பெண் எம்எல்ஏ பெயரில் வந்த பார்சல்.. திறந்து பார்த்தால் வெடித்து சிதறியது.. ஹூப்ளியில் ஷாக்
ஹூப்ளி: கர்நாடக மாநில பெண் எம்எல்ஏ ஒருவர் பெயரில் வந்த, பாக்ஸை திறந்து பார்த்தபோது அதற்குள் இருந்த வெடிகுண்டு வெடித்து, அந்த நபரின் கை பறி போன சம்பவம் ரயில் நிலையத்தில் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்டம் கரூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அஞ்சலி நிம்பால்க்கர். இவரது கணவர் ஹேமந்த் நிம்பால்க்கர் ஒரு ஐபிஎஸ் அதிகாரி ஆகும். இதே மாவட்டத்தில் அவர் முன்பு காவல்துறைக் கண்காணிப்பாளராகவும் பணியாற்றியவர்.

இந்த நிலையில் ஹூப்ளி ரயில் நிலையத்துக்கு அஞ்சலி நிம்பால்க்கர் பெயரிட்ட ஒரு பாக்ஸ் கூரியரில் வந்துள்ளது. சந்தேகமடைந்த ரிசர்வ் படையை சேர்ந்த வீரர் ஒருவர் அதைத் திறந்து பார்த்தபோது பெரும் சத்தத்தோடு அது வெடித்து சிதறியது.

இதில் திறந்தவரின் கையில் பெரும் காயம் ஏற்பட்டுள்ளது. ரத்தம் வடிந்தது. காயமடைந்தவர் உடனடியாக, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இதனிடையே எம்எல்ஏ அஞ்சலியை தாக்குவதற்கு திட்டமிட்டு இந்த பாக்ஸ் அனுப்பி வைக்கப்பட்டதா என்ற சந்தேகம் காவல்துறையினருக்கு எழுந்துள்ளது.

இதுதொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் ரயில் நிலையத்தில் பெரும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications