டெய்லிஹன்ட்டின் புதுமுயற்சிக்கு விருது... ‛வைப்செக்’ வீடியோவுக்கு வரவேற்பு.. Goafest 2022ல் பதக்கம்
டெல்லி: டெய்லிஹன்ட் மற்றும் ரெட் எப்எம் இணைந்து பேச்சு, செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு வழங்கும் 'வைப்செக்' நிகழ்ச்சி Goafest 2022ல் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளது.
கோவாவில் மே 5 முதல் மே 7 வரை Goafest நடந்தது. இணையதளம், செயலி, சமூக வலைதளம் வழியாக சந்தைப்படுத்துதலில் புதுமுறையை கையாண்டவர்களுக்கு பாராட்டு வழங்கப்பட்டது.
‛தி அட்வர்டைசிங் கிளப்' ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

வெண்கல பதக்கம்
இந்நிலையில் டெய்லிஹன்ட், ரெட் எப்எம், ஆகியவை இணைந்து ‛வைப்செக்' என்ற வகையில் செய்திகளை வீடியோவாக வெளியிடுகிறது. இதற்கு விழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு வெண்கல பதக்கம் வழங்கப்பட்டது. வைப்செக் மூலம் பேச்சு, செவித்திறன் குறைபாடு உள்ளவர்களும் அனைத்து விஷயங்களையும் பரிந்து கொள்ள முடியும்.
7 நாளில் 20 மில்லியன் விசிட்டர்
அதாவது ரெட் எப்எம் ஆர்ஜேக்கள் மூலம் டெய்லிஹண்ட் வீடியோவாக செய்தியை வெளியிடுகிறது. செவித்திறன், பேச்சு திறன் குறைந்தவர்களுக்கு புரியும் வகையில் சைகை மொழி பேச்சாளர் பயன்படுத்தப்படுகிறார். இது துவங்கிய 7 நாட்களில் மொத்தம் 20 மில்லியன் விசிட்டர்களை கடந்தது. இதனை பாராட்டி தான் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. இதில் மாற்றுத்திளனாளிகளுக்கான தொழில்முனைவோர் சங்கம் (ஐடிஇஏ) எங்களுடன் கைகோர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பெருமைப்படுகிறோம்
இதுபற்றி எடர்னோ இன்போடெக்(டெய்லிஹன்ட்) நிறுவனத்தின் செயல் இயக்குநர் ராவணன் கூறுகையில், ‛‛டெய்லி ஹண்ட் எப்போதும் புதுமையான விஷயத்தை நடைமுறைப்படுத்த முயற்சி வருகிறது. நாங்கள் வைப் செக் என்பதை அறிமுகப்படுத்தி பேச்சு மற்றும் செவித்திறன் கொண்டவர்களுக்காக துவங்கினோம். இதன்மூலம் நாங்கள் பெருமைப்படுகிறேன். தற்போது இந்த விருது கிடைத்துள்ளது. இதனால் பெருமைப்படுகிறோம். ரெட்எப்எம்முக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்'' என்றார். .
மறுவடிவமைப்பே நோக்கம்
ரெட் எப்எம் இயக்கனர் தேஜோ குமாரி அமுதாலா கூறுகையில், ‛ ரெட் எப்எம் என்பது புதுமைகளை கண்டுபிடிக்கும் வீடு. புதிதாக பலவற்றை கண்டுபிடிக்கும் காலசாரத்தை கொண்டுள்ளது. தற்போது இந்த விருது கிடைத்துள்ளது. தொழில்துறையை மறுவடிவமைப்பு செய்வதை நோக்கமாக கொண்டு நாங்கள் பணியாற்றி வருகிறோம்'' என்றார்.
15 மொழிகளில்...
டெய்லிஹன்ட் என்பது தமிழ், ஆங்கிலம் உள்பட 15 மொழிகளில் செய்திகளை வெளியிட்டு வருகிறது. செல்போன் செயலியாகவும் உள்ளது. தினமும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கொண்டுள்ளது. செயலி வழியாகவும் அதிகமானவர்கள் பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications