மற்றும் அதிமுக - 37% வாக்குகளைப் பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. வாக்கு சதவிகிதம் குறைவாக உள்ளதால் ஈரோடு கிழக்கு தொகுதி இழுபறியில் இருப்பதாகவே கூறப்பட்டுள்ளது.

ஈரோடு மேற்கு, பெருந்துறை

ஈரோடு மேற்கு, பெருந்துறை

அதே போல ஈரோடு மேற்கு தொகுதியில் திமுக 48% அதிமுக 40% வாக்குகள் பெறும். இந்த தொகுதியில் திமுக வெல்ல அதிக வாய்ப்புகள் உள்ளன. மொடக்குறிச்சி தொகுதியில் திமுக 51% வாக்குகளையும் பாஜக- 35% வாக்குகளையும் பெறும் என்று சத்தியம் டிவி சர்வே தெரிவித்துள்ளது. அதேபோல பெருந்துறை தொகுதியில் திமுக 42%, அதிமுக 37% வாக்குகள் பெறும் சத்தியம் டிவி சர்வே கூறப்பட்டுள்ளது. அதேபோல சுயேச்சை வேட்பாளர்கள் 14% வாக்குகளைப் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் கருப்பண்ணன் தொகுதி

அமைச்சர் கருப்பண்ணன் தொகுதி

அதிமுக அமைச்சர் கருப்பண்ணன் போட்டியிடும் பவானி தொகுதியில் அதிமுக 41% வாக்குகளையும் திமுக 35% வாக்குகள் பெறும் என்று கூறப்பட்டுள்ளது. அந்தியூர் தொகுதியில் திமுக 51%; அதிமுக- 34% பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அதேநேரம் நாம் தமிழர் - 10% வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

செங்கோட்டையனுக்கு கடும் போட்டி

செங்கோட்டையனுக்கு கடும் போட்டி

அதேபோல பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் போட்டியிடும் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் அதிமுக 40% பெறும். அதேநேரம் திமுக 36% வாக்குகள் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற செங்கோட்டையனுக்கு இந்த முறை கடும் சவால் உருவாகியுள்ளது. அடுத்தாக பவானிசாகர் தொகுதியில் அதிமுக 39% வாக்குகளையும் சிபிஐ 34%; வாக்குகளைப் பெறும் என்று கூறப்பட்டுள்ளது. வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் அளவிற்கு நாம் தமிழர் 12% வாக்குகளையும் மநீம- 8% வாக்குகளையும் இந்தத் தொகுதியில் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக முன்னணி

திமுக முன்னணி

ஈரோடு மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 8 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதில் 4 தொகுதிகளில் திமுக; 3 தொகுதிகளில் அதிமுக வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஒரு தொகுதியில் இழுபறியில் உள்ளது. கடந்த முறை ஈரோடு மாவட்டத்தை ஒட்டுமொத்தமாக அதிமுக கூட்டணி அள்ளியது. ஆனால் இந்த முறை அதிமுகவை விட திமுக அதிக இடங்களில் வெல்லும் எனச் சத்தியம் தொலைக்காட்சி சர்வேயில் கூறப்பட்டுள்ளது

English summary
Satyam tv opinion poll says DMK will win most seats in Erode.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X