ஒரு வயதுதான் ஆகிறது.. உயிருக்கு போராட்டம்.. இதயத்தில் பெரிய பிரச்சினை.. காப்பாற்றுங்கள்

இதயத்தில் ஓட்டை காரணமாக கஷ்டப்பட்டு வரும் சிறுவன் விநாயகமூர்த்திக்கு உங்களால் முடிந்த பண உதவியை செய்திடுங்கள்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இதயத்தில் ஓட்டை காரணமாக கஷ்டப்பட்டு வரும் சிறுவன் விநாயகமூர்த்திக்கு உங்களால் முடிந்த பண உதவியை செய்திடுங்கள்.

விநாயகமூர்த்திக்கு 1 வயதுதான் ஆகிறது. ஆனால் இந்த வயதிலேயே அவன் இதய நோயால் அவதிப்பட்டு வருகிறான். அவன் பிறந்த போது மொத்த குடும்பமும் சந்தோசமாக இருந்தது. ஆனால் அவனை வீட்டிற்கு அழைத்து வந்த பின் எல்லோருக்கும் அதிர்ச்சி காத்து இருந்தது.

தொடக்கத்தில் இருந்தே அவனுக்கு மூச்சு விடுவதில் பிரச்சனை, அடிக்கடி காய்ச்சல் ஏற்பட்டது, விடாமல் கஷ்டத்தில் அழுது கொண்டு இருந்தான். அவனை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சோதித்ததில் அவனுக்கு இதயத்தில் துளை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த மருத்துவமனையில் இருந்த மருத்துவர் டாக்டர் கோபி, குழந்தை விநாயகமூர்த்தியை சோதனை செய்துவிட்டு, அவனை ஏன் இவ்வளவு தாமதமாக மருத்துவமனை கொண்டு வந்தீர்கள் என்று கோபமாக பேசினார். அவனுக்கு செய்ய வேண்டிய அறுவை சிகிச்சை குறித்து விளக்கினார்.

இந்த அறுவை சிகிச்சையை 2 வயதுக்குள் செய்ய வேண்டும். இல்லையென்றால் விநாயகமூர்த்தியின் இதயம் சிகிச்சையை ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை என்று மருத்துவர் கூறிவிட்டார். விநாயகமூர்த்தியின் பெற்றோர் கடவுள் மீது, டாக்டர் கோபி மீதும்தான் நம்பிக்கை வைத்துள்ளனர்.

இதையடுத்து சிகிச்சைக்கு கடன் வாங்கி பணம் ஏற்பாடு செய்து, விநாயகமூர்த்திக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுவிட்டது. சிகிச்சை முடிந்து சில மணி நேரங்கள் ஆன நிலையில், விநாயகமூர்த்தி நலமாக இருக்கிறான். அவனால் இப்போது எழுந்து நடக்க முடியும், மெதுவாக விளையாட முடியும்.

ஆனால் விநாயகமூர்த்திக்கு முழுமையாக குணமாக, அனைத்தும் சரியாக தொடர்ந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். இதற்காக 5 லட்சம் ரூபாய் செலவாகும். விநாயகமூர்த்தி குடும்பம் மிகவும் வறுமையானது. அவர்களிடம் சிகிச்சை செய்ய பணம் இல்லை.

விநாயகமூர்த்தி உயிரை காக்க உடனடியாக மக்கள் பணம் கொடுத்தால்தான் சிகிச்சை மேற்கொள்ள முடியும்.

நீங்கள் விநாயகமூர்த்தி உயிரை காக்க விரும்பினால், இந்த லிங்கை கிளிக் செய்து பணம் கொடுத்து உதவிடுங்கள். நீங்கள் கொடுக்கும் 100, 1000 ரூபாய் என்று ஒவ்வொரு ரூபாயும் கூட இந்த குழந்தையின் உயிரை காத்திடும்.

இந்த செய்தியை உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+