ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓசி டிக்கெட் வேணாம்! ஈரோட்டிலும் கொந்தளித்த பெண்கள்! ப்ளான் பண்ணி பன்றாங்களோ? புகார் சொல்லும் திமுக!

Google Oneindia Tamil News

ஈரோடு : கோவை அரசு பேருந்தில் பயணித்த நடத்துனரிடம் எனக்கு இலவசமாக பயணம் செய்வதற்கு சீட்டு வழங்க வேண்டாம் என மூதாட்டி கூறியது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், ஈரோட்டில் எடுக்கப்பட்ட இது போன்றதொரு வீடியோ மீண்டும் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

தமிழகத்தில் சமீப காலமாக அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் திமுகவைச் சேர்ந்த தமிழக அமைச்சர்கள் பேசும்பொழுது தெரிவிக்கும் சில கருத்துக்கள் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. அதனை தவிர்க்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலினே நேரடியாக கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுகவைச் சேர்ந்த மூத்த அமைச்சர்களின் ஒருவரான பொன்முடி அரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது அரசு அறிவித்த நலத்திட்டங்களில் ஒன்றான அரசு பேருந்துகளில் பெரும்பாலானவை பெண்கள் ஓசியிலேயே பயணம் செய்வதாக பேசிய கருத்து பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது .

 10 வயது சிறுமி என கூட பார்க்கல.. 2 ஆண்டு கொடூர பலாத்காரம் செய்த உறவினருக்கு.. 142 ஆண்டுகள் சிறை 10 வயது சிறுமி என கூட பார்க்கல.. 2 ஆண்டு கொடூர பலாத்காரம் செய்த உறவினருக்கு.. 142 ஆண்டுகள் சிறை

இலவசமாக பயணம்

இலவசமாக பயணம்

இதற்கிடையே கோவை சேர்ந்த அரசு பேருந்தில் பயணித்த நடத்துனரிடம் எனக்கு இலவசமாக பயணம் செய்வதற்கு சீட்டு வழங்க வேண்டாம் . நான் இனிமேல் அரசு பேருந்தில் ஓசியில் பயணம் செய்ய மாட்டேன் ஒசியில் பயணம் செய்வதால் அமைச்சர்கள் கேலி செய்வது நிகழ்ச்சிகளில் பேசி கேவலப் படுத்துகிறார்கள் என உரத்த குரலில் நடத்துனரை கண்டித்து பணம் கொடுத்து டிக்கெட்டை பெற்று பயணம் செய்து சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே பரபரப்புக்கு உள்ளாகியது. இது அதிமுவினரின் சதி என புகார் எழுந்த நிலையில், சிலர் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டது.

ஈரோடு வீடியோ

ஈரோடு வீடியோ

இந்த நிலையில் பவானியில் இருந்து பெருந்துறை நோக்கி செல்லும் 12 ம் நம்பர் அரசு பேருந்து ஒன்று சித்தோடு வழியாக வந்து கொண்டிருந்தது. இதில் அந்தப் பேருந்தானது சித்தோடு அருகே உள்ள ராயர் பாளையம் எனும் பகுதியில் வந்தபோது அப்பகுதியை சேர்ந்த சில பெண்கள் இந்த பேருந்தில் ஏறியுள்ளனர் . அப்போது பேருந்தின் நடத்துனரிடம் ராயர்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் சுமார் 3 மணி நேரமாக ஏராளமான அரசு பேருந்துகள் வந்து சென்றபோதும் பெண்களாகிய தங்களை பஸ்ஸில் ஏறுவதற்கு அனுமதிக்காமல் வேண்டுமென்றே அலைக்கழித்தாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்..

வாக்குவாதம்

வாக்குவாதம்

மேலும் சமீப காலமாக தமிழக அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவித்த நாள் முதல் பெரும்பாலான பேருந்துகளில் பெண்களை ஏற்றாமல் தவிர்த்து செல்வதாக அரசு பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .எனவே இனிமேல் தங்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் வேண்டாம் முதல்வர் அறிவித்தபடி இலவசமாக எங்களை பேருந்தில் அழைத்துச் செல்ல வேண்டாம் இனிமேல் காசு வாங்கிக் கொண்டு டிக்கெட் கொடுங்கள் இலவச பயணம் வேண்டாம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் .

 அதிமுக திட்டம்?

அதிமுக திட்டம்?

முதலில் ஓரிரு பெண்கள் மட்டும் நடத்தினரிடம் வாக்குவாதம் செய்த நிலையில் நேரம் செல்ல செல்ல அப்ப பேருந்தில் இருந்த ஒட்டுமொத்த பெண்களும் இலவச பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்துனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது. அதே நேரத்தில் இவர்களும் அதிமுகவினர் ஏற்பாடு செய்த பெண்கள் தான் எனவும், வேண்டுமென்றே இதுபோன்ற வீடியோக்கள் எடுக்கப்பட்டு சமூக வலைதலங்களில் பரப்பப்படுவதாக திமுகவினர் கூறுகின்றனர்.

English summary
While the old woman told the conductor of the Coimbatore government bus not to give me a ticket for free travel that went viral on social media, a video like this taken in Erode is again going viral on social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X