Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அன்று நடுத்தரகுடும்பம், இன்று முதலாளி! 25 லட்சம் மானியம் தர ஸ்டாலின் ரெடி, தொழில் தொடங்க நீங்க ரெடி?

Subscribe to Oneindia Tamil

ஓசூர்: தொழிற்சாலைகளில் தமிழ்நாடுதான் இந்திய அளவில் நம்பர் ஒன். அதேபோல ஏஞ்சல் இன்வெஸ்மெண்ட்டை ஈர்ப்பதிலும் தமிழ்நாடு கடந்த ஆண்டு இந்திய அளவில் முதல் இடத்தினைப் பிடித்துள்ளது. இன்னொருபக்கம்பன்னாட்டு முதலீட்டைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இவை எல்லாம் சரி, ஆனால் உள்ளூரில் வாழும் மக்கள் பிழைக்க என்ன வழி எனப் பலரும் கேள்வி எழுப்பலாம். அதற்காகத்தான் சிறு, குறு முதலீட்டில் தொழில் முனைவோரை உருவாக்கத் தமிழ்நாடு அரசு பல வழிகளில் உதவிகளைச் செய்து வருகிறது.

அப்படி பலன் பெற்றவர் தான் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்தன். இவர் இஞ்சினியரிங் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

கொரோனா காலத்தில் பறிபோன வேலை:

கொரோனா காலத்தில் பறிபோன வேலை:

"ஆரம்பத்தில் ஒரு பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்தேன். கொரோனா ஊரடங்கு காலத்தில் மிகவும் பாதிக்கப்பட்டது கல்வித் துறைதான். பார்த்துக் கொண்டிருந்த வேலையை இழந்து தவித்துக் கொண்டிருந்தோம். ஓசூர் தான் இண்டர்ஸ்டிரியல் நகரம் என்பதால் வேலைத்தேடி இங்கு வந்தேன். என்னைப் போலப் பலரும் வேலைத் தேடி வந்தார்கள். நண்பர்களின் நிறுவனத்தில் கொஞ்சக்காலம் வேலைபார்த்துக் கொண்டிருந்தேன். அப்போதுதான் ஆடோமொபைல் இண்டஸ்ட்ரி பற்றி ஒரு ஐடியா கிடைத்தது. நல்லா படித்திருந்தும் நம்மால் ஒரு சொந்த தொழில் தொடங்க முடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தது.

38 லட்சம் வரை வங்கிக்கடன் 25% மானியம்:

38 லட்சம் வரை வங்கிக்கடன் 25% மானியம்:

நானும் பலரைப் போல நடுத்தர குடும்பத்திலிருந்து வந்தவன் தான். ஆகவே அந்த ஏக்கம் அதிகமாக இருந்தது. ஒரு தொழிலைச் சொந்தமாகத் தொடங்க வேண்டும் என்றால் குறைந்தது 20 அல்லது 30 லட்சம் தேவையாக இருந்தது. அந்தளவுக்கான முதலீடு எங்கள் குடும்பத்தில் இல்லை. அப்போது தான் நண்பர்கள் எம்.எஸ்.எம்.இ.யில் நிறைய சுய தொழிலுக்கான திட்டங்கள் உள்ளது என்றார்கள். அதை பற்றித் தெரிந்து கொள்ள மாவட்ட தொழில் மையத்தை அணுகுங்கள் என்று யோசனை சொன்னார்கள். அப்படியே போய் மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளரைச் சந்தித்தேன். அவர்தான் 'Needs' என்று ஒரு திட்டம் இருப்பதாகச் சொன்னார். அதன்மூலம் 95% வங்கிக்கடன் பெறமுடியும் என்றும் அறிவுரை தந்தார்கள். அதற்கு அரசாங்கம் 25% வரை மானியம் வழங்குகிறது எனவும் சொன்னார்கள்.

ஆகவே அந்தத் திட்டத்தின் படி அதிகாரிகள் எனது விண்ணப்பத்தைப் பரிசீலனைக்கு ஏற்றுக் கொண்டார்கள். இறுதியாக வங்கிக்குப் பரிந்துரைத்தார்கள். எனது தொழிலைத் தொடங்க குறைந்த பட்சமாக 40 லட்ச ரூபாய் தேவைப்பட்டது. அதன்படி 38 லட்சம் ரூபாய் வங்கிக்கடன் கிடைத்துள்ளது. மீதியுள்ள 2 லட்சம் மட்டுமே நான் முதலீடு செய்துள்ளேன்.

 அரவிந்தனை முதலாளி ஆக்கிய தமிழ்நாடுஅரசு:

அரவிந்தனை முதலாளி ஆக்கிய தமிழ்நாடுஅரசு:

இதில் அரசின் மானியமாக எனக்கு 25 லட்சம் வரை கிடைத்துள்ளது. இப்போது ஒரு வருடமாகத் தொழிலை நடத்தி வருகிறேன். ஏறக்குறைய 10 லட்சம் ரூபாய் சம்பாதித்துவிட்டேன். வரும் ஆண்டில் பத்து லட்சம் சம்பாதித்து விடுவேன். இதுவரை கிடைத்த லாபத்தை வைத்து மேற்கொண்டு சில எந்திரங்களை வாங்கி இருக்கிறேன். எனது வளர்ச்சி தமிழ்நாடு அரசாங்கத்தால் கிடைத்தது. அதற்காகத் தமிழ்நாடு அரசுக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி" என்கிறார். இந்த முதல் தலை முறை தொழில் முனைவோர்.

இந்தமாதிரி புதிய தொழிலைத் தொடங்கும் போது வங்கி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு அதிகமாக அலைய வேண்டி இருக்குமே, உங்களது அனுபவம் எப்படி எனக்கேட்டால், "எனது சான்றுகள் அனைத்தையும் சரிபார்த்து ஒரே மாதத்தில் அனுமதி கொடுத்து விட்டார்கள். அதன் பிறகு அதிகாரிகள் தான் என்னைத் தேடித் தேடி வந்தார்கள். கிட்டத்தட்ட 3 மாதங்களில் நான் இந்தத் தொழிற்சாலையைத் தொடங்கி, உற்பத்தியையே செய்ய ஆரம்பித்துவிட்டேன்.

"ஒரு கல்லூரியில் படிக்கிறோம். அடுத்து ஒரு நிறுவனத்திற்கு வேலைக்குச் செல்கிறோம். அவ்வளவுதான். இந்த வழியே பலரும் பயணிப்பதால் நாமும் அதே வழியில் செல்கிறோம். ஆனால் அந்த வழக்கமான வட்டத்தை விட்டு வெளியே வந்து தேடும்போது தான் பல புதிய விஷயங்கள் பிடிபடுகின்றன. ஒரு நடுத்தர குடும்பத்திலிருந்து நான் இன்று இந்தத் தொழிலில் ஒரு முதலாளியாக மாறி இருக்கிறேன் என்பது சாதாரண விஷயம் இல்லை. அதற்கு அரசு உதவி மிகப் பெரியதாக இருந்துள்ளது. அது இல்லை எனில் என்னைப் போன்ற குடும்பத்தினர் இங்கே ஒரு தொழிலையே தொடங்கவே முடியாது." என்கிறார் அரவிந்தன்.

 25 லட்சம் முதல் 75 லட்சம் வரை மானியம்:

25 லட்சம் முதல் 75 லட்சம் வரை மானியம்:

கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மையத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வருகிறார் பிரசன்ன பாலமுருகன். இத்திட்டம் குறித்து அவர் கூறுகையில் "எங்கள் மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக சுய தொழில் தொடங்குவதற்காக நிறைய வாய்ப்புகளை உருவாக்கித்தருகிறோம். NEEDS திட்டத்தில் தொழில் தொடங்குவதற்காகக் குறைந்தது 10 லட்சத்திலிருந்து அதிகபட்சமாக 5 கோடி வரை கடன் உதவி அளித்து வருகிறோம். இதில் தமிழ்நாடு அரசு 25 லட்சம் முதல் 75 லட்சம் வரை மானியமாக வழங்கி வருகிறது.

இதில் தொழில் தொடங்குவதற்கான அடிப்படைக் கல்வித்தகுதி 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். வயது 45-க்குள் இருக்கவேண்டும். மாற்றுத்திறனாளியாகவோ அல்லது எஸ்.சி., எஸ்.டி. வகுப்பைச்சேர்ந்தவராகவோ இருந்தால் கூடுதலாக 10% மானியம் தருகிறோம். மேலும் வாங்கிய கடனை கட்டி முடிக்கும் வரை 3% வட்டி மானியமும் தருகிறோம். இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி, தமிழ்நாடு இளைஞர்கள் சுய தொழில் தொடங்கி சொந்தக்காலில் நிற்கவேண்டும் என்பதே அரசாங்கத்தின் விருப்பம்" என்கிறார்.

குண்டூசி முதல் விமான பாகம் தயாரிப்பு வரை:

குண்டூசி முதல் விமான பாகம் தயாரிப்பு வரை:

இந்த கிருஷ்ணகிரி மாவட்ட பகுதியில் மட்டும் கிட்டத்தட்டச் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் 3 ஆயிரத்திற்கும் மேலாக இயங்கி வருகின்றன. அன்றாடம் நாம் பயன்படுத்தும் குண்டூசி முதல் விமானத்திற்குத் தேவையான உதிரிப்பாகங்கள் வரை இங்கே தயாரிக்கப்பட்டு வருகின்றன. 'நீட்ஸ்' திட்டத்தின் முதல் விதி என்னவென்றால், அதற்கு முன்னால் விண்ணப்பதாரரின் குடும்பத்தினர் யாரும் தொழிற்சாலை வைத்திருக்கக்கூடாது. முதல் தலைமுறையினராக இருக்க வேண்டும் என்பது மட்டும் தான்.

சிறு, குறுதொழில் முனைவோரை உருவாக்கி வரும் இந்தத்திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானுரெட்டி பேசும் போது, "தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின் படி பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். பெரிய தொழிற்சாலைகளுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்காமல், வேலைவாய்ப்பு அற்ற இளைஞர்களின் வாழ்வை உயர்த்தும் வகையில் சிறு, குறு தொழில்களைத் தொடங்க கடன் உதவியை ஏற்படுத்தித் தருகிறோம்.

கடந்த ஒரு ஆண்டுக் காலத்தில் 'நீட்ஸ்' திட்டத்தில் மட்டும் 20 பேர் கடன் பெற்று தொழில் முனைவோராக முன்னேறி இருக்கிறார்கள். அதேபோல் PMEGP திட்டத்தின் மூலம் 76 பேர் பயன்பெற்றுள்ளனர். இந்தப் பயனாளிகள் யாரும் இதற்கு முன்னால் வேலைவாய்ப்பு இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தவர்கள். அவர்கள் இன்று சுயமரியாதையுடன் ஒரு தொழில் முனைவோராக மாறியுள்ளனர்.

இந்த இளைஞர்கள் தங்களின் வாழ்க்கையை மட்டும் முன்னேற்றிக் கொள்ளவில்லை. பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கக்கூடியவராக மாறி இருக்கிறார்கள். அந்த வகையில் பலரும் ஒரு புதிய வாழ்வைப் பெற்றிருக்கிறார்கள். அதற்குத் தமிழ்நாடு அரசு முதல் காரணமாக இருந்துள்ளது" என்கிறார் மாவட்டஆட்சியர்.

ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் தளி பிரகாஷ் பேசும்போது, "முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் தான் முதல் சிப்காட் மற்றும் இரண்டாம் சிப்காட் கொண்டுவரப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் பல்வேறு தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. இன்றைக்கு ஓசூர் சட்டமன்றத் தொகுதி என்பது ஒருதொழிற்சாலைகள் நிறைந்த நகரமாக விளங்குகிறது. அதற்கு முதலில் விதை போட்டவர் மு.கருணாநிதிதான்.

ஸ்டாலின் ஏற்படுத்திய ஒன்நோட் பாலிசி:

ஸ்டாலின் ஏற்படுத்திய ஒன்நோட் பாலிசி:

அவரைத் தொடர்ந்து இன்று அதே பாதையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல தொழிற்சாலைகளை ஓசூர் நோக்கிக் கொண்டு வர ஏற்பாடுகளைச் செய்து வருகிறார். இன்றைக்கு இந்த ஊரில் விமானம் தயாரிப்புக்கான தொழிற்சாலை முதல் உணவு சம்பந்தமான தொழிற்சாலை வரை பல இயங்கி வருகின்றன. ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் தான் 'ஒன்நோட்பாலிசி' கொண்டுவரப்பட்டுள்ளது.

எனவே எந்தவித தாமதமும் இல்லாமல் தொழில்களை உடனடியாகத் தொடங்க, அந்த பாசிலி வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு அதன்படி வேலையைத் தொடங்க காலம் பிடிக்கும். ஆகவே தான் இந்தச் சிறு, குறு நிறுவனங்களை ஊக்குவிக்கும்படி நிறைய மானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் கொரோனா காலத்திற்குப் பின்னால் விதிமுறைகள் மிக மிக எளிமையாக்கப்பட்டுள்ளன" என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+